12 லட்ச ரூபா பைக்கிற்கு ஐயர கூட்டீட்டு வந்து பூஜை போட்ட தேவதை! ஏழு கடல் தாண்டி போனாலும் இந்திய பண்பாட்ட மறக்கல

தங்கம் விலை (Gold Rate) விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தாலும் கூட, நகை கடைகளில் ஆபரணங்கள் வாங்குவதை இந்திய பெண்கள் நிறுத்த மாட்டார்கள். இந்திய பெண்களுக்கும், தங்க ஆபரணங்களுக்குமான பந்தம் அப்படிப்பட்டது. ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது. இந்திய பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை காட்டிலும், மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். ஆம், உண்மைதான். முன்பெல்லாம் இந்திய இளைஞர்கள்தான் விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க பைக்குகளை எல்லாம் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர்.

ஆனால் தற்போது அவர்களுக்கு நிகராக இந்திய பெண்களும் விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க பைக்குகளை வாங்க தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவர் சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) பைக்கை வாங்கியிருந்தார்.

Woman Bike Racer Buys Kawasaki Ninja ZX-4RR

இதன் விலை (Price) சுமார் 20 லட்ச ரூபாய் ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த பைக்கை வாங்கியிருந்தாலும், நமது கலாச்சாரத்தை சற்றும் மறக்காமல், கோயிலில் அந்த பைக்கிற்கு அவர் பூஜை செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவிய நிலையில், அதே பாணியில் மற்றொரு பெண் தற்போது மிகவும் விலை உயர்ந்த பைக்கிற்கு கோயிலில் பூஜை செய்துள்ளார்.

offftrack என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த வைரல் வீடியோ (Viral Video) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தீபிகா (Deepika) என்பவரால், நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அவர்தான் தற்போது மிகவும் விலை உயர்ந்த பைக்கை வாங்கி, அதற்கு இந்திய பாரம்பரிய முறைப்படி பூஜை செய்துள்ளார்.

Kawasaki Ninja ZX-4RR

இவர் ஐதராபாத் (Hyderabad) நகரை சேர்ந்தவர் ஆவார். ஆனால் படிப்பிற்காக அமெரிக்காவின் (US) கலிஃபோர்னியாவில் (California) தற்போது வசித்து வருகிறார். கடல் கடந்து சென்றிருந்தாலும் கூட, நமது பாரம்பரியத்தை மறக்காமல், அவர் மிகவும் விலை உயர்ந்த பைக்கிற்கு ஐயரை வைத்து பூஜை செய்துள்ள நிகழ்வு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தீபிகா படிப்புடன், மோட்டார்ஸ்போர்ஸ் மீதும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். இவர் 2021 டிவிஎஸ் நேஷனல் சாம்பியன் (2021 TVS National Champion) ஆவார். தொழில்முறை பைக் ரேஸர்-ஆன இவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-4ஆர்ஆர் (Kawasaki Ninja ZX-4RR) பைக்கை வாங்கியுள்ளார்.

இந்திய சந்தையில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 9.42 லட்ச ரூபாயாக உள்ளது. ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக 12 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும். ஆனால் அமெரிக்க சந்தையில் இந்த பைக்கின் விலை வேறாக இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

விலை அடிப்படையில் பார்த்தால், இந்திய சந்தையில் டிரையம்ப் டேடோனா 660 (Triumph Daytona 660) மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-8ஆர் (Suzuki GSX-8R) போன்ற பைக்குகள் உடன், கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ்-4ஆர்ஆர் பைக் போட்டியிட்டு வருகிறது. மிகவும் விலை உயர்ந்த இந்த பைக்கில், 399 சிசி இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 79 பிஹெச்பி பவர் மற்றும் 39 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்ந்த அதே நேரத்தில் செயல்திறன் மிக்க பைக்கை வாங்கியவுடன், அதற்கு தேங்காய் உடைத்து, டயர்களில் எலுமிச்சை பழத்தை ஏற்றி பூஜை செய்து, தனது பயணத்தை தொடங்கியுள்ளார் தீபிகா!

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் பெண்களுக்கு ஸ்கூட்டரை கூட ஒழுங்காக ஓட்ட தெரியாது என்று கிண்டல் செய்யும் வகையிலான மீம்ஸ்களை (Memes) சமூக வலை தளங்களில் அதிகம் காண முடிகிறது. அத்துடன் பெண்களால் ஸ்கூட்டர்களின் சென்டர் ஸ்டாண்டையும் கூட போட முடியாது என பலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் சமீப காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள், இந்த கிண்டல்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கின்றன.

உண்மையிலேயே கட்டுப்படுத்துவதற்கு சற்று சிரமமான அதே நேரத்தில் அதிக எடை கொண்ட பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளை ஓட்டுவதற்கு பெண்கள் அதிக அளவில் ஆர்வமாக முன் வருவது ஆச்சரியமான ஒரு விஷயம்தான். வரும் காலங்களில் இன்னும் நிறைய பெண்களை நம்மால் பெர்ஃபார்மென்ஸ் பைக்குகள் உடன் பார்க்க முடியும் என உறுதியாக நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 8, 2025, 12:54 [IST]
English summary
Woman bike racer buys kawasaki ninja zx 4rr worth rs 12 lakh viral video all details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+