விமான பயணத்தில் ஓர் புதிய பரவசம்... 'ஸ்கைடெக்' இருக்கைகள்!

By Saravana

விமான பயணம் என்பதே பலருக்கும் பரவசமான அனுபவத்தை தரவல்லதாக இருக்கும். தொழில்நுட்ப வசதிகள் பெருகி வரும் இக்காலத்தில் விமான பயணத்தை ரசனைமிக்கதாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அதில் ஒரு முயற்சியாக, ஸ்கைடெக் என்ற கண்ணாடி கூண்டில் இருக்கைகள் அமைப்பதற்கான ஓர் முன்மாதிரியை வின்ட்ஸ்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த ஸ்கைடெக் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் இதோ உங்களுக்காக...

 நோக்கம்

நோக்கம்

விமானத்தில் பயணிக்கும்போது சிறிய ஜன்னல் வழியாக வெளியுலகை ரசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அது ஒரு வட்டத்திற்குள் அடைந்து போகிறது. இதனை போக்கும் விதத்திலேயே ஸ்கைடெக் கான்செப்ட்டை வின்ட்ஸ்பீடு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

 ஸ்கைடெக்

ஸ்கைடெக்

இது புதிதல்ல. ஆடம்பர படகுகளில் மேல் புறத்தில் இதுபோன்ற ஸ்கைடெக்குகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், அதனை விமானத்தில் அமைப்பது சிரமம். அதற்கான தீர்வாக இந்த ஸ்கைடெக் கான்செப்ட்டை வின்ட்ஸ்பீடு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

கண்ணாடிக் கூண்டு

கண்ணாடிக் கூண்டு

விமானத்தின் மேல்புறத்தில் சிறிய கண்ணாடி கூண்டு ஒன்றை அமைத்து அதில் இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த இருக்கைகளை லிஃப்ட் மூலமாகவோ அல்லது படிக்கட்டுகள் அமைத்து செல்லும் விதத்தில் உருவாக்கியிருக்கின்றனர்.

பரவசம் அளிக்கும்

பரவசம் அளிக்கும்

விமானம் பறந்து கொண்டிருக்கும்போது இந்த இருக்கையில் அமர்ந்தால், ஓர் புதிய பரவசத்தை ஏற்படுத்தும் எனலாம். அத்துடன், அந்த இருக்கைகளை ஒரு பொத்தானை அழுத்தினால் 360 டிகிரி கோணத்தில் திருப்ப முடியும்.

யாருக்காக...?

யாருக்காக...?

தொழிலதிபர் முகேஷ் அம்பானி போன்று தனி நபர் விமானங்களை வாங்கும் கோடீஸ்வரர்களுக்கு இந்த கான்செப்ட் பொருத்தமாக இருக்கும் என்று வின்ட்ஸ்பீடு தெரிவித்துள்ளது.

ஏரோடைனமிக்ஸ்

ஏரோடைனமிக்ஸ்

விமானத்தின் பின்பகுதியில் இந்த கண்ணாடி கூண்டு அமைப்பதால் விமானத்தின் ஏரோடைனமிக்ஸில் எந்த பாதிப்பும் இருக்காதாம். எனவே, விமானத்தின் செயல்திறனிலும், எரிபொருள் சிக்கனத்திலும் எந்த மாறுதலும் இருக்காது என்கிறது வின்ட்ஸ்பீடு.

பயப்படாதீங்க...

பயப்படாதீங்க...

ஸ்கைடெக் அமைப்பு பறவைகளின் மீது மோதினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், மிக உறுதியான கண்ணாடி பொருட்களை கொண்டு அமைக்கப்படும். எனவே, பயப்பட வேண்டிய அவசியல்லை என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது வின்ட்ஸ்பீடு நிறுவனம்.

ஆர்வம்

ஆர்வம்

இந்த ஸ்கைடெக் கான்செப்ட் தனிநபர் பயன்பாட்டு வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The SkyDeck is a system designed to provide an exhilarating view of the aircraft’s external environment while in flight, from a safe semi-external location.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X