5 வருஷமா கஷ்டப்பட்டு சேத்த காசுல மனைவி செய்த காரியம்! இந்த மாரி பொண்ணு கிடைக்க கணவர் குடுத்து வெச்சிருக்கணும்
இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ஹரினி வாசுதேவன் (Harini Vasudevan) என்பவர் வெளியிட்டுள்ள பதிவு, தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு: குழந்தை பருவத்தில் இருந்து தற்போது வரை, நான் என்ன ஆசைப்பட்டாலும், அது எப்படியாவது ஒரு வழியில், எனக்கு எளிதாக கிடைத்து விடும்.
அதற்காக பெரிய கஷ்டம் எல்லாம் பட வேண்டிய தேவையே இல்லாமல் இருந்தது. ஆனால் எனது சொந்த காரை வாங்கிய கதை சற்று வித்தியாசமானது. இந்த கனவை நான் 5 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தேன். ஒரு வேளை நான் தீவிரமாக வேண்டும் என நினைத்திருந்தால், எனது பெற்றோர்கள் எப்போதே எனக்கான சொந்த காரை வாங்கி கொடுத்திருப்பார்கள்.

ஆனால் நான் காத்திருக்கலாம் என முடிவு செய்தேன். ஏனெனில் நானே சொந்தமாக சம்பாதிப்பதில் கிடைக்கும் உண்மையான உணர்ச்சியை அனுபவிக்க வேண்டும் என கருதினேன். ஆரம்பத்தில் 1 லட்ச ரூபாயில் செகண்ட் ஹேண்ட் கார் எதையாவது வாங்கலாம் என்றுதான் முடிவு செய்தேன். இதற்காக சேமிக்க தொடங்கினேன்.
நாளாக நாளாக ஒரு சில விஷயங்களை இதற்காக தியாகம் செய்தேன். ஆனால் நான் சேமிக்க சேமிக்க எனது கனவு வளர்ந்து கொண்டே சென்றது. ஆரம்பத்தில் 1 லட்ச ரூபாய் என்று நான் நினைத்தது, பின்னர் 3 லட்சம், 6 லட்சம் என உயர்ந்து இறுதியில் 7 லட்சமாக மாறியது.

அப்போது 7 லட்ச ரூபாய்க்கு எதற்கு செகண்ட் ஹேண்ட் கார் வாங்க வேண்டும்? என பலரும் கேட்டனர். புதிய காரை வாங்கும்படி கூறினர். எனவே எனது பட்ஜெட்டை உயர்த்தினேன். ஆரம்பத்தில் நான் சன்ரூஃப் உடன் கூடிய காரை வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். பின்னர் அந்த ஆசையும் பனரோமிக் சன்ரூஃப் உடன் கூடிய கார் என விரிவடைந்தது.
இறுதியாக தற்போது எங்களது காரை நான் வாங்கி விட்டேன். அது கியா சைரோஸ் (Kia Syros). இந்த 5 ஆண்டுகள் அவ்வளவு எளிதாக இல்லை. நான் ஆசைப்பட்ட விஷயத்தை என்னால் விரைவாக அடைய முடியவில்லை என்பதால், இடையில் நிறைய நாட்கள் நான் அழுதுள்ளேன். இது என்னால் விவரிக்க முடியாத அளவிற்கு எனது ஈகோவை தூண்டியது.
ஆனால் நான் உண்மையாக ஆசைப்பட்ட விஷயம், சரியான நேரத்தில் என்னை வந்து அடையும் என உறுதியாக நம்பினேன். அதன்படியே இறுதியில் என்னுடைய ஆசை நிறைவேறி விட்டது. இங்கே அன்பை பற்றி பேச வேண்டும் என்றால், அது நீதான் @ebi_nesar05. என்னுடைய கணவர். இந்த காரை நான் வாங்கியிருப்பது என்பது, எனது கனவு நிறைவேறிய விஷயம் மட்டும் அல்ல.
இது உனக்காக நான் எழுதிய காதல் கடிதம். சக்கரங்களின் வடிவில் அதை நான் எழுதியுள்ளேன். நமது முதல் திருமண நாளன்று, என்னுடைய கனவை பரிசளித்து, உன்னை கௌரவிக்க வேண்டும் என விரும்பினேன். என்னிடம் இருந்து ஆகச்சிறந்த ஒரு பரிசை பெற தகுதியானவர் யார் என்றால், அது நீதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
5 ஆண்டுகள் சேமித்த பணத்தில் புத்தம் புதிய கியா சைரோஸ் காரை வாங்கிய ஹரினி வாசுதேவன், அதை தன்னுடைய கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதன் காரணமாக இன்ஸ்டாகிராம் தளத்தில் அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. ஹரிணி வாசுதேவன் வாங்கியுள்ள கியா சைரோஸ் கார், இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சைரோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இதில், லெவல் 2 அடாஸ், ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப் என ஏகப்பட்ட வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இது பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) வாங்கிய கார் ஆகும்.இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹரிணி வாசுதேவன் தனது காருக்கு பாதுகாப்பான, அதே நேரத்தில் சொகுசு வசதிகள் நிரம்பிய ஒரு காரை பரிசாக வழங்கியுள்ளார். கியா சைரோஸ், இந்திய சந்தைக்கு புது வரவாகும். கடந்த பிப்ரவரி மாதம்தான் இந்த கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








