பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

பெட்ரோல் பங்கிற்கு செல்லும் போது அங்கே செல்போன் பயன்படுத்தாதீர் என்ற வாசகம் உள்ள போர்ட்டை நாம் பார்த்திருப்போம். உண்மையில் பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்தினால் அப்படி என்ன ஆபத்து என்பது கு

பெட்ரோல் பங்கிற்கு செல்லும் போது அங்கே செல்போன் பயன்படுத்தாதீர் என்ற வாசகம் உள்ள போர்ட்டை நாம் பார்த்திருப்போம். உண்மையில் பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்தினால் அப்படி என்ன ஆபத்து என்பது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லை. இது குறித்து பல ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

மேலும் இன்டெர்நெட்டிலும் பல வீடியோக்கள் செல்போன் பேசியதால் பங்க் தீ பிடித்து வெடிக்கும் பல காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகமாக பார்க்கப்படுகிறது. இதனால் செல்போனை பயன்படுத்தவே மக்கள் மத்தியில் அதிகம் பயம் நிலவுகிறது.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. இதுவரை நடந்த எந்த ஆய்வுகளிலும் பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்துவதால்

ஆபத்து என்று உறுதியாகவில்லை. எனினும் செல்போனின் தன்மை மற்றும் சூழ்நிலை மாற்றங்களை பொருத்து இது வேறுபடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

அதாவது பெட்ரோல் போடும் போது அதன் சிறிய துகள்கள் காற்றில் கலக்கிறது. அடிக்கடி பெட்ரோல் பம்ப்பில் பெட்ரோல் போடுவதால் அப்பகுதியில் உள்ள காற்றில் பெட்ரோல் துகள்கள் அதிகமாக இருக்கும். இது எளிதாக தீப்பற்றக்கூடிய சூழ்நிலையில் இருக்கும்.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

காற்றின் அழுத்தம் மற்றும் வேகம் காரணமாக தீப்பற்றக்கூடிய தன்மை மாறுபடும். தீப்பற்றக்கூடிய தன்மை அதிகமாக இருந்தாலும், செல்போன் பயன்படுத்துவதால் ஆபத்தில்லை. ஆனால் செல்போனில் நாம் பேசும் போது மிக குறைந்த அளவிற்கு ஆபத்து இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

செல்போன்கள் எல்லா சிறிய சிறிய எலெக்டரானிக் பாகங்களால் ஆனது. அது வயர் இல்லாமல் மைக்ரோ வேவ் மூலமாக தகவல்களை பறிமாறுகிறது. சில நேரங்களில் மைக்ரோவேவ் தீப்பற்றக்கூடிய தன்மையை ஏற்படுத்தும். ஆனால் இதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு. அதே நேரத்தில் காற்றில் அழுத்தம் அதிகமாக இருந்தால் இந்த வாய்ப்பும் இல்லாமல் போகும்.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

ஆனால் செல்போனில் உள்ள பேட்டரியில் பிரச்சனை இருக்கும். சில குறைந்த ரக பேட்டரிகளுடன் மைக்ரோவேவ் மற்றும் பெட்ரோல் துகள்கள் கல்ந்து ரியாக்ட் ஆகும் போது லேசான தீப்பொறி உருவாகும். அந்த தீப்பொறி காற்றில் கலந்துள்ள மற்ற பெட்ரோல் துகள்களையும் தீ பிடிக்க வைத்து பெரும் விபத்தையே ஏற்படுத்தி விடும்.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

ஆனால் இதற்கான வாய்ப்பு பெட்ரோல் பம்பிற்கு அருகில் தான் அதிகமாக இருக்கும். மற்ற இடங்களில் இது போன்ற வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு மிக குறைவு. இது போன்ற சம்பவம் தான் நீங்கள் சமூகவலைதளங்களில் பார்த்து ஆச்சரிப்பட்ட வீடியோக்களில் நடந்திருக்கலாம்.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

இந்த ஆபத்து செல்போனில் மட்டுமல்ல கார் பேட்டரியிலும் கூட இருக்கிறது. சில தரமில்லாத, பராமரிப்பில்லாத பேட்டரிகளும் பெட்ரோல் பம்பில் தீ விபத்து ஏற்படுத்த கூடும் இதனால் நீங்கள் காரில் பேட்டரியை சரியாக பராமரிக்கவும், தரமான பேட்டரிகளை பயன்படுத்துவதும் அவசியம்.

பெட்ரோல் பங்கில் செல்போன் பேசினால் ஆபத்தா?

அதே போல் நீங்கள் பெட்ரோல் போடும் போது செல்போன்னை பயன்படுத்தகூடாது. அது பெரும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும். இதனால் நீங்கள் காரை விட்டு இறங்கி பெட்ரோல் பம்ப் வரை சென்றால் செல்போனை காரிலேயே பாதுகாப்பாக வைத்து விட்டு செல்லுங்கள் அது தான் அனைவருக்கும் நல்லது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Will Using Cell Phone While Pumping Gas Causes Explosion. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X