என்ன நடந்தாலும் சரி ஜீன்ஸ் பேண்ட் போட்டு மட்டும் விமானத்துல போயிடாதீங்க... அப்புறம் மானமே போயிடும்...
விமானத்தில் பயணிக்கும் போது எந்த ஆடைகளை அணிந்து வர வேண்டும். ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வருவதால் என்னென்ன பிரச்சனை இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

விமானத்தில் பயணிப்பது என்பது பலருக்கு பெரும் கனவு, பஸ், ரயில், விமானம் இப்படி எந்த விதமான வாகனமாக இருந்தாலும் ஒவ்வொரு வாகன பயணத்திற்கும் ஒவ்வொரு விதமான அனுபவம் இருக்கும். இதே போல ஒவ்வொரு வாகனத்தையும் ஒவ்வொரு விதமான பயணத்திற்குப் பயன்படுத்துவோம்.

குறுகிய தூரப் பயணத்திற்கு பஸ்கள், நீண்ட தூர பயணத்திற்கு ரயில்கள் மிக நீண்ட தூரப் பயணத்திற்கு விமானங்கள், அல்லது விரைவாகப் பயணிக்க வேண்டும் என்றால் விமானங்கள் என நாம் பல விதமான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவோம்.

இப்படியாகப் பயணிக்கும் போது நமக்கு அந்த பயணம் சுகமாக அமைய வேண்டும் என்றால் அதற்குப் பலவிஷயங்களை நாம் முன்னரே திட்டமிட வேண்டும். இதில் முக்கியமானது உடை, நாம் பயணத்தின் போது என்ன உடை அணிந்து பயணிக்கிறோம் என்பதும் நாம் பயண அனுபவத்தைத் தீர்மானிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. நாம் பயணத்திற்கு ஏற்ற உடையை அணியாமல் மாறாக வேறு உடையை அணிந்து பயணித்தால் பயணம் முழுவதும் நாம் அசௌகரியமாக உணருவோம். இதனால் நாம் பயணித்த திருப்பதியே நமக்கு ஏற்படாது.

இப்படியாக நாம் விமானத்தில் பயணிக்கும் போது நமக்கு ஏற்ற ஆடை எது? முக்கியமாக எந்த ஆடையை அணிந்து பயணிக்கக் கூடாது. அப்படிப் பயணித்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும். என்பதைத் தான் பார்க்கப்போகிறோம். முக்கியமாக விமானங்களில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து பயணிக்கும் விஷயம் குறித்துத் தான் அதிகம் விவாதிக்கப்போகிறோம். இன்று பெரும்பாலான மக்கள் ஜீன்ஸ் பேன்ட்டை அதிகம் அணிகின்றனர். சாதாரண நிகழ்வு முதல் முக்கிய நிகழ்வுவரை எந்த நிகழ்வாக இருந்தாலும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து பயணிக்கின்றனர்.

இப்படியாகப் பலர் விமான பயணங்களில் மட்டும் ஜீன்ஸ் பேண்ட்களை தவிர்த்துவிடுவார்கள். இதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் விமான பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யப்போகிறீர்கள் என அர்த்தம். ஒரு விமானம் புறப்படுகிறது என்றால் உள்ளூர் விமானம் என்றால் ஒரு மணி நேரமும், வெளிநாட்டு விமானம் என்றால் 3 மணி நேரத்திற்கும் முன்பாக விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.

அப்பொழுது தான் நமது லக்கேஜ்களுடன் செக்கின் செய்துவிட்டுப் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்திற்குள் ஏற முடியும். கடைசி நேரத்தில் வந்தால் எல்லாம் அரக்கப் பறக்கச் செய்து ஒரு சிறந்த போர்டிங் அனுபவம் இல்லாமல் போகும். போர்டிங்கின் போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் வீட்டிலேயே எல்லாவற்றையும் சரியாக பேக் செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லாமல் போர்டு செய்துவிடலாம்.

