பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா என்பதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

நம்ம ஊருல லைசென்ஸ் இல்லாம டூ-வீலரையே ஓட்ட முடியாது. அப்படியே ஓட்டினாலும் போலீஸ் கிட்ட மாட்டினா தேவையில்லாத சிக்கலில் சிக்க வேண்டியிருக்கும். இந்த மாதிரியான சூழலில் உலக நாடுகள் சிலவற்றில் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

வாகனங்களை இயக்குவதற்கு உரிமம் வழங்கப்படுவதைப் போலவே விமானங்களை இயக்கவும் உரிமம் வழங்கப்படுகின்றது. உலக நாடுகள் அனைத்திலும் இது நடைமுறையில் இருக்கின்றது. இருப்பினும், உலக நாடுகள் சில குறிப்பிட்ட சில விமானங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என கூறுகின்றன. அந்த விமானங்கள் 'அல்ட்ராலைட்' விமானங்கள் ஆகும்.

பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

சிறிய இயந்திரம், மிக சிறிய உருவம், குறைந்த வேகம் மற்றும் ஒற்றை இருக்கை ஆகியவற்றைக் கொண்ட விமானங்களையே அல்ட்ரா லைட் விமானம் என்கின்றனர். இந்த விமானங்களை இயக்க பெரியளவில் தகுதியோ அல்லது பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்கிற அவசியமோ இல்லை. மேலும், இவை இயக்க மிக மிக சுலபமானதாக இருக்கும். எனவேதான் இந்த விமானங்களை இயக்க உலக நாடுகள் சில அனுமதிக்கின்றன.

பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

குறிப்பிட்ட சில விதிகளின்கீழ் எஃப்ஏஏ (Federal Aviation Authority) இதற்கான அனுமதியை வழங்குகின்றது. மிக முக்கியமாக 14 CFR Part 103.1 பிரிவே தனி நபரை பைலட் உரிமம் இல்லாமல் விமானத்தை இயக்க அனுமதிக்கின்றது.

பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

என்ன மாதிரியான விமானத்தை உரிமம் இல்லாமல் இயக்க இந்த விதி அனுமதிக்கின்றது?

 • ஒருவர் மட்டுமே பயணிக்கின்ற வகையில் ஒற்றை இருக்கை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
 • விமானம் பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நோக்கங்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும்.
 • விமானத்தின் எடை 155 பவுண்டுகளுக்கும் குறைவானதாக இருக்க வேண்டும்.
 • காலியான நிலையில் விமானம் 254 பவுண்டுகளுக்கும் குறைவான எடை இருத்தல் வேண்டும்.
 • விமானத்தின் எரிபொருள் திறன் 5 அமெரிக்க கேலன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • உச்சபட்சமாக 55 க்நாட் வேகத்திற்கும் குறைவான வேகத்தில் பறத்தல் வேண்டும்.
 • விமானத்தின் பவர்-ஆஃப் ஸ்டால் வேகம் 24 க்நாட்களாக இருத்தல் கூடாது.
 • பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  மேலே உள்ள விதிகளுக்கு ஓர் விமானம் உட்படும் எனில் அந்த விமானத்தை இயக்க எந்தவொரு உரிமமும் தேவையில்லை என்கிறது எஃப்ஏஏ. இந்த விமானங்கள் இயக்க சுலபமானதாக இருந்தாலும், அவற்றை பயன்படுத்த பயிற்சி தேவைப்படுகின்றது. இதை மேற்கொண்டிருந்தாலே எஃப்ஏஏ விமானங்களை இயக்கலாம் என கூறுகின்றது.

  பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  உரிமம் இல்லாமல் எந்தெந்த விமானங்களை இயக்க முடியும்?

