Just In
- 7 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாத்து சூதானமா ஏறுங்க... விமானங்களில் இன்ஜின் எங்கு அமைந்திருந்தால் உயிருக்கு பாதுகாப்பு தெரியுமா?
விமானங்களில் இன்ஜின் அமைவிடம் மற்றும் அவற்றின் சாதக, பாதகங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பயணிகள், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். விமான நிறுவனங்கள் பல்வேறு வகையான விமானங்களை சேவையில் ஈடுபடுத்தி வந்தாலும், அவற்றில் பொதுவாக 2 இடங்களில்தான் இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. இன்ஜின்கள் எங்கே பொருத்தப்படுகின்றன? என்பது முக்கியமற்ற விஷயம் போல் தோன்றலாம்.

ஆனால் விமானத்தின் செயல்பாடுகளில், இன்ஜின் அமைவிடம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் விமானங்களில் இன்ஜின்கள் எங்கே பொருத்தப்படுகின்றன? இன்ஜின்களின் அமைவிடம் ஏன் மிகவும் முக்கியமானது? என்ற கேள்விகளுக்கான பதிலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இறக்கைகள்
வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான விமானங்களின் இறக்கைகளில் 2 இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருப்பதை நீங்கள் காண முடியும். இறக்கைகளுக்கு கீழாக இன்ஜின்களை பொருத்துவதுதான், பொதுவாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறை. விமானங்களின் இறக்கைகளில் இன்ஜின்களை பொருத்துவதில் சில சாதகங்களும், சில பாதகங்களும் உள்ளன.

முதலில் சாதகங்களை பார்த்து விடலாம். விமானத்தின் இறக்கைகளில் இன்ஜின்களை பொருத்தினால், மெக்கானிக்குகளால் அவற்றை எளிதாக கையாள முடியும். எனவே இன்ஜின்களை பராமரிப்பதும், பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதும் எளிமையாக இருக்கும். பொதுவாக விமானத்தின் இறக்கைகள் நீடித்து உழைக்கும் தன்மையை பெற்றுள்ளன. அத்துடன் அவை மிகவும் வலுவானதாகவும் இருக்கும்.

எனவே பெரிய, அதிக எடை கொண்ட இன்ஜின்களையும் விமானத்தின் இறக்கைகளில் பொருத்தலாம். மேலும் இன்ஜின்களை, விமானத்தின் இறக்கைகளில் பொருத்துவது பாதுகாப்பான ஒரு தேர்வு எனவும் விமான துறையை சேர்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். தீ விபத்து போன்ற சூழல்களில், கேபின் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை இது குறைக்கிறது என்பது அவர்களின் கருத்து.

அதே சமயம் விமானத்தின் இறக்கைகளில் இன்ஜின்களை பொருத்தினால், அதிக சத்தம் ஏற்படும் என்பது பாதகமான விஷயம். ஜன்னல்களுக்கு அருகிலேயே இன்ஜின் இருப்பதால், பயணிகள் அதிக இரைச்சலை சந்திக்க நேரிடும். எனினும் பாடல்களை கேட்பது போன்ற செயல்பாடுகளின் மூலம் இந்த பிரச்னையை பயணிகள் சமாளிக்கலாம்.

வால்
விமானங்களில் இன்ஜின்கள் பொருத்தப்படும் மற்றொரு முக்கியமான பகுதி வால். இறக்கைகள் மற்றும் வால் ஆகிய 2 பகுதிகளில்தான் பெரும்பாலும் இன்ஜின்கள் பொருத்தப்படுகின்றன. சரி, வால் பகுதியில் இன்ஜின்களை பொருத்துவதால் என்ன சாதகங்கள் என்பதை பார்க்கலாம். கேபினில் இருந்து இன்ஜின்கள் சற்று தொலைவில் இருக்கும் என்பதால், சத்தம் குறைவாக இருக்கும் என்பதுதான் முதல் சாதகம்.

இன்ஜின்கள் வால் பகுதியில் பொருத்தப்பட்டிருந்தாலும் கூட, பயணிகளுக்கு சத்தம் கேட்கலாம். ஆனால் இறக்கைகளில் இன்ஜின்கள் பொருத்தப்படுவதுடன் ஒப்பிடும்போது சத்தம் குறைவாக இருக்கும். அத்துடன் இன்ஜினிற்குள் ஏதேனும் பொருட்கள் உறிஞ்சப்படுவதற்கான அபாயங்களும் குறைவு. இறக்கைகளுக்கு பின்னால், வால் பகுதியில் இன்ஜின் பொருத்தப்படுவதே இதற்கு காரணம்.

அதே சமயம் வால் பகுதியில் இன்ஜின்களை பொருத்தினால், பராமரிப்பதும், பழுது நீக்குவதும் கடினம். இன்ஜின்கள் வால் பகுதியில் இருப்பதால், மெக்கானிக்குகளால் அவற்றை எளிதாக கையாள முடியாது என்கின்றனர். எந்தவொரு விஷயத்திலும் நன்மை, தீமைகள் இருப்பதை போல, விமானங்களில் இன்ஜின்கள் அமைவிடத்திலும் இப்படிப்பட்ட சாதக, பாதகங்கள் இருக்கின்றன.