இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்! டெல்லியில் அரங்கேறிய அதிசயம்! அதிகாரிகளினாலயே இத நம்ப முடியல!

ஒரு மாதம் கழித்து சில தினங்களுக்கு முன்பு எச்எஸ்ஆர்பி புக்கிங் மீண்டும் தொடங்கியது. இந்நிலையில், இரண்டே நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்டர் குவிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து வாகனங்களுக்கும் 'உயர் பாதுகாப்பு பதிவு தட்டுகள்' (HSRP) கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் பதிவுச் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும் இந்த நடைமுறை ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவக்கின்றன.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

எனவே, 2019ம் ஆண்டிற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களிலும் இதனைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டது. இதனால், டெல்லியில் இருக்கும் அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களின் வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவு பிளேட்டுகளைப் பொருத்துவதில் தீவிரம் காட்டினர்.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

மேலும், ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் எச்எஸ்ஆர்பி-யைப் பெறுவதற்கு முந்தினர். இதனால், மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகன உரிமையாளர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வாயிலாகவும் புக்கிங் செய்யும் வசதியை டெல்லி அரசும், புதிய நம்பர் பிளேட்டை விற்பனைச் செய்யும் ரோஸ்மெர்டா சேஃப்டி சிஸ்டம் எனும் தனியார் நிறுவனமும் ஏற்படுத்திக் கொடுத்தன.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

அதிலும் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானோர் உள் நுழைந்ததால் இணையத்திலும் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால், கடந்த மாதம் உயர் பாதுகாப்பு பதிவெண் பிளேட் புக்கிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இதற்கான புக்கிங் ஆன்லைன் வாயிலாகத் தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட வெறும் 2 நாட்களிலேயே 10,000க்கும் அதிகமானோர் மீண்டும் புக்கிங் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

ஒரே நேரத்தில் பல ஆயிரக் கணக்கானோர் புக்கிங் செய்யக் குவிந்து வருவதால் நம்பர் பிளேட்டை விற்பனைச் செய்யும் ரோஸ்மெர்டா சேஃப்டி சிஸ்டம் தனியார் நிறுவனமும், டெல்லி அரசும் தற்போது திணறி வருகின்றது. டீலர்கள் வாயிலாக மட்டுமின்றி சில தனி நபர்கள் வாயிலாகவும் புக்கிங் செய்யப்பட்டு வருவதாக புதிய நம்பர் பிளேட் விற்பனையாளரான ரோஸ்மெர்டா சேஃப்டி சிஸ்டம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

இதனடிப்படையிலேயே, தற்போது 10 ஆயிரத்திற்கும் அதிகமான எச்எஸ்ஆர்-பிளேட்டுகளுக்கான ஆர்டர் மற்றும் ஆயிரம் புதிய வண்ண ஸ்டிக்கர்களுக்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் எக்கச்சக்கமான ஆர்டர் குவிந்திருப்பதால் அதனை உடனடியாக டெலிவரி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

எனவே, உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட்டை புக்கிங் செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் அழைப்பு வாயிலாக தகவல் பரிமாற்றப்பட்டு வருகின்றன. தாமதம் மற்றும் எப்போது புதிய நம்பர் பிளேட் பொருத்தப்படும் என்ற அனைத்து தகவல்களும் இதன் வாயிலாக பகிரப்படுகின்றது.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

வாகனங்களை எளிதில் இனம் கண்டறியும் விதமாக உயர் பாதுகாப்பு பதிவெண் முறை மற்றும் கலர் கோட் முறை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, வாகனத்தை இனம் கண்டறிவதற்கு மட்டுமின்றி வாகனம் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் தகவல்களை விரைவில் கண்டறிவதற்கும் உதவும்.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

எனவேதான் மத்திய போக்குவரத்துத்துறை நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஆர்டிஓ-க்களுக்கு விரைவில் புதிய உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றது. இதனடிப்படையிலேயே இந்த விவகாரத்தில் டெல்லி அரசு அண்மைக் காலங்களாக தீவிரம் காட்டி வருகின்றது. இதன் விளைவாக வெறும் இரண்டு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பதிவெண்களுக்கான புக்கிங் கிடைத்துள்ளது.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

எச்எஸ்ஆர்பி எனப்படும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் என்றால் என்ன?

எலக்ட்ரானிக் நம்பர் பிளேட்டான இது அலுமினியத் தகட்டைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதில், குரோமியம் ஹாலோகிராமால் உருவாக்கப்பட்ட அசோகச் சக்கரத்தைப் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இதை அவ்வளவு எளிதில் கிழிக்க முடியாது. மேலும், இதற்கு கீழே 'ஐஎன்டி' (IND) எனும் ஆங்கில எழுத்து நாட்டைக் குறிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஒட்டப்பட்டிருக்கும்.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

இதைத்தொடர்ந்து, பக்காவட்டு பகுதியில்யே ஒவ்வொரு வாகனத்திற்கும் உண்டான பிரத்யேக பதிவெண்கள் அழுத்தம் முறையில் அச்சிடப்படும். தற்போது ஸ்டிக்கர் முறையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை எளிதில் நீக்கிவிடலாம். ஆனால், அழுத்தத்தை நீக்க முடியாது. எனவேதான் இதனை அரசு பாதுகாப்பானது என கூறுகின்றது. மேலும், இந்த நம்பர் பிளேட்டை வழக்கமான ஸ்குரூ முறையில் இல்லாமல் ரிவிட் முறை மூலம் வாகனங்களில் பொருத்தப்படும்.

இரண்டே நாளில் 10 ஆயிரம் புக்கிங்குகள்... டெல்லியில் அரங்கேறிய அதிசயம்... அரசு அதிகாரிகளாலயே இத நம்ப முடியல!

ஆகையால், அதனை அவ்வளவு எளிதில் நீக்கிவிட முடிாயது. இதனால், வாகனத்தில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை அகற்றவோ அல்லது போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தவோ முடியாது. ஆகையால், போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி அரங்கேறும் குற்றச் சம்பவங்கள் தவிர்க்கப்படும். இந்த புதிய முறையின் மூலம், போக்குவரத்து விதிமீறல்களும் கணிசமாக குறையும். இத்துடன், வாகனம் பற்றிய அனைத்து தகவல்களும் மத்திய அரசின் 'வாஹன்' தளத்தில் பதிவேற்றப்படும். இது, குறிப்பிடப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் வாகனம் பற்றிய அனைத்து தகவலையும் உள்ளடக்கியிருக்கும். ஆகையால், வாகனம் சார்ந்து அரங்கேறும் குற்றச் சம்பவங்களும் முழுமையாக தவிர்க்கப்படும்.

குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
With In 2 Days Delhi Vehicle Owners Gives Overwhelming Order For HSRP. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X