ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

ஹூண்டாய் ஷோரூமில் காரை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு அரங்கேறிய துயரம், அதிர்ச்சி வீடியோ குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கார் வாங்குவதுக்காக அவரது குடும்பத்தாருடன் அங்குள்ள தேவ் பூமி ஹூண்டாய் மண்டி ஷோரூமுக்கு சென்றுள்ளார். அந்த ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரையல் கார்களை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவ்வாறு, அங்கிருந்த ஹூண்டாய் ஐ10, ஐ20 ஆகிய மாடல் கார்களைப் பார்வையிட்டார்.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

பின்னர், அதே ஷோரூமில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் எலைட் ஐ20 காரைப் பார்வையிட்ட அப்பெண்மணி, காருக்குள் சென்று சோதனை செய்தார். பின்னர், காரின் இக்னீஷனை ஆன் செய்த அவர், திடீரென கியரை மாற்றி இயக்க ஆரம்பித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கார் சீறிப்பாய்ந்து ஷோரூமின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேச் சென்றது.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

இதில், அதிர்ச்சியுற்ற அப்பெண் செய்வதறியாமல் உறைந்து காருக்குள்ளேயே அமர்ந்துக்கொண்டார். தொடர்ந்து, வேகமாகப் பாய்ந்த அந்த கார், ஷோரூமை வெளியிட்டு வெளியேச் சென்றது. அவ்வாறு, குறைந்தது 50 அடி தூரத்துக்கும் மேலாக இழுத்துச் செல்லப்பட்டு, வெளியே நின்றுக் கொண்டிருந்த மற்ற கார்கள் மீது மோதி நின்றது.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

இந்தச் சம்பவத்தை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல், கார் ஷோரூமின் ஊழியர்கள் விழிப்பிதுங்கி நின்றனர். பார்ப்போரைப் பதைபதைக்க வைத்த இச்சம்பவம், ஷோரூமில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அந்த பெண் குறித்து இழிவான மீம்களை பரவி வருகின்றது.

நாட்டின் கண்களான பெண்கள் அனைத்து துறையிலும் வளர்ந்து வரும் சூழலில், இதுபோன்ற சில இடர்பாடுகள் நேரத்தான் செய்கிறது. அவ்வாறு, பெண்கள் பார்க்கிங் செய்யும் போது விபத்து ஏற்படுவது, காரை சரியாக இயக்காமல் விபத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை விளையாட்டாவகவும், பொழுதுபோக்கிற்காகவும் இளைஞர்கள் இணையத்தில் பதிவிடுகின்றனர். ஆனால், இந்த வீடியோக்களால் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் இன்னல்கள் பல உள்ளது என்பதை உணர அவர்கள் மறுக்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்களை வைரல் செய்யும் இளைஞர்கள், பெண்கள் பல துறைகளில் வளர்ச்சி அடைந்து வருவதைப் பற்றி பெரிதாக பேச மறுக்கிறார்கள்.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில், அனா கேராஸ்கோ என்ற 21 வயது இளம்பெண் கவாஸகி நிஞ்ஜா 400 பைக்கை ஓட்டி வேர்ல்ட் சுப்பர் ஸ்போர்ட் 300 சேம்பியன்ஷிப்பை வென்றார். இதனால், இவர் உலகின் முதல் மோட்டார் சைக்கிள் சேம்பியன் பெண் என்ற பெருமையை அடைந்துள்ளார். இதைப்போலவே, ஓபன் வீல் ரேஸிங்கில் கலந்துக்கொண்டு வெற்றிப் பெற்றதுக்காக பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி சட்விக் என்ற பெண்ணுக்கு சென்னையில் எம்ஆர்எஃப் டைட்டில் பட்டம் வழங்கப்பட்டது. இதுபோன்று, பெண்கள் பலர் அவர்களது துறையில் பெரும் வளர்ச்சியை கண்டுவருகின்றனர். ஆனால், சில பெண்களுக்கு கசப்பான சூழ்நிலையும் ஏற்படத்தான் செய்கிறது.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

அவ்வாறு நடைபெற்றச் சம்பவம் தான் ஹிமாச்சல பிரதேச ஹூண்டாய் ஷோரூம் கார் விபத்து. விபத்தை ஏற்படுத்திய அந்த பெண் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், ஹூண்டாய் எலைட் ஐ20 காரானது மிகவும் சேதமடைந்து நொருங்கியது.

ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 மாடல், அப்கிரேட் செய்யப்பட்டு கடந்த வருடம் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் இதுவும் ஒன்று.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

இந்த புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரானது, பழைய மாடலின் முகப்பில் இருந்து பெரிய அளவில் மாற்றமில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டே டைம் மின் விளக்கு ஆகியவை புதிதாக பொருத்தப்ட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இன்டீரியர் தோற்றத்தை அழகாக்கும் விதமாக கருப்பு மற்றும் பீஜ் நிறத்தில் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய் பிளே ஆகிய மென்பொருள்களை சப்போர்ட் செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ!

இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜினில் கிடைக்கிறது. அவ்வாறு, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். இதேப்போல 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பெட்ரோல் மாடல் விலையானது எக்ஸ்ஷோரூமில் 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் முதல் 7 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. டீசல் மாடல் 6 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் முதல் 9 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 20, 2019, 18:47 [IST]
English summary
Woman Accidentally Crashed Elite I20 Trail Car In Himachal. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+