கூகுள் கம்பெனி பதில் சொல்லாதுனு நெனைச்சி இருப்பாங்க! ஆடி காரை பழைய இரும்பு கடைக்கு தான் கொண்டு போகனும்!
பெண்கள் வாகனம் ஓட்டிக் கொண்டு வந்தாலே கொஞ்சம் தள்ளியே இருப்பது பாதுகாப்பானது என்கிற கருத்து பரவலாக நம் மக்களிடையே உள்ளது. ஆனால், நாம் பார்க்க போகும் இந்த சம்பவத்தில் பாவம் பெண் டிரைவரின் மீது எந்த தவறும் இல்லை. கூகுள் மேப் (Google Map) காலை வாரி விட்டுள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
கூகுள் மேப்பை பார்த்தப்படி வாகனம் ஓட்டி, குளம், குட்டையிலோ அல்லது அடுத்தவர் வீட்டிற்கு உள்ளேயோ வாகனத்தை கொண்டு போய் நிறுத்தியவர்கள் பலரை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வகையில், மும்பையில் ஆடி க்யூ3 (Audi Q3) என்கிற லக்சரியான எஸ்யூவி (SUV) காரை ஓட்டிக்கொண்டு சென்ற பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உள்ளார்.

காரினுள் டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள தொடுத்திரையில் கூகுள் வரைப்படத்தை பின்பற்றியப்படி சென்றவர், ஒருகட்டத்தில் சாலை என நினைத்து அருகில் இருந்த கடற்கழி நீரில் விழுந்துள்ளார். இந்த பகுதிக்கு மேலே பெரிய அளவிலான மேம்பாலம் ஒன்று சென்றுள்ளது. அதன் மீதுதான் இந்த பெண் சென்றிருக்க வேண்டும். ஆனால், கூகுள் மேப்பை பின்பற்றி மேம்பாலத்திற்கு கீழே சென்றுள்ளார். இதுகுறித்த விபரங்கள் நியூஸ்9 லைவ் யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, நவி மும்பையில் பெலாபூர் பகுதியில் இந்த விபத்து மாலை நேரத்தில் நடந்துள்ளது. கூகுள் மேப்பை பயன்படுத்தி சென்றதால் விபத்து ஏற்பட்டதாக விபத்திற்குள்ளான டிரைவர் கூறியதால், இந்த சம்பவத்தை அறிந்த பலரும் கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தினர். இந்த நிலையில், விபத்து நடந்து ஒரே நாளில் இந்த சம்பவத்துக்கு கூகுள் தனது பதிலை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், பெண் ஓட்டி சென்ற வழித்தடத்தை எங்களது கூகுள் வரைப்படத்தில் எவருக்கும் பரிந்துரைப்பது இல்லை என்றும், பொதுவாகவே மேம்பாலத்திற்கு அடியில் பயணிப்பதற்கான வழித்தடத்தை கூகுள் மேப் வழங்குவது இல்லை எனவும், விபத்திற்குள்ளான பெண் டிரைவர் சென்ற வழித்தடத்தை கூகுள் மேப் பரிந்துரைப்பது இல்லை என்பதை எங்களது சரிப்பார்ப்பின் மூலம் உறுதி செய்து உள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் தெரிவிப்பது உண்மைதான். பெரும்பாலும் கூகுள் மேப் மேம்பாலத்திற்கு அடியில் செல்ல பரிந்துரைப்பது கிடையாது. தெரியாமல் மேம்பாலத்திற்கு அடியில் வந்துவிட்டு அதன்பின் கூகுள் மேப்பை பயன்படுத்தினாலோ அல்லது மேம்பாலத்திற்கு அடியில் திரும்பி செல்ல வேண்டியதாக இருந்தாலோ மட்டுமே மேம்பாலத்திற்கு கீழ் வழியை காட்டும்.

அதுவும், இந்த சம்பவம் நடந்துள்ள பெலாபூர் பகுதியில் நிச்சயமாக கூகுள் மேப் மேம்பாலத்திற்கு அடியில் செல்ல கூறி இருக்காது. ஏனெனில், பெலாபூர் மேம்பாலத்திற்கு கீழே பெரிய அளவிலான கடற்கழி உள்ளது. அதன் ஆழம் அதிகம் என்பதினாலேயே மேம்பாலத்தையும் நன்கு உயரமாக கட்டியுள்ளனர். ஆதலால், இந்த சம்பவத்தில் பெண் டிரைவரின் மீதுதான் தவறு உள்ளது போல் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி க்யூ3 காரில் சென்ற இந்த பெண் தெரியாமல் மேம்பாலத்திற்கு கீழே வந்திருக்கக்கூடும் அல்லது வேண்டுமென்றே போலீசாரிடம் சிக்க கூடாது என்பதற்காக மேம்பாலத்திற்கு கீழே காரை ஓட்டி சென்றிருக்கலாம். ஆதலால், சம்பவத்தின்போது அந்த பெண் மது போதையில் இருந்தாரா என்பதையும், அவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம், கார் பதிவு சான்றிதழ் உள்ளதா என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









