மிதிவண்டியில் இழுத்து செல்வதற்கான சூப்பரான குட்டி கேம்பர்: டென்மார்க் நிறுவனம் அறிமுகம்

Written By:

கார், வேன் போன்றவற்றில் இழுத்து செல்லும் வகையில், நடமாடும் இல்லங்கள் சந்தையில் நிறையவே விற்பனையில் இருக்கின்றன. இந்த நிலையில், சைக்கிளில் வைத்து இழுத்து செல்வதற்கான புதிய நடமாடும் கூடாரம் ஒன்றை டென்மார்க் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய நடமாடும் கூடாரம் பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

இலகு எடை

இலகு எடை

வெறும் 45 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கேம்பர், சைக்கிளில் பொருத்தி எளிதாக இழுத்துச் செல்ல முடியும்.

குடும்பத்திற்கு...

குடும்பத்திற்கு...

இதில், இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை தங்க முடியும். இது மடக்கி விரிக்கும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பார்ட்டி நடத்துவதற்கான ஆக்சஸெரீகளையும் கொண்டிருக்கிறது.

ஒரு சில நொடிகளில்...

ஒரு சில நொடிகளில்...

இந்த கூடாரத்தை ஒரு சில வினாடிகளில் சைக்கிளுடன் பொருத்திவிட முடியும். அதேபோன்று, இதனை கழற்றி, மடக்கி வைப்பதும் எளிது.

இடவசதி

இடவசதி

இந்த கூடாரத்தில் 297 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி உள்ளது. எனவே, நண்பர்களுடன் வார இறுதியில் குறிப்பிட்ட இடத்தில் பார்ட்டி நடத்துவதற்கு ஏதுவான வசதிகளை கொண்டிருக்கிறது.

நிறுத்துவதற்கான வசதி

நிறுத்துவதற்கான வசதி

இந்த கேம்பர் 2 சக்கரங்களை கொண்டது. இந்த கேம்பரை நிறுத்துவதற்காக நான்கு சிறிய தாங்கிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை

விலை

2,250 டாலர் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கூடுதலாக 350 டாலர்களை கொடுத்தால், சோலார் மின் உற்பத்தி வசதி கொடுக்கப்படுகிறது. இதன்மூலம், கேம்பரின் மின் விளக்குகள், சார்ஜிங் அவுட்லெட்டுக்கு மின்சாரத்தை பெற முடியும்.

 கூடுதல் ஆக்சஸெரீகள்

கூடுதல் ஆக்சஸெரீகள்

இந்த கேம்பருக்கு கூடுதலாக பல ஆக்சஸெரீகள் வழங்கப்படுகின்றன. கிச்சன் செட், மடக்கி விரிக்கும் நாற்காலிகள், தலையணைகள், மெத்தை போன்றவை உண்டு.

விற்பனை

விற்பனை

டென்மார்க், ஸ்வீடன், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விற்பனைக்கு விடப்பட்டிருக்கிறது. தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் டெலிவிரி துவங்குகிறது.

 குறைபாடுகள்

குறைபாடுகள்

வீட்டிலிருந்து அருகாமையிலுள்ள இடங்களுக்கு ட்ரிப் செல்ல விரும்புபவர்களுக்கு இந்த கூடாரம் ஏற்றதாக இருக்கும். ஏனெனில், எடை குறைவாக இருப்பதால், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, எதிரே வரும் வாகனங்களால் சமநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோன்று, நிறுத்துமிடமும் காற்றின் வேகம் குறைவாக இருத்தல் அவசியம். இல்லையெனில், கவிழும் அபாய் உண்டு.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Wide Path Campers are not only mini RV's, but a mobile house-party easily deployed in urban, suburban, and natural spaces. Wide Path Campers are durable, collapsible, lightweight, and surprisingly spacious. The camper’s unique shape and hardshell exterior provide a cozy secure feeling inside and a safe place to store your belongings.
Story first published: Tuesday, June 16, 2015, 14:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark