குளிர் காலத்தில் மட்டும் கொண்டு வரப்படும் புதிய ரூல்ஸ்! இந்த விஷயம் யாருக்குமே தெரியாது!
இந்தியா முழுவதும் குளிர்காலம் துவங்கிவிட்டது. பல இடங்களில் பனிமூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. மக்கள் பலர் இந்த குளிர்காலத்தை அனுபவிக்க துவங்கியுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் தற்போது இந்த குளிர்காலத்தில் தங்கள் வாகனங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என பல்வேறு விதமாக யோசனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் குளிர் காலத்தில் மட்டும் இருக்கும் ஒரு சில போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
குளிங்காலம் என்பது இந்தியாவில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரும் இந்த நேரத்தில் அதிகமான பனிமூட்டம் இருப்பதால் எதிரில் வரும் வாகனங்கள் அவ்வளவாக தெரியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் குளிங்காலத்தில் எப்படி வாகனம் ஓட்ட வேண்டும் என பலருக்கு பல்வேறு விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் குளிர்காலத்தில் மட்டும் இருக்கும் ஒரு புதிய விதிமுறை பற்றி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இது ஆச்சரியமான தகவலாக கூட இருக்கலாம் ஆனால் இது ஒரு ஆண்டுக்கு இரண்டு மாதம் மட்டுமே அமலில் இருக்கும் போக்குவரத்து விதிமுறையாக இருக்கிறது.
டெல்லியையும் ஆக்ராவையும் இணைக்கும் வகையில் யமுஹா எக்ஸ்பிரஸ்வே என்ற சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது 8 வழி சாலையாக செயல்பட்டு வருகிறது சில இடங்களில் 6 வழிச் சாலையாகவும் இது கட்டமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் மிக வேகமாக வாகனங்கள் பயணிக்கும் சாலையாக இந்த சாலை இருக்கிறது சுமார் 165 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் குளிர்காலத்தில் அதிக பனி இருப்பதன் காரணமாக இல்லை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் குளிர்காலத்தில் வாகனங்கள் பயணிக்கும் போது புதிய விதமான வேக கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. வழக்கமாக இலகு ரக வாகனங்கள் இந்த எக்ஸ்பிரஸ் வேயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை இந்த வேக கட்டுப்பாட்டு குறைக்கப்படுகிறது.
ஒரு ஆண்டில் இந்த இரண்டு மாத காலம் மட்டும் இந்த சாலை வழியாக பயணிக்கும் இலகு ரக வாகனங்கள் அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்திலும் அதே நேரம் ஹெவி ரக வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிக பனிமூட்டம் இருப்பதன் காரணமாக எதிரில் உள்ள வாகனங்கள் தெரியாமல் போவதால் வாகன விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக இந்த வேக கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சாலைக்கும் ஒவ்வொரு விதமான வேகக் கட்டுப்பாடுகள் இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலையை பொருத்தவரை ர்களுக்கு 100 கிலோமீட்டர் வேகமும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் 0 கிலோமீட்டர் வேகமும் கட்டுப்பாடுகளாக வழங்கப்பட்டுள்ளன. இப்படியாக டூவீலர்களுக்கும் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.டூவீலர்கள் அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க மட்டுமே கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது. ஹெவி ரக வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையிலும் எக்ஸ்பிரஸ் சாலையிலும் 100 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இப்படியாக அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை எல்லாம் கண்டுபிடிப்பதற்காக ஆங்காங்கே ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் சாலையில் விதிமுறையை மீறி அதிக வேகத்தில் வரும் வாகனங்களை கண்டுபிடித்து அந்த வாகனத்தின் நம்பர் பேட்டை கண்டறிந்து அதற்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறையும் தற்போது அமலில் இருக்கிறது. இதனால் இந்த விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
நாம் மேலே குறிப்பிட்ட யமுனா எக்ஸ்பிரஸ் சாலையை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூபாய் 2000 வரை அபராதம் மிதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் அவர் அதை செலுத்த தவறும் வாகன ஓட்டிகள் மீது டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குளிர்காலத்தில் வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சில டிப்ஸ்கள் மற்றும் வழிமுறைகளை அரசு சொல்லி கேட்டிருப்போம். ஆனால் விதிமுறையை மாற்றும் அளவிற்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் செய்தி புதிய செய்தியாக பலர் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இது வாகன ஓட்டிகளில் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட மாற்றம் தான் இதை நாம் நிச்சயம் பின்பற்றியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications








