இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான 5 முக்கிய காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். எஸ்யூவி கார்களை வாங்கும் முன் இவற்றை கவனத்தில் கொள்வது நல்லது.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

இந்தியாவில் எஸ்யூவி (SUV - Sports Utility Vehicle) ரக கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எஸ்யூவி கார்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. எஸ்யூவி ரக கார்கள் தோற்றத்தில் பெரிதாக இருக்கும். எனவே நிறைய பேர் சௌகரியமாக பயணம் செய்யலாம். அத்துடன் அதிக பொருட்களையும் கொண்டு செல்ல முடியும்.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

நிறைய எஸ்யூவி கார்கள் 4 வீல் டிரைவ் ஆப்ஷனுடன் வருகின்றன. எனவே கையாளுமை சிறப்பாக இருக்கும் என்பதுடன் கரடுமுரடான ஆஃப் ரோடு பயணங்களிலும் எஸ்யூவி கார்கள் அசத்தும். இப்படி எஸ்யூவி கார்களில் ஏராளமான சாதகங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், எஸ்யூவி கார்களில் நிறைய பாதகங்களும் உள்ளன.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

நீங்கள் ஏன் எஸ்யூவி கார்களை வாங்க கூடாது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். எஸ்யூவி கார்களின் குறைபாடுகளை நீங்கள் இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். நடப்பாண்டு ஏராளமான எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அதில் ஒன்றை நீங்கள் வாங்குவதாக இருந்தால், அதற்கு முன் இந்த செய்தியை படித்து விடுவது நல்லது.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

பராமரிப்பு செலவு அதிகம் பாஸ்!

எஸ்யூவி கார்கள் உருவத்தில் பெரியவை என்பதால், அதன் எடை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த அதிகப்படியான எடையை சுமக்க வேண்டியிருக்கும் என்பதால், எஸ்யூவி கார்களின் டயர்கள் விரைவில் தேய்ந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அடிக்கடி புதிய டயர்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

அதேபோல் எஸ்யூவி கார்களை நிறுத்துவதற்கு அதிக உராய்வு தேவைப்படும் என்பதால், பிரேக்குகளும் விரைவாகவே பாதிக்கப்படலாம். எப்படி பார்த்தாலும் எஸ்யூவி கார்களுக்கான பராமரிப்பு செலவு மிகவும் அதிகமாகதான் இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும். எனவே எஸ்யூவி கார்களை நீங்கள் வாங்குவதாக இருந்தால், பராமரிப்பு செலவையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

சிட்டி டிரைவிங்கிற்கு ஏற்றது கிடையாது!

எஸ்யூவி கார்கள் உருவத்தில் பெரிதாக இருப்பது பலருக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் இந்த பெரிய உருவம் காரணமாக ஏராளமான பிரச்னைகள் ஏற்படும் என்பதையும் மறுக்க முடியாது. நீங்கள் போக்குவரத்து நெரிசலில் மிக நீண்ட நேரம் சிக்கி கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது முதல் பிரச்னை.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

இந்த பெரிய காரை பார்க்கிங் செய்வதற்கு இடத்தை கண்டறிவது மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என்பது இரண்டாவது பிரச்னை. நீங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு நகரத்தில் வசிப்பவர் என்றால், அலுவலகம் சென்று வருவது போன்ற தினசரி பயன்பாட்டிற்கு எஸ்யூவி கார்கள் ஏற்றவையாக இருக்காது. ஆனால் நெடுஞ்சாலைகளில் தொலை தூர பயணங்களுக்கு எஸ்யூவி கார்கள் மிகவும் ஏற்றவை.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

பெட்ரோல், டீசலை அதிகமாக குடிக்கும்

எஸ்யூவி கார்கள் உருவத்தில் பெரிதாக இருப்பதால் அதிக எரிபொருளை குடிக்கும். போதாக்குறைக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வேறு அதிகமாக இருப்பதால், உங்கள் எஸ்யூவிக்கு எரிபொருள் நிரப்புவதற்கு நீங்கள் அதிக தொகையை செலவிட வேண்டியதிருக்கும். எனவே அவசியம் இருந்தால் மட்டுமே எஸ்யூவி கார்களை வாங்குவது நல்லது. இல்லாவிட்டால் சிறிய கார்களை பரிசீலனை செய்யலாம்.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

தனியாக பயணிப்பதற்கு எதற்கு எஸ்யூவி?

ஏற்கனவே கூறியபடி எஸ்யூவி கார்களில் நிறைய பேர் பயணம் செய்ய முடியும். இட வசதியும் தாராளமாக இருக்கும். எனவே நீங்கள் சுற்றுலா போன்ற விஷயங்களுக்கு வாடகைக்கு கார் ஓட்டுபவர் என்றால், எஸ்யூவி கார்கள் ஏற்றவையாக இருக்கும். அதேபோல் உங்களது குடும்பம் பெரியது என்றாலும், அடிக்கடி குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்பவர் என்றாலும் எஸ்யூவி கார்கள் ஏற்றவைதான்.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

ஆனால் நீங்கள் தினமும் தனியாக அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருபவர் என்றால், எஸ்யூவி கார்களை வாங்குவதில் அர்த்தமில்லை. பொருட்களும் எதுவும் இல்லாமல், தினமும் எஸ்யூவி காரில் தனியாக பயணம் செய்வதற்கு பதிலாக சிறிய கார்கள் ஏதேனும் ஒன்றில் நீங்கள் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

நம்ம பட்ஜெட்டிற்கு செட் ஆகுமா?

பொதுவாக எஸ்யூவி கார்களின் விலை அதிகமாகவே இருக்கும். ஒரு சில எஸ்யூவி கார்களின் விலை உங்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம். எஸ்யூவி கார்கள் பெரியவை என்பதால், அதன் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதே அதிகப்படியான விலைக்கு காரணம். அத்துடன் எஸ்யூவி கார்களின் ஒரு சில பாகங்களை மாற்றுவதற்கு நீங்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

தேவைகளை உணர்ந்து தேர்வு செய்யுங்கள்!

எஸ்யூவி கார்களில் உள்ள ஒரு சில குறைகளை மட்டும்தான் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம். அதற்காக எஸ்யூவி கார்களை வாங்க கூடாது என்பது அர்த்தம் கிடையாது. எந்த ஒரு விஷயம் என்றாலும் சில நன்மைகளும், சில தீமைகளும் இருக்கவே செய்யும். மற்றபடி எஸ்யூவி கார்கள் பெரிய குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றவை.

இவ்வளவு பிரச்னைகள் மறைந்திருப்பது தெரியுமா? எஸ்யூவி கார்களை ஏன் வாங்க கூடாது என்பதற்கான காரணங்கள்...

அவை மிகவும் விசாலமானவை. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தாலும் எஸ்யூவி கார்கள் ஏற்றவைதான். அத்துடன் அனைத்து விதமான நிலப்பரப்புகளிலும் எஸ்யூவி கார்கள் சிறப்பாக செயலாற்ற கூடியவை. எனவே உங்களது தேவைகளை எஸ்யூவி கார்கள்தான் பூர்த்தி செய்யும் என்றால், தாராளமாக வாங்கலாம். ஆனால் காரை வாங்கும் முன் மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why You Should Not Buy An SUV - 5 Important Reasons. Read in Tamil
Story first published: Saturday, January 2, 2021, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X