75 லட்ச ரூபா கார் வீணா போச்சு... கொஞ்ச நேரம் ஓரமா நிப்பாட்டியிருக்கலாம்! காரணத்தை கேட்டதும் ஷாக் ஆன மக்கள்...

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை (Rain) பெய்து வருகிறது. அத்துடன் ஒரு சில பகுதிகளில் புழுதி புயலும் (Dust Storm) வீசி கொண்டுள்ளது. மும்பை (Mumbai) நகரில் சமீபத்தில் புழுதி புயல் வீசி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.

மும்பை மட்டுமல்லாது, குஜராத் (Gujarat) மாநிலம் சூரத் (Surat) நகரிலும், புழுதி புயல் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நடைபெற்ற சாலை விபத்து (Road Accident) ஒன்றில், மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் சேதமடைந்திருப்பது, மெர்சிடிஸ்-பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes-Benz C-Class) கார் ஆகும். இது சொகுசு செடான் ரகத்தை (Luxury Sedan) சேர்ந்தது. சம்பவத்தன்று சூரத் நகரில், மிக கடுமையான புழுதி புயல் வீசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளால் சாலையை தெளிவாக பார்க்க முடியாமல் போயுள்ளது.

Woman Crashes Rs 75 Lakh Mercedes Benz C-Class

அந்த நேரத்தில் பெண் ஒருவர் மெர்சிடிஸ்-பென்ஸ் சி-க்ளாஸ் காரை ஓட்டி கொண்டு வந்தார். சாலையை தெளிவாக பார்க்க முடியாத காரணத்தால், கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த சாலை விபத்தின் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, சாலை விபத்தில் சிக்கியது மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் சி-க்ளாஸ் கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 58.60 லட்ச ரூபாயாக உள்ளது.

Mercedes Benz C-Class Accident

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 62.70 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். எனவே இந்த காரின் ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 75 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கும். இவ்வளவு விலை உயர்ந்த கார் புழுதி புயல் காரணமாக சாலை விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இது புத்தம் புதிய கார் ஆகும். இந்த சாலை விபத்தில் காரின் முன் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. கார் ஓட்டும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை, இந்த சாலை விபத்து அனைவருக்கும் கற்று கொடுத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் ஓட்டும்போது சாலை தெளிவாக தெரியாவிட்டால், மேற்கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. காரை சாலையோரமாக பார்க்கிங் செய்து விட்டு ஓய்வு எடுக்கலாம். ஆனால் சாலையோரமாக பார்க்கிங் செய்யும்போது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு/பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.

இல்லாவிட்டால் இது போன்ற சாலை விபத்துக்களில் சிக்க நேரிடலாம் என்பதை அனைவரும் மனதில் கொள்வது சிறந்தது. இந்த விபத்தில் காரின் ஹெட்லேம்ப்கள், முன் பக்க க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் பானெட் உள்ளிட்ட பாகங்கள் எல்லாம் சேதமடைந்துள்ளன. இவற்றை சரி செய்ய அதிக செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இன்சூரன்ஸ் போன்ற பாதுகாப்பு விஷயங்கள் இருந்தாலும் கூட, கவனமாக செயல்படுவதன் மூலம் இது போன்ற சாலை விபத்துக்களை தவிர்த்து விடலாம். இந்தியாவில் வெகு விரைவில் பருவ மழை தொடங்கவுள்ளது. அந்த சமயங்களில் சாலையை தெளிவாக பார்க்க முடியாமல் போகலாம். எனவே முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மை பயக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 17, 2024, 13:13 [IST]
English summary
Woman crashes rs 75 lakh mercedes benz c class viral video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+