இத யாரும் சொல்ல மாட்டாங்க... போலி ஸ்பேர் பார்ட்ஸால் இப்டில்லாம் கூட நடக்குமா? என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

கார்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ்களை (Spare Parts) வாங்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை நம் தலையில் கட்டி விடுவார்கள். கார் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல், தீங்கு இழைக்கும் நோக்கத்துடன் அவை தயாரிக்கப்படுகின்றன. இன்றைய சூழலில், உண்மையான மற்றும் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை வேறுபடுத்தி பார்ப்பது கடினமாக உள்ளது.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அந்த அளவிற்கு உண்மையான ஸ்பேர் பார்ட்ஸ்களும், போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களும் ஒன்று போலவே இருக்கின்றன. போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். எனவே அதன் உண்மை தன்மையை ஒரு முறைக்கு இரு முறை ஆய்வு செய்யாமலேயே வாங்கி விடும் எண்ணம் பலருக்கும் உருவாகி விடுகிறது.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உண்மையான ஸ்பேர் பார்ட்ஸ்கள் அளவிற்கு போலியான ஸ்பேர் பார்ட்ஸ் திறன்மிக்கதாக வேலை செய்யாது. போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால், காருக்கும், அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் நிறைய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த பாதிப்புகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பாதுகாப்பு அச்சுறுத்தல்

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை பயன்படுத்தினால் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்படலாம். நீங்கள் வாங்கும் போலியான பிரேக்குகள் சரியான நேரத்தில் காரை நிறுத்தாமல் போகலாம். அல்லது ஆஃப்டர் மார்க்கெட் அலாய்கள் (Alloys) ஒரு முறை குண்டும், குழியுமான சாலையில் பயணம் செய்தாலே விரிசலடைந்து விடலாம்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அத்துடன் நீங்கள் பயன்படுத்தும் போலியான எலெக்ட்ரிக்கல் ஸ்பேர் பார்ட்ஸ்கள், ஷார்ட் சர்க்யூட்டிற்கு வழிவகுக்கலாம். எனவேதான் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை மிகவும் ஆபத்தானது என கூறுகிறோம். குறைவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கினால், உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

சாலை விபத்துக்கள்

இந்தியாவில் நடைபெறும் 10ல் 2 வாகன விபத்துக்களுக்கு போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள்தான் காரணம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த புள்ளி விபரம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் சரியாக வேலை செய்யாமல் போகும்போது, அதன் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இன்ஜின் செயல்திறன் குறையும்

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் இன்ஜினின் செயல்திறனை குறைத்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக காரின் மாசு உமிழ்வு (Emissions) அதிகரிக்க கூடும். மேலும் சந்தேகத்திற்கிடமான எக்ஸாஸ்ட் அமைப்புகள், அரசு வகுத்துள்ள மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்காமலும் போகலாம். எனவே போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் நம்மை மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

தவறான கணிப்பு

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் குறைவான விலையில் கிடைப்பதால், நீங்கள் பணத்தை மிச்சம் பிடித்து விட்டதாக நினைப்பீர்கள். அது முற்றிலும் தவறு. நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கும் ஒருவருக்கு அதிக செலவுதான் ஏற்படும். ஏனெனில் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை அடிக்கடி ரிப்பேர் செய்யவும், மாற்றவும் வேண்டியிருக்கும்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

போலியான ஒன்றை குறைவான விலைக்கு அடிக்கடி வாங்கி கொண்டிருப்பதை விட, தரமான ஒன்றை ஒரு முறை வாங்குவதுதான் சிறந்தது. எனவே போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் மூலம் பணம் மிச்சமாகி விட்டது என நீங்கள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை அடியோடு மாற்றி கொள்ளுங்கள். போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் வீணாக மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

வாரண்டியில் பாதிப்பு ஏற்படும்

குறிப்பிட்ட காலத்திற்குள், காரை சரி செய்யவோ அல்லது பாகங்களை மாற்றவோ, கார் உற்பத்தி நிறுவனத்தால் அளிக்கப்படும் ஒரு வாக்குறுதிதான் வாரண்டி. ஆனால் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை நீங்கள் பயன்படுத்தினால், வாரண்டியில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஜென்யூன் ஸ்பேர் பார்ட்ஸ்களைதான் நாம் வாங்க வேண்டும் என்பதற்கு இது ஒரு காரணம்.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மோசமான தரம்

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை உருவாக்கும் நிறுவனங்கள் தரத்தில் சமரசம் செய்து கொள்கின்றன. எனவேதான் அவற்றை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடிகிறது. தரம் மிகவும் மோசமாக இருப்பதால், போலியான ஸ்பேர் பார்ஸ்ட்களின் ஆயுட்காலமும் குறைவாக உள்ளது. அவை நீண்ட காலத்திற்கு உழைப்பதில்லை.

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் காரில் என்னென்ன பிரச்னைகள் வரும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

மற்ற வாகனங்களுக்கும் ஆபத்து

போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களால் உங்களுக்கும், உங்கள் காருக்கும் மட்டுமின்றி, உங்களுடன் சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மறந்து விட வேண்டாம். நீங்கள் பயன்படுத்தும் போலியான பிரேக் சரியான நேரத்தில் வேலை செய்யாமல் போனால், உங்கள் கார் மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி விடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why you should avoid fake spare parts
Story first published: Thursday, November 18, 2021, 14:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X