பசங்க சன்ரூஃப் வழியா எட்டி பார்த்தா கூட புடிச்சு அபராதம் போடுறாங்க!! இந்த பெண்ணுக்கு செம தில்லு...

டாடா ஹெக்ஸா (Tata Hexa) காரில் சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக சென்ற பெண் வாகன ஓட்டி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பலரது கண்டனங்களை பெற்றுள்ளது. யார் இந்த பெண்? எதற்காக இவ்வாறான செயலில் ஈடுப்பட்டு உள்ளார்? என்பதை பற்றி இனி பார்க்கலாம், வாங்க.

சாலையில் பெண் டிரைவர்களை கண்டால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள் என பல ஆண்கள் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். பிரேக் இருந்தாலும் ஸ்கூட்டரை கால்களால் நிறுத்துவது, சைடு மிரர்களை பார்க்காமல் வாகனம் ஓட்டுவது என பெண் வாகன ஓட்டிகளை வைத்து நிறைய மீம்ஸ்களையும், பதிவுகளையும் இணையத்தில் பார்த்திருக்கிறோம்.

woman drives on wrong side

இந்த கேலி, கிண்டல்களுக்கு உள்ளானதினாலேயே பெண்கள் பலர் இப்போதெல்லாம் வாகனம் ஓட்டுப்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட ஆரம்பித்துவிட்டனர். இருப்பினும், சில பெண் வாகன ஓட்டிகள் இப்போதும் மாறாமல் இருப்பதையும் காண முடிகிறது. அத்தகைய பெண் ஒருவரை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

இதுதொடர்பாக யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம். இந்த வீடியோவில், டாடா ஹெக்ஸா எம்பிவி காரில் பெண் ஒருவர் ஹைவேயில் சுமார் 80kmph வேகத்தில் சென்றுள்ளார். ஹைவேயில் 80kmph வேகத்தில் செல்வது ஒன்றும் தவறு இல்லையே என நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. இதில்தான் விஷயமே உள்ளது, ஏனென்றால், இந்த பெண் சாலையின் எதிர்திசையில் காரை ஓட்டியுள்ளார்.

woman drives on wrong side

வீடியோவை வைத்து பார்க்கும்போது, இது நடந்திருப்பது தேசிய நெடுஞ்சாலை என்பது தெரிகிறது. ஆனால், இந்தியாவில் எந்த பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது தெரியவில்லை. மணிக்கு 100kmph வேகத்தில் வாகனங்கள் பறந்துக் கொண்டிருக்கும் நேஷ்னல் ஹைவேயில் எதிர்திசையில் வாகனம் ஓட்டுவதே முதலில் தவறு, அதிலிலும் இந்த பெண் 80kmph வேகத்தில் காரை ஓட்டியுள்ளார்.

இது எந்த அளவிற்கு ஆபத்தானது என்றால், 100kmph வேகத்தில் எதிரே எதாவது வாகனம் வந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்து நடந்து முடிந்துவிடும். மேலும், இந்த பெண் சென்ற நெடுஞ்சாலையில் பனி மற்றும் தூசிகளினால் சாலை தெளிவாக தெரியாததை வீடியோவில் காண முடிகிறது. அப்படியென்றால், ஆபத்து இன்னும் அதிகம் என்று அர்த்தம்.

woman drives on wrong side

இந்த பெண்ணின் கார் தவறான திசையில் வருவதை கண்ட மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வேகத்தை குறைத்து, அவருக்கு வழிவிடுவதை வீடியோவில் காணலாம். இந்த சம்பவத்தின்போது, இந்த ஹெக்ஸா காரினுள் வேறு சில பெண்களும் இருந்துள்ளனர். அதாவது, மொத்தமாக பெண்கள் அடங்கிய காராக இந்த டாடா ஹெக்ஸா இருந்துள்ளது. நல்ல வேளையாக எவரொருவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இத்தகைய செயலில் ஈடுப்பட்டதற்காக, சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. இவர் டிரைவ் செய்த டாடா ஹெக்ஸா காரின் நம்பர் பிளேட் குறித்த விபரங்களும் வெளிவரவில்லை. ஆனால், விரைவில் இந்த பெண் டிரைவரை போலீஸார் அடையாளம் கண்டு தக்க நடவடிக்கைகளை எடுப்பர் என நம்புவோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதற்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலானோரிடத்தில் இல்லாததே காரணம். ஆதலால், சாலை விழிப்புணர்வுகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் அதேநேரம், இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோருக்கு விதிக்கும் அபராதங்களையும் இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2024, 12:34 [IST]
English summary
Woman drives tata hexa car dangerously on wrong side of highway
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X