இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

வாரத்திற்கு ஒரு முறையாவது காரை கழுவி சுத்தம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

சரியான நேரத்தில் ஆயில் மாற்றுவது, முறையாக சர்வீஸ் செய்வது ஆகியவற்றின் மூலமாக நமது கார் நல்ல கண்டிஷனில் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அது உண்மைதான். எந்த சந்தேகமும் இல்லை. இதனுடன் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது காரை கழுவி சுத்தம் செய்தால், உங்களுக்கு இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

எனினும் இதனை பலர் செய்வதில்லை. சேறும், சகதியுமான பகுதியில் பயணம் செய்து விட்டு வந்தாலோ அல்லது எங்கேயாவது செய்ய வேண்டியது இருந்தாலோதான் ஒரு சிலர் காரை கழுவுகின்றனர். ஆனால் வாரத்திற்கு ஒரு முறையாவது காரை கழுவ வேண்டும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது தெரிந்தால், இனி ஞாயிற்று கிழமை ஆனால் நீங்கள் காரை கழுவி விடுவீர்கள்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

காரை அடிக்கடி கழுவுவதால், வெளிப்புற தோற்றம் நன்றாக இருக்கும் என்று மட்டும்தான் பலரும் நினைத்து கொண்டுள்ளனர். இந்த எண்ணம் தவறானது. வாரத்திற்கு ஒரு முறை காரை கழுவுவதால், நல்ல தோற்றம் என்பதை தாண்டி, இன்னும் ஏராளமான நன்மைகளை நீங்கள் பெறலாம். அவை என்னென்ன? என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

மைலேஜ் அதிகரிக்கும்

அடிக்கடி காரை கழுவினால், மைலேஜ் அதிகரிக்குமா? என நீங்கள் கேலி செய்யலாம். ஆனால் இது முற்றிலும் உண்மை. காரை அடிக்கடி கழுவினால், நிச்சயமாக மைலேஜ் அதிகரிக்கும். உங்கள் காரின் மீது அடுக்கு அடுக்குகளாக படிந்திருக்கும் அழுக்குகள், காரின் இழுவையை அதிகரிக்கும். இதன் காரணமாக கார் நகர்வதற்கு அதிக எரிபொருள் செலவாகும்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

ஆனால் கார் சுத்தமாக இருந்தால் இந்த பிரச்னையே ஏற்படாது. அழுக்கு படிந்த காரை விட சுத்தமான கார் அதிக மைலேஜை வழங்கும் என்பது பல்வேறு சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கார் முழுவதையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் 10 சதவீதம் வரை மைலேஜை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

சுத்தமான கார்தான் பாதுகாப்பான கார்

காரை வாரத்திற்கு ஒரு முறை கழுவுவதால், விண்டோக்கள் மற்றும் விண்டுஷீல்டு சுத்தமாகும். விண்டுஷீல்டு சுத்தமாக இருந்தால், பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும். விண்டுஷீல்டு மீது அழுக்கு படிந்து இருந்தாலோ அல்லது பறவையின் எச்சம் விழுந்திருந்தாலோ சாலையை சரியாக பார்க்க முடியாது. குறிப்பாக இரவு நேரங்களிலும், மோசமான வானிலை நிலவும் சமயங்களிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

நீங்கள் காரை வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய தவறினால், விண்டுஷீல்டு உள்ளிட்ட இடங்களில் அழுக்கு படிந்து விடும். பிறகு பார்த்து கொள்ளலாம் என சுத்தம் செய்யும் பணியை தள்ளிப்போட்டு கொண்டே இருப்பது தவறானது. இது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, இனிமேலாவது வாரத்திற்கு ஒரு முறை காரை சுத்தம் செய்யுங்கள்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

மற்ற பிரச்னைகளை கண்டறியலாம்

நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை காரை கழுவினால், காரில் ஏதேனும் பிரச்னைகள் வரப்போகிறதா? என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது நீங்கள் காரை கழுவும்போது, காரில் டெண்ட் இருந்தாலோ அல்லது டெயில் லைட்களில் விரிசல் இருந்தாலோ கண்டுபிடித்து விட முடியும். ஒரு சில பிரச்னைகளை கவனிக்காமல் விட்டு விட்டால், சரி செய்வதற்கு அதிக செலவு ஆகும்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

ஆனால் வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் காரை கழுவுவதன் மூலமாக அவற்றை கண்டுபிடித்து சரி செய்து விட முடியும். இதனால் உங்கள் பணம் மிச்சமாகும். ஒருவேளை உங்கள் காரை வேறு யாராவது கழுவினாலும் கூட, கார் சுத்தமாக இருப்பதால், ஒரு சில பிரச்னைகளை நீங்கள் எளிதாக கண்டறிந்து விட முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

ரீசேல் வேல்யூ உயரும்

சுத்தமான காரில் நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கு கௌரவமாக இருக்கும். அழுக்கு படிந்த காரை விட சுத்தமான கார் உங்களுக்கு நல்ல மனநிலையை கொடுக்கும். அத்துடன் காரின் மறு விற்பனை மதிப்பு உயர்வதற்கும் இது முக்கியமானதொரு காரணமாக இருக்கும். காரின் மறு விற்பனை மதிப்பை உயர்த்துவதற்கான எளிய வழிகளில், காரை சுத்தமாக வைத்திருப்பதும் ஒன்று.

இந்த விஷயத்தை யாருமே சொன்னதில்லையே... வாரத்துக்கு ஒரு தடவை காரை கழுவினால் மைலேஜ் அதிகமாகும்! எப்படி தெரியுமா?

மன ஆரோக்கியம் மட்டுமா? உடல் ஆரோக்கியமும்தான்...

நீங்கள் காருக்கு உள்ளே நிறைய நேரத்தை செலவிடுவீர்கள். எனவே கார் சுத்தமாக இருந்தால் உங்கள் மனம் நன்றாக இருக்கும். வீடு சுத்தமாக இருந்தால்தான் ஒரு சிலர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். காருக்கும் கூட அது பொருந்தும். இதேபோல் கார் தூய்மையாக இருப்பது உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது. காரின் இன்டீரியர் அசுத்தமாக இருந்தால், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why You Should Wash Your Car Regularly: Important Benefits. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X