ஜன்னல் சீட்டை விட இந்த சீட் தான் பெஸ்ட்... விமான பயண சீட் தேர்வில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
விமானங்களில் பயணம் செய்யும் போது நாம் ஜன்னல் சீட்டை விரும்புவோம். ஆனால் உண்மையில் விமான பணத்திற்கு ஏற்றது ஜன்னல் சீட்தானா? அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்கள் எந்த சீட்டை விரும்புவார்கள்? வாருங்கள் விபரமாகக் காணலாம்

விமான பயணம் என்பது பலருக்கு பெரும் கனவு தான். குறிப்பாக ஏழை மக்கள் தன் வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியான. இன்று நாம் சமூகவலைத்தளங்களில் தற்போது தலைமுறை இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களை முதன் முறையாக விமானத்தில் அழைத்துச் செல்வதைப் புகைப்படம் எடுத்துப் போடுவதைப் பார்க்க முடிகிறது.

இப்படியாக விமான பயணங்களில் 2 விதமான வகுப்புகள் இருக்கிறது. எகனாமிக் வகுப்பு மற்றும் பிஸ்னஸ் வகுப்பு என இரண்டு விதமாக சீட்கள் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் எகனாமிக் வகுப்பிலேயே பயணிக்கிறார்கள். வெகு சிலரே பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள். விமான பயணத்திற்காக டிக்கெட் எடுக்க வேண்டும் என உங்களுக்குத் தெரியும் ஆனால் பல நேரங்களில் விமானத்தில் நீங்கள் எந்த சீட்டில் அமர் வேண்டும் எனத் தேர்வு செய்ய நீங்கள் பணம் கட்ட வேண்டும் என் விபரம் பலருக்குத் தெரியாது.

விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் தேர்வு செய்யும் போது எல்லோராலும் எந்த சீட்டில் அமர வேண்டும் என் தேர்வு செய்ய முடியாது குறைந்த விலையில் உள்ளவர்களுக்கு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் சீட் தேர்வு செய்யும் ஆப்ஷன் இருக்காது சில விமானங்களில் எந்த பக்கம் உள்ள சீட் அதாவது விமானத்தின் ஜன்னல் பக்கமா அல்லது மத்தியில் உள்ள சீட்டா அல்லது முதல் சீட்டா என்பதை மட்டும் தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்குகிறார்கள். சில நிறுவனங்கள் மட்டுமே குறிப்பாக எந்த சீட் எனத் தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்குகிறார்கள்.

பெரும்பாலான விமான நிறுவனங்கள் ஜன்னல் சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் மத்தியில் உள்ள சீட்டை மட்டுமே குறைந்த விலை டிக்கெட்டை வாங்குபவர்களுக்காக ஒதுக்குகிறார்கள். பொதுவாக எகானமி கிளாஸ் விமானங்களில் உள்ள மத்தியில் உள்ள சீட் சௌகரியம் குறைவாக இருக்கும். இந்த சீட்டில் அமர்ந்து கொண்டு பயணிப்பது சிரமமாக இருக்கும். அதே நேரத்தில் முதன் முறையாக விமான பயணம் செய்யும் பயணிகள் ஜன்னல் ஓர சீட்டை விரும்புவார்கள் அதிலிருந்து வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டு வர வசதியாக இருக்கும்.

மக்களின் இந்த விருப்பத்தை வைத்து இந்த விமான நிறுவனங்கள் காசு பார்க்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ந்து விமானத்தில் பயணிப்பவர்கள் ஜன்னல் ஓர சீட்டை விரும்புவதில்லை எனவும், அதே நேரத்தில் நடு சீட்டையும் விரும்புவதில்லை எனவும் ஓரமாக அமரும் சீட்டையே அதிகம் விரும்புவது தெரியவந்துள்ளது. இவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

பொதுவாக எகானமிக் வகுப்பு விமானத்தில் பயணிக்கும் போது அது மிக நெருக்கடியாக அமைப்பில் சீட்கள் இருக்கும் வரிசையில் 3 பேர் அமரும் படி சீட் இருக்கும். இதனால் போதுமான அளவிற்கு இட வசதி இருக்காது. ஜன்னல் ஓர சீட்டில் வேடிக்கை பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் கால்களுக்கு போதுமான இட வசதி இருக்காது. மேலும் பயணத்தின் போது கழிவறையைப் பயன்படுத்த விரும்பினால் மற்ற இருவரும் எழுந்து வழி விட வேண்டும். அப்பொழுது தான் இவர் வெளியே வர முடியும்.

மத்தியில் உள்ள சீட்டில் இருப்பவர் தான் பாவம் அவருக்கு எந்தவிதமான வசதியும் இருக்காது. அவர் விமான பயணத்தை மோசமான அனுபவமாகத் தான் கடக்க வேண்டும். ஆனால் முதல் சீட்டில் இருப்பவர்களுக்குப் பல பிளஸ் பாயிண்ட்கள் உள்ளன. இந்தச்சீட்டில் அமர்ந்து வந்தால் மற்ற இரண்டு சீட்டை விட இந்த சீட்டில் ஒரு காலை நன்றாக நீட்டிக்கொள்ள வசதி இருக்கும். அது மட்டுமல்ல எளிதாகக் கழிவறைக்கு எழுந்து செல்ல முடியும். இறுதியாக விமானம் தரையிறங்கியதும் முதல் ஆளாக இந்த சீட்டில் இருப்பவர்கள் தான் விமானத்தை விட்டு வெளியே செல்ல முடியும்.

விமானத்தில் ஜன்னல் ஓர சீட்களுக்கு தான் மவுசு அதிகம் எனப் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எகனாமிக் வகுப்பைப் பொருத்தவரை ஜன்னல் ஓர சீட்டை விட முதல் சீட் தான் பயணத்திற்கு பெஸ்ட்ஸ், அதுவும் குறுகிய நேரப் பயணம் மற்றும் உள்நாட்டுப் பயணங்களுக்கு இந்த சீட்கள் தான் பெஸ்ட் சில நிறுவனங்கள் இந்த சீட்களுக்கும் தனியாகக் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

நீங்கள் முதன் முறையாக விமானத்தில் பயணிக்கிறீர்கள் என்றால் இதைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் கண்களை மூடிக்கொண்டு ஜன்னல் ஓர சீட்களை தேர்வு செய்யுங்கள் அதன் அனுபவமே தனி தான் வாழ்வில் முதன் முறையாகப் பூமிக்கு மேலே பல ஆயிரம் அடிகளில் பறக்கும் போது ஏற்படும் உணர்வு ஜன்னல் சீட்டில் தான் சிறப்பாக இருக்கும். மேலே இருந்து கீழே பார்க்கும் போது குட்டி குட்டியாக எல்லாம் தெரிவது வியப்பாக இருக்கும்.

ஆனால் நீங்கள் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்பவர்கள் எல்லாம் உங்களுக்கு ஜன்னல் ஓர அனுபவம் எல்லாம் சலிப்பை ஏற்படுத்தியிருக்கும் உங்களுக்குச் சொகுசான பயணம் மற்றும் விமானம் தரையிறங்கியதும் நீங்கள் விரைவாகச் செல்ல வேண்டும் என விரும்பினால் முதல் சீட்தான் உங்களுக்கு பெஸ்ட் அடுத்த முறை விமானத்தில் பயணம் செய்யும் போது இந்த முதல் சீட் அனுபவம் எப்படி இருக்கிறது என்று தான் பாருங்களேன்.


Click it and Unblock the Notifications