ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

ஒரே குத்தில் ஆட்டோ ஒன்றை காட்டெருமை அலேக்காக தூக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

மக்கள் பெருக்கம், நகர மயமாதல் உள்ளிட்ட காரணங்களினால் காடுகளின் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக அவ்வப்போது மனித-விலங்கு மோதல் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இது சமீப சில காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. யானை, சிங்கம், புலி உள்ளிட்ட மிருகங்களே மக்கள் வசிக்கும் பகுதியில் அதிகம் நடமாடத் தொடங்கியிருக்கின்றன.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

இந்த நிலையிலேயே காட்டெருமை ஒன்று ஆட்டோவை முட்டி தூக்கும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. பொதுவாக வன பகுதியில் நுழையும் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறை காவலர்கள் வாகன ஓட்டிகளை எச்சரிப்பதுண்டு. விலங்குகள் அதிகம் நடமாடும் என்பதால் வாகனங்களை சற்று குறைவான வேகத்திலேயே இயக்கவும் அவர்கள் அறிவுறுத்துவர்.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை அதிக வேகத்தில் ஓட்டுவது மற்றும் வன விலங்குகளை சீண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தற்போது நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநர் எந்த சீண்டலையும் செய்ததாக தெரியவில்லை. இருப்பினும், காட்டெருமை ஆக்ரோசமாக ஆட்டோவை தாக்கியிருக்கின்றது.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

காட்டெருமை இந்த ஆக்ரோஷமான தாக்குதலுக்கு ஆட்டோவின் எஞ்ஜினில் இருந்து எழும்பிய அதீத சப்தம் காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. பொதுவாக ஆட்டோக்கள் அதிக சத்தத்தை வெளியேற்றக் கூடியவையாக இருக்கின்றன. அவற்றின் சத்தம் மனிதர்களாகிய நமக்கே எரிச்சலை ஊட்டும் வகையில் இருக்கும். அப்படி என்றால் காட்டுக்குள் அமைதியான சூழலில் வாழும் விலங்குகளுக்கு அது எப்படி இருக்கும் என்பதை நாமே இங்கு உணர வேண்டும்.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

காட்டெருமை மட்டுமில்லைங்க அதிக இரைச்சலை வெளியேற்றியவாறு செல்லும் வாகனங்களை நாய் மற்றும் யானைகள் போன்ற விலங்குகள் தாக்கிய சம்பவங்களும் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றன. இதனால்தான், காட்டு வழி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது வின விலங்கின் நடமாட்டத்தைக் கண்டால் அமைதியாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

குறிப்பாக, விலங்குகளை சீண்டும் வகையில் ஹாரனையோ, வாகனத்தில் அதிக ஆக்சலரேஷனை எழுப்பக் கூடாது என கூறப்படுகின்றது. இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டிகள் விலங்குகளை அச்சுறுத்துவதாக எண்ணி, ஹாரன் மற்றும் ஆக்சலரேஷன் பெடலை அழுத்தி விலங்குகளை எரிச்சலடையச் செய்கின்றனர். இதன் விளைவாகவே சில விலங்குகள் வாகனங்களைப் பார்த்தாலே பகையாளி வந்துவிட்டதாக நினைத்து அவற்றைத் தாக்க தொடங்குகின்றன.

ஆட்டோவின் எஞ்ஜின் மட்டுமல்ல எல்இடி லைட்டும் ஓர் காரணமாக இருக்கின்றது. சில லைட்டுகள் பிளிங்க் ஆகிய வண்ணம் இருந்திருக்கின்றது. இதுவும் காட்டெருமை எரிச்சலடைய ஓர் காரணமாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸ் லிங்கத்தை அசால்டாக தூக்குவதைப் போல இந்த காட்டெருமை அசால்டாக ஆட்டோவை முட்டி தூக்கியது.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

இதனால் ஆட்டோ பத்து அடி உயரத்திற்கு தூக்கி நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொப்பென கீழே விழுந்தது. இதனால் ஆட்டோவின் முன் பகுதி சற்று அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதேவேலையில் ஆட்டோவில் இருந்தவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இந்திய காட்டெருமைகள் கால்நடைகளைக் காட்டிலும் பாரிய உருவம் மற்றும் பளமிக்கவை அவற்றால் பெரிய உருவம் கொண்ட கார்களைக்கூட அசால்டாக கவிழ்த்துவிட முடியம்.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

காட்டு விலங்குகளை வழியில் காண நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பொதுவாகவே காட்டு விலங்குகள் ஆக்ரோஷம் குணம் கொண்டவை. ஆனால், அவற்றை சீண்டும்போது மட்டுமே அதன் முரட்டுத் தனத்தை காண்பிக்கும். அதை நாம் ஏதும் செய்யவில்லை எனில் அது அதன் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லும். மாறாக அவற்றைச் சீண்டும்போதே மனித விலங்கு மோதல் ஏற்படுகின்றது. குறிப்பாக, காட்டு விலங்குகளை நேருக்கு நேர் பார்க்க நேரிட்டால் வாகனங்களை அமைதியாக்கிவிடுவது நல்லது.

ஒரே குத்துதான்... ஆட்டோவை அலேக்காக தூக்கிய காட்டெருமை... வைரல் வீடியோ!

குறிப்பாக, அவற்றை எரிச்சலூட்டும் வகையில் ஒளிரக் கூடிய லைட் மற்றும் ஹாரன்களை அணைத்து வைத்துவிடுவது கூடுதல் நல்லது. மேலும், செல்போனில் படம் பிடித்தல், கூச்சலிடுதல், வாகனங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் போன்றவற்றை செய்யவே கூடாது. இதுபோன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக விலங்குகளின் தாக்குதலை நம்மால் தவிர்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 13, 2022, 16:38 [IST]
English summary
Wild indian bison attacks autorickshaw in kerala
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+