ஒரு குழந்தை ஆனதுக்கு பின்னரும் இவ்ளோ அன்பா!.. கணவனுக்கு வேற லெவல் காரை பரிசளித்த இன்ஸ்டா பிரபலம்!

இந்த மாதிரி மனைவி அமைவதெல்லாம் வரம்ங்க.. என சொல்லும் அளவிற்கு ஓர் மனைவி, தன் கணவனிடம் நடந்திருக்கின்றார். கணவனின் மனசு கஷ்டப்படாமல் சந்தோஷமாக வச்சுக்கிறதே பெரிய விஷயமாக ஆண்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த பெண்ணோ அன்புடன் சேர்த்து தன்னுடைய கணவனின் நீண்ட நாள் கனவு காரையும் பரிசாக தந்திருக்கின்றார். இன்ஸ்டாவில் பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜோடி அர்பிதா மற்றும் அபிஷேக் ஆவர். அபிஷேக்கிற்கே அர்பிதா விலை உயர்ந்த காரை பரிசாக தந்திருக்கின்றார்.

மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி (Mahindra Thar Roxx SUV) காரையே அவர் பரிசாக தந்திருக்கின்றார். அபிஷேக்கின் பிறந்த நாளை முன்னிட்டே இந்த காரை அவர் பரிசாக வழங்கியுள்ளார். இந்தியாவில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா தார் ராக்ஸ் இருக்கின்றது.

Wife surprises husband with mahindra thar roxx

தார் எஸ்யூவி-யைக் காட்டிலும் சற்றே பெரிய உருவம் கொண்ட மற்றும் ஐந்து டோர்களைக் கொண்ட ஓர் வெர்ஷனே தார் ராக்ஸ் ஆகும். இந்த பெரிய உருவம் கொண்ட காரையே திறந்தவெளியில் ஓர் பெரிய கிஃப்ட் பாக்ஸ் போன்ற பெட்டிக்குள் வைத்து அவர் பரிசாக தந்திருக்கின்றார்.

இந்த காரை டெலிவரி பெற்ற பின்னர் இந்து முறைப்படி பூஜை அவர்கள் அந்த காரை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். குறிப்பாக, அவர்களின் குழந்தையின் பாதத்தின் அச்சை காரில் வைத்து எடுத்துச் சென்றது வேற லெவல் சென்டிமென்ட் ஆகும். வீடியோவை வைத்து பார்க்கையில் அவர்கள் வாங்கி இருப்பது தார் ராக்ஸ் கார் மாடலின் ஏஎக்ஸ்7எல் வேரியண்ட் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வேரியண்ட் ஆகும். இதன் விலை ரூ. 19.49 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது. எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில்லைட், 18 அங்குல ஸ்டீல் வீல், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவருக்கான இருக்கை, பின் பக்கத்திற்குமான ஏசி துவாரங்கள், யுஎஸ்பி சி டைப் சார்ஜிங் போர்ட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமல்ல பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது.

அந்தவகையில், 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஏபிஎஸ், பிரேக் லாக்கிங் வசதி மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சம் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டு உள்ளன. எஞ்சினைப் பொருத்த வரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் எம்ஃபால்கன் மற்றும் 2.2 லிட்டர் 4 சிலிண்டர் எம்ஹாவ்க் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றாக தார் ராக்ஸ் உள்ளது. இந்த காரை ஆச்சரிய பரிசாக அர்பிதா அவருடைய கணவருக்கு வழங்கி இருப்பதற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, இன்ஸ்டா ஃபாலோவர்கள் பலர் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, குறிப்பிட்ட சில ஆண்களை திருமணமாகி குழந்தை ஒன்று ஆன பின்னரும் இவ்ளோ காதலா என புலம்ப செய்திருக்கின்றது, இந்த நிகழ்வு.

More from DriveSpark

Article Published On: Friday, April 18, 2025, 23:47 [IST]
English summary
Wife delivers heartwarming birthday surprise with mahindra thar roxx for her husband
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+