பெண்களை புரிஞ்சிக்கவே முடியலயே... எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆண்கள் தான் அதிகமாம் - புதிய ரிப்போர்ட்!!

சாலையில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பற்றி நான் சொல்ல வேண்டியது இருக்காது என்றே நினைக்கிறேன், ஏனெனில் நாள் தோறும் நீங்களே பார்த்து கொண்டுதான் வருகிறீர்கள். நம் இந்தியாவை பொறுத்தவரையில் எலக்ட்ரிக்கில் இருசக்கர வாகனங்களை வாங்கவே வாடிக்கையாளர்கள் தற்போதைக்கு முன்வந்துள்ளனர், அதிலிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே அதிகளவில் விற்பனையாகுகின்றன.

மற்றப்படி, எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை இன்னமும் நம் நாட்டில் ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்பட பொருளாதாரத்தில் வளர்ந்த வெளிநாடுகளில் பெட்ரோல் & டீசல் வாகனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களின் மீதும் வாடிக்கையாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆண்களே பெரிதும் விரும்புவதாகவும், பெண்கள் அவ்வளவாக அவற்றில் கவனம் செலுத்துவதில்லை எனவும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்கள் மீது பெண்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை?

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெண் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பெரிதும் சிரமப்படுகின்றன. அமெரிக்காவில் கார்களை வாங்குவதில் 41.2 சதவீதத்தினர் பெண்கள் என்றாலும், அவர்களுள் வெறும் 28 சதவீதத்தினர் மட்டுமே எலக்ட்ரிக் கார்களை தேர்வு செய்வதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது புதியதாக கார் வாங்கும் 100 பெண்களில் வெறும் 28 பேர் மட்டுமே எலக்ட்ரிக் கார்கள் பக்கம் செல்கின்றனர். அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டெஸ்லா மட்டுமே பெண் வாடிக்கையாளர்களை பெறுவதில் சற்று சிறப்பாக செயல்படுகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் 33.1% பெண்கள் ஆவர்.

எலக்ட்ரிக் வாகனங்கள் மீது பெண்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை?

அதாவது, 100 டெஸ்லா வாடிக்கையாளர்களுள் 33.1 பேர் பெண்கள். ஆனால் அமெரிக்காவின் மற்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களான போலிஸ்டர், லுசிட் மற்றும் ரிவியன் பிராண்ட்களை நம்பி வரும் பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். இந்த 3 இவி பிராண்ட்களின் வாடிக்கையாளர்களுள் பெண் வாடிக்கையாளர்களின் சதவீதங்கள் முறையே வெறும் 24.7%, 19.5% மற்றும் 14.5% மட்டுமே.

எஸ்&பி க்ளோபல் மொபைலிட்டி நிறுவனத்தின் தலைமை பன்முகத்தன்மை அதிகாரி மார்க் பிளாண்ட் இதுகுறித்து பேசுகையில், இந்த ஆய்வில் திரட்டப்பட்டுள்ள தகவல்களை கருத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றவர், ஆண்களை காட்டிலும் வாகனத்தின் ரேஞ்ச் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் பெண்கள் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கை உடனும், சற்று பதற்றத்துடனும் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்கள் மீது பெண்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை?

அத்துடன், இவி பிராண்ட்கள் இந்த விஷயத்தில் கூடுதலாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரிசெய்ய பார்க்க வேண்டும் எனவும் கூறிய மார்க் பிளாண்ட், வரும் ஆண்டுகளில் பல்வேறு பிராண்ட்கள் பூஜ்ஜிய-மாசு-உமிழ்வு ரேஞ்சுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும், ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாலின வித்தியாசமின்றி அவர்களது அனைத்து வாடிக்கையாளர்களையும் இவி பிரிவிற்கு கொண்டுவருவதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பெண்கள் பெரியதாக எலக்ட்ரிக் வாகனங்களை விரும்புவதில்லை என்பதும், அவர்களில் வெறும் 28% மட்டுமே எலக்ட்ரிக் கார்களை வாங்க முன்வருவது நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இந்த விஷயம் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? என்பதை பற்றியும், தெரிந்திருந்தால் இந்த விஷயத்தில் உள்ள குறைகளை களைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன? என்பதை பற்றியும் இந்த ஆய்வு முடிவுகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Article Published On: Tuesday, February 28, 2023, 13:53 [IST]
English summary
Woman car buyers more anxious about range and safety than men new study
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X