ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

பெண் ஒருவர் சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

இன்று ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்களும் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் வேலையில் பாலின பாகுபாடு களையப்பட்டு வருகிறது. எனினும் கனரக வாகனங்களை இயக்கும் பெண்களை பார்ப்பது என்பது கொஞ்சம் அபூர்வமாகதான் இருந்து வருகிறது. தற்போதைய சூழலில், பெண்கள் வாகனங்களை அதிகளவில் இயக்குகின்றனர்.

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

அதில் எந்தவிதமான மாற்று கருத்துக்களுக்கும் இடமில்லை. ஆனால் டூவீலர், கார் போன்ற வாகனங்களையே பெண்கள் அதிகளவில் இயக்கி வருகின்றனர். எனினும் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களை இயக்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பெண் ஒருவர் பேருந்தை இயக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

பொதுவாக பேருந்து போன்ற கனரக வாகனங்களை இயக்குவது மிகவும் சவாலான விஷயம். குறிப்பாக நகர சூழல்களில் பேருந்துகளை இயக்குவது சவால் நிறைந்த பணி என்பதில் சந்தேகமில்லை. போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மத்தியில் பேருந்தை கவனமாக ஓட்டி செல்ல வேண்டும். எனவேதான் பெண்கள் பேருந்து ஓட்டுவதற்கு அதிகளவில் முன்வருவதில்லை.

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

இப்படிப்பட்ட சூழலில்தான் பெண் ஒருவர் பேருந்தை ஓட்டும் வீடியோ நமக்கு கிடைத்துள்ளது. இத்தனைக்கும் அவர் இந்திய பெண்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து கொண்டு பேருந்தை ஓட்டியுள்ளார். தற்போதைய சூழலில் பெண்கள் சேலை அணிந்து கொண்டே பல்வேறு வேலைகளையும் செய்து வருகின்றனர்.

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

அதை நிரூபிக்கும் வகையில் இந்த பெண் சேலை அணிந்து கொண்டு பேருந்தை ஓட்டியுள்ளார். பேருந்தை இயக்க தொடங்கும் முன்பு அவர் பாதுகாப்பிற்காக சீட் பெல்ட்டை முறைப்படி அணிவதையும் நம்மால் வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த பெண் சேலை அணிந்து கொண்டு ஓட்டியது வால்வோ பேருந்து என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. எந்தவொரு வேலையிலும் பாலின பாகுபாடு இருக்க கூடாது என்பதை இந்த பெண் நிரூபித்துள்ளார். அவரின் பெயர் உள்பட கூடுதல் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் சமூக வலை தளங்களில் அந்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல... சேலை கட்டிக்கொண்டு வால்வோ பஸ்ஸை ஓட்டிய பெண்... வைரலாகும் வீடியோ!

அந்த பெண் சேலை கட்டிக்கொண்டு ஒடிசாவில் இருந்து மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தா வரை பேருந்தை இயக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையில் பாராட்டத்தக்க விஷயம் ஆகும். இதற்கு முன்பாகவும் பேருந்து, லாரிகளை இயக்கும் பெண்கள் குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க் வாசகர்களுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மும்பையில் பெஸ்ட் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றும் இளம்பெண் குறித்தும், கொல்கத்தாவில் பேருந்துகளை இயக்கி வரும் இளம்பெண் குறித்தும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செய்திகளை வெளியிட்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இத்தகைய பெண்கள் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Woman Drives A Bus In Saree From Odisha To Kolkata - Viral Video. Read in Tamil
Story first published: Wednesday, June 2, 2021, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X