உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

காரின் ஸ்டியரிங் வீலில் நடுக்கம் ஏற்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். காரில் ஏதோ தவறாக நடந்து கொண்டுள்ளது என்பதை காட்டும் அறிகுறியாகவும் இதனை பார்க்கலாம். அத்துடன் ஸ்டியரிங் வீலில் நடுக்கம் ஏற்படும்போது காரை ஓட்டினால், நீங்கள் தேவையில்லாத அச்சத்துடனே பயணம் செய்ய வேண்டியதாக இருக்கும்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

எனவே ஸ்டியரிங் வீலில் நடுக்கம் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், நிலைமை மோசமாவதற்கு முன் உடனே அதனை சரி செய்து விட வேண்டும். காரின் ஸ்டியரிங் வீலில் நடுக்கம் ஏற்படுவற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், ஒரு சில காரணங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் விரிவாக கூறியுள்ளோம்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

டயர் அலைண்மெண்ட்

உங்கள் கார் டயர்களின் அலைண்மெண்ட் சரியாக இல்லையென்றால், ஸ்டியரிங் வீலில் நடுக்கம் ஏற்படலாம். ஸ்டியரிங் வீல் ஷேக் ஆவதற்கு இதுவே முக்கியான காரணம். ஆனால் டயர்களின் அலைமெண்ட் சரியாக இல்லாத காரணத்தால், குறைவான வேகத்தில் ஸ்டியரிங் வீலில் நடுக்கம் ஏற்படாது. அதற்கு மாறாக அதிவேகத்தில் செல்லும்போதுதான் ஸ்டியரிங் வீல் ஷேக் ஆகும்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

உதாரணத்திற்கு மணிக்கு 85 கிலோ மீட்டர் அல்லது அதற்கும் மேலான வேகத்தில் நீங்கள் பயணிக்கும்போது, ஸ்டியரிங் வீலில் நடுக்கம் ஏற்படலாம். இந்த பிரச்னையை நீங்கள் சந்திக்க நேரிட்டால், அனைத்து டயர்களின் அலைண்மெண்ட்டும் சரியாக உள்ளதா? என்பதை பாருங்கள். சரியாக இருந்தால், டயர்களில் உள்ள த்ரெட்டை பரிசோதிக்க வேண்டும்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

இதில் பெரிய அளவில் பிரச்னைகள் இருந்தால் டயர்களை மாற்றி விடுவது நல்லது. இதன் மூலம் உங்கள் கார் ஸ்மூத்-ஆகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கும். ஒருவேளை டயர்கள் சரியாக இருந்து, இன்னமும் பிரச்னை தொடர்கிறது என்றால், மற்றொரு விஷயம் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது விபத்து போன்ற சம்பவங்களில் ஆக்ஸில் சேதமடைந்திருக்கலாம்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

டயர்களும், ஸ்டியரிங் வீலும் சரியாக தொடர்பு கொள்வதை இது தடுத்து விடும். ஸ்டியரிங் வீலில் திடீரென ஜெர்க் ஏற்பட்டால், இந்த பிரச்னை காரணமாக இருக்கலாம். இதனை மெக்கானிக் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால், எப்போது பிரச்னை ஏற்படுகிறது? என்பதை கவனமான குறிப்பெடுத்து கொண்டு அவரிடம் தெரிவியுங்கள்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

பிரேக் ரோட்டர்

அதுவே நீங்கள் பிரேக் பிடிக்கும்போது ஸ்டியரிங் வீல் அதிகமாக நடுங்குகிறது என்றால், பிரேக் ரோட்டர்களில் பிரச்னை இருக்கலாம். இன்னும் சரியாக சொல்லப்போனால் பிரேக் ரோட்டர்கள் தங்களுடைய வடிவத்தை இழந்து பழுதாகி வருகின்றன என புரிந்து கொள்ளலாம். இந்த பிரச்னை ஏற்பட்டால், பிரேக் பெடலில் கால் வைக்கும்போதெல்லாம், நீங்கள் அதிர்வுகளை உணரலாம்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

ஒரு வாகனத்திற்கு பிரேக் மிகவும் முக்கியமான பாகம் என்பதால், பிரச்னையை உடனடியாக சரி செய்வது மிகவும் அவசியம். நீங்கள் புதிய பிரேக்கை பொருத்தியிருந்தாலும் கூட, அதிர்வுகள் ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்னை ஆகும். ரோட்டர்கள் சரியாக பொருத்தப்படாத காரணத்தால் கூட இந்த பிரச்னை ஏற்படலாம்.

உங்கள் காரின் ஸ்டியரிங் வீல் ஏன் ஷேக் ஆகுது தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ காரணம் இருப்பது தெரியாம போச்சே...

இந்த பிரச்னை ஏற்பட்டால் வாகனத்தை உடனடியாக மெக்கானிக் ஷாப்பிற்கு எடுத்து செல்லுங்கள். பிரேக் ரோட்டார்களை மாற்றியே ஆக வேண்டுமா? அல்லது அட்ஜெஸ்ட் செய்தால் மட்டும் போதுமா? என்பதை மெக்கானிக் ஷாப்பில் முடிவெடுத்து கொள்ளலாம். எனினும் பிரச்னை ஏற்பட்டவுடன் வாகனத்தை உடனடியாக மெக்கானிக் ஷாப்பிற்கு கொண்டு செல்வது அவசியம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Your Car's Steering Wheel Is Shaking: Important Reasons. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X