  ஒட்டுமொத்தமாக நான்கு விமானங்கள் உள்ளன. ஏரோலைட் 103 (Aerolite 103), குயிக் சில்வர் (Quicksilver), ஹம்மல் அல்ட்ரா (Hummel Ultra Cruiser) மற்றும் பேந்தம் எக்ஸ்1 (Phantom X1) இந்த விமானங்களில் லைசென்ஸ் இல்லாமல் இயக்கலாம்.

  பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  ஏரோலைட் 103 (Aerolite 103)

  இது ஓர் அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பாகும். சிங்கிள் சீட் கொண்ட இந்த பிளேனின் உற்பத்தியை 1997 ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. இதையடுத்து 2005 ஆம் ஆண்டில் இதன் உற்பத்திக்கு முற்று புள்ளி வைத்தது. இருப்பினும், இப்போதும் இந்த விமானத்தை பயன்படுத்துபவர்கள் இந்த உலகில் உள்ளனர். உரிமம் இல்லாமல், ஜாய் ரைடை மேற்கொள்ள விரும்புவர்களுக்கு என்றே இந்த விமானத்தை தயாரிப்பு நிறுவனம் உற்பத்தி செய்தது.

  பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  குயிக் சில்வர் (Quicksilver)

  குயிக் சில்வர் இந்த விமானத்தையும் தயாரிப்பு நிறுவனம் ஜாய் ரைடை மைய நோக்காகக் கொண்டு நிறுவனம் உருவாக்கியது. 1970க்கு பின்னரே இந்த விமானம் உருவாக்கப்பட்டது. இப்போதும் இந்த விமானத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சிறிய எஞ்ஜின், ஒற்றை இருக்கை, வீல்கள், கிளைடர் உள்ளிட்டவற்றை இந்த விமானம் கொண்டிருக்கும்.

  பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  ஹம்மல் அல்ட்ரா (Hummel Ultra Cruiser)

  உலகின் முதல் மெட்டலால் உருவாக்கப்பட்ட சிறிய விமானம் இதுவாகும். ஹம்மல் ஏவியேசனால் 1999இல் உருவாக்கப்பட்ட விமானமே இதுவாகும். இதில் பறப்பது மிக சுலபம். உயர் திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட இந்த விமானம் பலரின் விருப்பமான ஒன்றாக இருக்கின்றது.

  பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  பேந்தம் எக்ஸ்1 (Phantom X1)

  1982ம் ஆண்டில் தொடங்கிய இந்த விமானத்தின் உற்பத்தி தற்போது வரை தயாரிக்கப்பட்டு வருகின்றது. ட்ரூ கிளாசிக் ஹை விங் டிராக்டர் கான்ஃபிகரேசன் கொண்ட அல்ட்ரா லைட் பிளேன் இதுவாகும். இதனை விமானிகளின் பயிற்சிக்காகவே நிறுவனம் உருவாக்க ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

  மேலே பார்த்த இந்த விமானங்களை மட்டுமே உரிமம் இல்லாமல் இயக்க முடியும்.

  பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  விமானங்களை உரிமம் இல்லாமல் இயக்கினால் என்ன ஆகும்?

  அனைத்து விமானங்களையும் லைசென்ஸ் இல்லாமல் இயக்கிவிட முடியாது. 14 CFR Part 103.1 விதிக்கு பொருந்தும் விமானங்களை மட்டுமே உரிமம் இல்லாமல் இயக்க முடியும். இந்த விதிக்கு பொருந்தாத விமானங்களை உரிமம் இல்லாமல் இயக்கினால் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும். சட்ட சிக்கல் மட்டுமின்றி பெரும் அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

  பைலட் உரிமம் இல்லாமல் விமானங்களை இயக்க முடியுமா? முடியும்... இந்த தகவல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்க செய்யலாம்!

  2.50 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இத்துடன், மூன்று ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்கும். இதேபோல், பெரிய விமானம் சட்ட விரேதமாக பறக்கவிடப்பட்டாலும் சட்ட சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Without license are we can fly here is full details
Story first published: [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X