ஆனால் பயணத்தின் போது நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பயணத்திற்கு முன் வீட்டிலிருந்து கிளம்பும் போதே அதற்குத் தகுந்த ஆடையை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். அப்பொழுது தான் உங்கள் பயணத்தில் போது எந்த அசௌகரியங்களும் ஏற்படாது. அதே போல விமான பயணத்தின் போது நீங்கள் தப்பித் தவறிக் கூட சில ஆடைகளை அணிந்து கொண்டு பயணிக்கூடாது. இதைப் பற்றி இங்குக் காணலாம்.

பொதுவாக விமான பயணம் என்பது வசதியான இருக்கை கொண்டதாக இருக்காது. முக்கியமாக எக்னாமிக் கிளாஸில் பயணிப்பது என்பது சொகுசு பயணமாக எல்லாம் இருக்காது. ஒரு வரிசையில் 3 சீட்கள் இருக்கும். குறைவான இடத்திற்குள்தான் 3 பயணிகளும் அமர வேண்டும். அதனால் சற்று இடைஞ்சலாகத் தான் இருக்கும். அதே போல காலை நீட்டுவதற்கும் இடம் குறைவாகத் தான் இருக்கும். இதனால் நீங்கள் வசதி குறைவாகவே அமருவீர்கள். அதனால் அப்படியாகப் பயணிக்கும் போது நீங்கள் அணிந்து செல்லும் பேண்ட் மிகவும் முக்கியமான ஒன்று

ஏற்கனவே சற்று இடைஞ்சலான இடத்தில் நாம் அமர்ந்து செல்ல வேண்டும். இதில் ஜீன்ஸ் பேண்ட் அல்லது பெண்கள் போடும் ஸ்கின்னை ஓட்டி இருக்கும் ஜீன்ஸ் பேன்ட்கள் எல்லாம் ஏற்கனவே டைட்டாக இருக்கும். அதை அணிந்து கொண்டு இடைஞ்சலான இடத்தில் அமர்ந்து கொண்டு பயணிப்பது சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தும், இதனால் அதற்குப் பதிலாகச் சாதாரண காட்டன் பேன்ட், அதிக டைட் இல்லாத சற்று லூசாக இருக்கும் பேன்டை அணிந்து பயணிக்கலாம்.

பொதுவாக விமான பயணம் சிலருக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். விமான பயணத்தின் போது ஏர் பிரஷர் காரணமாகச் சிலருக்கு ஜெட் பெல்லி ஏற்படும். இப்படியான பிரச்சனை இருப்பவர்களுக்கு இருக்கமான உடை அணிவது மேலும் அசௌகரியத்தைத் தான் ஏற்படுத்தும். இப்படியாகப் பிரச்சனை இருந்தால் அவர்கள் கட்டாயம் லூசான அடைகளை அணிவது தான் சிறந்தது.

ஸ்கின்னீயான ஆடைகளை அணிவது சிலருக்கு உடலில் ரத்தக் கட்டு ஏற்படக் காரணமாகிவிடும். அதாவது நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் கால் வீங்குவது, போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த ரத்தக் கட்டு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது வெகு சிலருக்கே இருந்தாலும் இதுவும் ஒரு முக்கியமான பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்.

அதே போல விமான பயணத்தின் தவிர்க்க வேண்டியது ஷாட்ஸ் போல மூட்டிக்கு மேல் வரை மட்டும் இருக்கும் ஆடைகள், பொதுவாக விமான சீட்கள் மற்ற பயணிகளும் பயன்படுத்தும் இடம் இதனால் இந்த இடத்தில் நேரடியாக உங்கள் தோல் படும்படியான ஆடைகளை அணிந்து நீங்கள் அமர்ந்தால் அதில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அது தோல் அலர்ஜி அல்லது நோயை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் கால்களை முழுவதுமாக மூடிய ஆடைகளை அணிவது தான் சிறந்தது.


Click it and Unblock the Notifications