வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

காரில் என்னென்ன பிரச்னைகள் இருந்தால், ஏர்பேக் வேலை செய்யாது? என்பதை இந்த செய்தியில் விரிவாக வழங்கியுள்ளோம்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

உங்கள் காரில் இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று ஏர்பேக். காரின் விலையை பொறுத்து வெவ்வேறு எண்ணிக்கையில் ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. கார் விபத்தில் சிக்கினால், ஏர்பேக்குகள் விரிவடைந்து, உங்களையும், உங்களுடன் பயணிக்கும் மற்றவர்களின் உயிரையும் பாதுகாக்கும்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

விபத்தின்போது உங்கள் காரில் உள்ள ஏதேனும் ஒரு ஏர்பேக் விரிவடைந்தாலும், அவற்றை நீங்கள் மாற்ற வேண்டும். அத்துடன் சென்சார்களையும் Reset செய்ய வேண்டும். ஆனால் கார் விபத்தில் சிக்கவே இல்லை எனும்போது, ஏர்பேக்குகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதனை எப்படி கண்டறிவது? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இதனை உங்கள் காரே உங்களிடம் சொல்லி விடும். ஏர்பேக்குகளில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உங்கள் காரின் டேஷ்போர்டில் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு ( Airbag Warning Light) ஒளிரும். இந்த விளக்கு எரியும்பட்சத்தில், ஏர்பேக்குகளில் ஏதோ பிரச்னை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இந்த விளக்கு எரிகிறது என்றால், உங்கள் காரின் ஏர்பேக்குகள் செயலிழந்து விட்டன என்று அர்த்தம். எனவே நீங்கள் விபத்தில் சிக்கினால், ஏர்பேக்குகள் சரியாக விரிவடையாது. இதன் காரணமாக உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். எனவே இந்த விளக்கு எரியும்பட்சத்தில், நீங்கள் உடனடியாக பிரச்னையை சரி செய்ய வேண்டும்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இது மிக முக்கியமான பாதுகாப்பு பிரச்னை என்பதால், காலத்தை கடத்தாமல் பிரச்னையை வெகு விரைவில் சரி செய்வது அவசியம். சில சமயங்களில் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு தற்செயலாகவே 'On' ஆகிவிடும். அந்த சமயங்களில் அதனை Reset செய்தால் மட்டும் போதும். ஆனால் இன்னும் சில சமயங்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரியும்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அந்த சமயங்களில் என்ன பிரச்னை? என்பதை கண்டறிந்து அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். எனவே என்னென்ன காரணங்களால் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரியும்? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் பிரச்னையை சரி செய்வதற்கு, உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

சென்சார் பிரச்னை

ஏர்பேக்குகள் இயங்குவதை சென்சார்கள் உறுதி செய்கின்றன. நிறைய சென்சார்கள் ஒருங்கிணைந்து வேலை செய்வதன் மூலமே, விபத்து நிகழும்போது ஏர்பேக்குகள் விரிவடைகின்றன. இதில், ஏதேனும் ஒரு சென்சாரில் பிரச்னை என்றாலும் கூட, ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரிய தொடங்கி விடும். டேஷ்போர்டில் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரிவதற்கு இது பொதுவான காரணங்களில் ஒன்று.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

சீட் பெல்ட்

சீட் பெல்ட்டை நீங்கள் சரியாக அணியவில்லை என்றாலும், டேஷ்போர்டில் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரிய தொடங்கும். நீங்கள் சீட் பெல்ட்டை அணிந்த பிறகும் கூட, ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரிந்து கொண்டே இருந்தால், Buckle-ல் பிரச்னை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் சீட் பெல்ட்டில் உள்ள சென்சார்களிலும் பிரச்னை இருக்கலாம். இந்த சென்சார், ஏர்பேக்குடன் இணைக்கப்பட்டிருக்கும்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

சிறிய மோதல்

பார்க்கிங் செய்யும்போதோ அல்லது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலோ நமது கார் ஏதேனும் ஒன்றின் மீது லேசாக மோதி விடும். எவ்வளவு எச்சரிக்கையுடன் நீங்கள் காரை ஓட்டினாலும், இதுபோன்ற சிறிய விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்த சமயங்களில் ஏர்பேக் விரிவடையாது.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஆனால் மோதல் நடைபெற்றுள்ளது என்பதை உங்கள் காரில் இருக்கும் சென்சார்கள் கண்டறிந்து விடும். அந்த அளவிற்கு சென்சார்கள் உணர்திறன் மிக்கதாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளிலும் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரிய தொடங்கி விடும். இவ்வாறு நடந்தால் நீங்கள் சென்சார்களை Reset செய்து கொள்ளலாம்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

வயர் சேதம்

இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டிருக்கும் வயர்கள் சேதம் அடைந்தாலும், உங்கள் காரின் டேஷ்போர்டில் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரிய தொடங்கி விடும். சில சமயங்களில் ஓட்டுனரோ அல்லது பயணிகளோ இருக்கைக்கு அடியில் ஏதேனும் பொருட்களை போட்டு விடுகின்றனர். இது இருக்கைக்கு அடியில் இருக்கும் வயர்களை சேதப்படுத்தி விடும். எனவே கவனமாக செயல்படுங்கள்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

பேக்-அப் பேட்டரி பிரச்னை

நிறைய கார்களில் பேக்-அப் பேட்டரி வழங்கப்பட்டிருக்கும். ஏர்பேக் போன்ற Electronic Functions-களுக்காக அவை வழங்கப்படுகின்றன. இந்த பேக்-அப் பேட்டரி வறண்டு போனாலும், டேஷ்போர்டில் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு எரிய தொடங்கி விடும். பேட்டரியை நீங்கள் ரீசார்ஜ் செய்து விட்டால், இந்த ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு அணைந்து விடும்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஒரு சில சமயங்களில் பேட்டரியை ரீசார்ஜ் செய்த பிறகும் கூட, ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு தொடர்ச்சியாக எரிந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு அவ்வாறு நடந்தால், பேக்-அப் பேட்டரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சென்சார்களையும் Reset செய்ய வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

பொதுவாக உங்கள் காரை நீங்கள் 'On' செய்யும்போதெல்லாம், டேஷ்போர்டில் உள்ள அனைத்து எச்சரிக்கை விளக்குகளும் தற்காலிகமாக ஒளிரும். அதாவது குறுகிய நேரத்திற்கு எரியும். இது வழக்கமானதுதான். இது உங்கள் கார் தனது சிஸ்டம்களை தனக்கு தானே சுய பரிசோதனை செய்து கொள்வதை போன்றது.

வார்னிங் லைட் எரியும்... காரில் இந்த 5 பிரச்னைகள் இருந்தா ஏர்பேக் வேலை செய்யாது... இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

ஆனால் ஏர்பேக் எச்சரிக்கை விளக்கு போன்ற ஏதேனும் எச்சரிக்கை விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தால், காரில் பிரச்னை உள்ளது என அர்த்தம். இத்தயை சூழல் உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக என்ன பிரச்னை? என்பதை பார்த்து, அதனை சரி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why your car s airbag warning light is on 5 important reasons
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X