ஒரு கையில் குழந்தை... மறு கையில் ஆட்டோ ஸ்டேரிங்!! இணையத்தில் வைரலாகும் யார் இந்த ஏழை தாய்?
ஒரு கையில் குழந்தையை பார்த்து கொண்டு, மறு கையில் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாவையும் இயக்கும் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் அந்த பெண்? எங்கு உள்ளார்? என்ற கேள்விக்களுக்கான பதில்களாக இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.
எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை என்ற கருத்தை நாம் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும். உலகின் பெரும் பணக்காரர்களை கொண்ட இதே இந்தியாவில்தான் தினந்தோறும் வேலைக்கு சென்றால்தான் வீட்டில் உணவு என வாழ்பவர்களும் இருக்கின்றனர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், நம் நாட்டில் அத்தகையவர்களே சற்று அதிகமாக உள்ளனர்.

அதிலிலும், குழந்தைகளை எப்படியாவது வாழ்க்கையில் கரை சேர்த்திட எண்ணும் ஒவ்வொரு ஏழை தாயின் தினசரி வாழ்க்கையும் போராட்டம் தான். அத்தகைய ஏழை தாய் ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். உத்திர பிரதேசம், ராமர் பிறந்து, வளர்ந்து பின்னர் ஆட்சி செய்த நாடு என கூறுவர். அத்தகைய மாநிலத்தில்தான் இந்த ஏழை பெண் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டி தனது அன்றாட வாழ்க்கையை நகர்த்தி கொண்டு வருகிறார்.
உத்திர பிரதேச மாநிலம் உள்பட பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாக்கள் பிரபலமானவை. நம்ம ஊர் ஆட்டோவை போன்றதுதான். ஆனால் நம்ம ஊரில் ஆட்டோவை பயன்படுத்த வேண்டுமெனில் அதனை ஆர்டிஓ-வில் பதிவு செய்ய வேண்டும், அதை விட முக்கியம் ஆட்டோவை இயக்க லைசன்ஸ் வேண்டும். ஆனால் வட இந்திய மாநிலங்களில் பிரபலமானவையாக மேலே குறிப்பிடப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவை இயக்க இது எதுவுமே தேவையில்லை.

நம்ம ஊரில் இயக்கப்படும் ஆட்டோக்கள் பாதுகாப்பற்றவையாக பல வெளிநாட்டு அரசாங்கங்களால் பார்க்கப்படுகிறது. இதனால்தான் பொருளாதாரத்தில் வளர்ந்த பல வெளிநாடுகளில் ஆட்டோக்களை பார்க்க முடிவதில்லை. ஆனால், நாம் இந்த செய்தியில் பார்க்கும் ஏழை பெண்மணி மற்றும் அவரது கை குழந்தைக்கு அன்றாட உணவளித்துவரும் ஆட்டோ ரிக்ஷா நம்ம ஊர் ஆட்டோக்களை காட்டிலும் மிகவும் பாதுகாப்பு அற்றவை.
பைக் ஒன்றில் கூடுதலாக ஒரு சக்கரம் இணைத்து, மேலே மேற்கூரையை இணைத்தது போன்ற இந்த ஆட்டோ ரிக்ஷாக்கள் இருக்கும். இதனாலேயே, கை குழந்தை உடன் ஆட்டோ ரிக்ஷாவை ஓட்டும் இந்த பெண்ணை இணையத்தில் பலர் பாராட்டும் அதேவேளையில், சிலர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என அறிவுரையும் வழங்கியுள்ளனர்.
வைரல் பயானி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு கையில் குழந்தையை சுமந்தப்படி, மறு கையில் ரிக்ஷாவின் ஸ்டேரிங்கை பிடித்திருக்கும் இந்த ஏழை தாயின் வாழ்க்கை பலரை மனம் உருக வைத்துள்ளது. இந்த வீடியோவை பதிவிட்டவர், "கேப்ஷன் தேவையில்லை, அம்மா" என்ற கேப்ஷன் உடன் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
கைகுழந்தையாக இருப்பினும், ஒரு கையில் குழந்தையை சுமக்க முடியாது என்பதால், ஒரு காலை சற்று மேலே தூக்கியப்படி இந்த பெண் ரிக்ஷா ஓட்டுவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. இது இன்னும் ஆபத்தானது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இதுவரையில் மட்டுமே 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 2.5 இலட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இவ்வாறு ஒரு கையில் குழந்தையை வைத்து கொண்டு வாகனம் ஓட்டுவது தவறான செயல் என்றாலும், இந்த ஏழை பெண்ணிற்கு வேற ஆப்ஷன் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் கைகுழந்தை உடன் ஒருவர் வேலை பார்க்கிறார் என்றால், இவர்தான் இவரது வீட்டில் வேலைக்கு செல்லும் ஒரே நபராக இருக்க வேண்டும். குழந்தையையும் இவர்தான் பார்த்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications








