போலீஸை அதிர்ச்சியில் உறைய வைத்த பெண் பைக் ரைடர்! வெச்சிருந்த பொருளை பாத்து எல்லாரும் ஆடி போயிட்டாங்க! வீடியோ!

இந்தியாவின் பல்வேறு எக்ஸ்பிரஸ்வே சாலைகள் மற்றும் பாலங்களில், டூவீலர்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் எல்லாம் மற்ற வாகனங்கள் அதிவேகத்தில் வரும். ஆனால் டூவீலர்கள் மெதுவாக செல்ல கூடியவை. எனவே மற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால்தான், டூவீலர்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் டூவீலர்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் பந்த்ரா-வொர்லி சீ லிங்க் (Bandra-Worli Sea Link) ஒன்றாகும். இது மும்பை மாநகரில் கடல் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலம் ஆகும். இந்த பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் டூவீலரில் வந்து விட்டார்.

Woman Biker Threatens Traffic Cop

அவர் பெயர் நுபுர் பட்டேல் என்பதாகும். 26 வயதாகும் இவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மும்பையில் வசிக்கும் தனது சகோதரரை சந்திப்பதற்காக வந்தபோதுதான் நுபுர் பட்டேல் பந்த்ரா-வொர்லி சீ லிங்க் பாலத்தின் மீது டூவீலரில் ஏறியுள்ளார். அவர் வந்தது ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக் ஆகும்.

வெளியூரை சேர்ந்தவர் என்பதால், பந்த்ரா-வொர்லி சீ லிங்க் பாலத்தின் மீது டூவீலர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் விஷயம் அவருக்கு தெரியவில்லை. பாலம் தொடங்கும் இடத்தில் டூவீலர்கள் பயணம் செய்ய தடை என பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். இதை நுபுர் பட்டேல் கவனிக்கவில்லை என தெரிகிறது.

இதையெல்லாம் கவனிக்காமல் வந்த நுபுர் பட்டேலை, மும்பை போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் தடுத்து விசாரித்தார். அப்போது அவரை அச்சுறுத்தும் வகையில் நுபுர் பட்டேல் பேசியுள்ளார். இதன் காரணமாக மும்பை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், நுபுர் பட்டேல் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

அத்துடன் அவர் வந்த ராயல் என்பீல்டு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர துப்பாக்கி போன்ற ஒன்றையும் நுபுர் பட்டேல் வைத்திருந்தார். இதை பார்த்த போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஆனால் அது துப்பாக்கி அல்ல. சிகரெட் பற்ற வைக்க பயன்படுத்தப்படும் லைட்டர் ஆகும்.

அதையும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மும்பை போக்குவரத்து காவல் துறை அதிகாரியுடன், நுபுர் பட்டேல் வாக்குவாதத்தில் ஈடுபடும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அவரது வாக்குவாதத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் யாருக்கும் எந்தவிதமான பிரச்னைகளும் இருக்க கூடாது என்பதற்காகதான் போக்குவரத்து விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்னைகளை நம்மால் குறைக்க முடியும்.

குறிப்பாக பெரு நகரங்கள் மற்றும் அறிமுகம் இல்லாத புதிய இடங்களுக்கு செல்லும்போது, எங்கெல்லாம் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை? எவையெல்லாம் ஒரு வழிப்பாதைகள்? போன்ற விஷயங்களை முன் கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நன்மை பயக்கும். இல்லாவிட்டால் நுபுர் பட்டேல் போன்று பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 26, 2023, 17:53 [IST]
English summary
Woman biker threatens traffic cop viral video arrested
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+