எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

குடிபோதையில் வாகன ஓட்டி ஒருவர் செய்த காரியத்தின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு காவல் துறையினர் வித்தியாசமான வழி ஒன்றை கண்டறிந்துள்ளனர். குடிபோதையில் ஏன் வாகனம் ஓட்டக்கூடாது? என்பதை விளக்கும் வகையில், விழிப்புணர்வு வீடியோ ஒன்றை காவல் துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சைபராபாத் போக்குவரத்து காவல் துறையினரின் யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் குடிபோதையில் பயணம் செய்வதை இந்த வீடியோவில் நம்மால் தெளிவாக காண முடிகிறது. இது அவருடைய முதலாவது தவறு. இதுதவிர அவர் ஹெல்மெட் வேறு அணியவில்லை. அதற்கு பதிலாக ஹெல்மெட்டை ரியர் வியூ மிரரில் மாட்டியிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து விட்டார்.

எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

அப்போது அவருக்கு ஒருவர் உதவி செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன்பின் எழுந்த அந்த நபர் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். ஆனால் இம்முறையும் அவர் ஹெல்மெட் அணியவில்லை. தொடர்ந்து ரியர் வியூ மிரரிலேயே ஹெல்மெட் தொங்கி கொண்டிருந்தது. அத்துடன் அவர் தாறுமாறாக வாகனம் ஓட்டினார்.

எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

இதன் காரணமாக அவருக்கு பின்னால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர் தாறுமாறாக லேன் மாறியதால், அவரை ஓவர்டேக் செய்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் பயந்தனர். எப்படியோ தடுமாறி தடுமாறி அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் அவரது அதிர்ஷ்டம் முடிவுக்கு வந்தது.

எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

அவருக்கு முன்னால் வந்த ஒரு வாகனத்தில் மோதி அவர் கீழே விழுந்தார். பொது நலன் கருதி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காவல் துறையினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் அபாயத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் உயிர்கள் பலியாகின்றன. இதற்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் முக்கியமான காரணமாக உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களால், எந்த தவறும் செய்யாத மற்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கூட சில சமயங்களில் பாதிக்கப்படுகின்றனர்.

எல்லாம் சேட்டை... மது பிரியர் செய்த உச்சகட்ட காமெடி... வீடியோவை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

எனவே எக்காரணம் கொண்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள். இந்த வாகன ஓட்டியிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய மற்றொரு பாடம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதுதான். ஒரு சிலர் ஹெல்மெட்டை பெட்ரோல் டேங்க்கின் மீது வைத்து கொண்டும், ரியர் வியூ மிரரில் மாட்டி கொண்டும் பயணிக்கின்றனர்.

இது விபத்திற்கு வழிவகுக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அத்துடன் ஹெல்மெட் அணியாத சமயத்தில் சாலை விபத்து நேர்ந்தால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சிறிய அலட்சியம் பெரும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து, இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why You Should Not Drink & Drive: WATCH Viral Video Here
Story first published: Monday, July 19, 2021, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X