இந்தியாவையே தனி ஆளாக கிளாசிக் 350 பைக்கில் சுற்றி வந்த சிங்க பெண்... என்ன இவங்க சென்னையைச் சேர்ந்தவங்களா!
ஒரு காலத்தில் வீட்டை விட்டே வெளியே வர தயங்கிய பெண்கள், இப்போது அனைத்து துறையிலும் தங்களின் கால் தடத்தைப் பதித்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, வாகன துறையில் சமீப காலமாக பெண்கள் ஆற்றி வரும் பங்களிப்பு என்பது அளப்பறியாததாக உள்ளது.
இந்த நிலையிலேயே, வாகனத்தில் டிராவல் செய்வதையே ஓர் சாதனையாக செய்திருக்கின்றார் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா காசிம் நூர் எனும் இளம் பெண். இந்த செயலின் வாயிலாக பெண்கள் அனைவருக்கும் அவர் ரோல் மாடலாகவே மாறிவிட்டார். நம்ம ஊரில் இருக்கும் ஒரு சில பெண்கள் அருகில் இருக்கும் கடைக்கு சென்று வரவே டூ-வீலர்களைப் பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

இந்த மாதிரியான சூழலில், இந்த இளம் பெண் தனி ஒரு ஆளாக இந்தியாவையே வலம் வந்திருக்கின்றார். நம்மால் இந்த துறையில் சாதிக்கவே முடியாது என எண்ணிக் கொண்டிருப்போர் மத்தியில் சென்னையைச் சேர்ந்த ரேஷ்மா காசிம் நூர், பைக்கையே தன்னுடைய பிரதான வாகனமாகக் கொண்டு இந்தியாவைச் சுற்றி வந்திருக்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
நாடு முழுவதும் என இதுவரை அவர் சுமார் 9 ஆயிரம் கிலோ மீட்டர் வரை டிராவல் செய்திருக்கின்றார். இந்த நிலையிலேயே தன்னுடைய அடுத்த பயண பிளான் பற்றிய தகவலை அவர் வெளியிட்டிருக்கின்றார். தாய் நாட்டை முழுமையாக சுற்றி வந்து சாதனைப் படைத்துவிட்ட இந்த சிங்கப் பெண் அடுத்ததாக உலக நாடுகளை சுற்றி வருவதை இலக்காக நிர்ணயித்துள்ளார்.

இதற்காக அவர் அடுத்ததாக தேர்ந்தெடுத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். இங்கேயே தன்னுடைய அடுத்த பைக் பயணத்தை மேற்கொள்ள ரேஷ்மா காசிம் நூர் திட்டமிட்டுள்ளார். இவர் தனி ஆளாகவே இந்தியா பயணித்தார் முடித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பயணத்திற்காக அவர் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கை பயன்படுத்தி இருக்கின்றார்.
இவர் பயணத்தை தொடங்கியது கர்நாடகாவின் பெங்களூருவில் ஆகும். இங்கிருந்தே இவருடைய 9 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்திற்கான தொடக்கப் புள்ளி போடப்பட்டு இருக்கின்றது. இங்கிருந்து அடுத்ததாக மஹாராஷ்டிரா மாநிலத்தை அவர் சென்றடைந்திருக்கின்றார். பின்னர் அங்கு புனேவின் சாலைகளில் வட்டமடித்த ரேஷ்மா காசிம் நூர், அதற்கு அடுத்தபடியாக டாமன் மற்றும் தியூ பகுதிகளில் வலம் வந்திருக்கின்றார்.

இதைத்தொடர்ந்து, குஜராத், பிஹார், டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அவர் பயணித்திருக்கின்றார். இதோடு அவருடைய பயணத்தை முடிக்கவில்லை. அவருடைய பயணம் நேபால் வரை நீண்டிருக்கின்றது. இத்தகைய நீளமான பயணத்தைத் தொடர்ந்தே அவர் தற்போது அடுத்ததாக சவுதி அரேபியா பயணத்தைத் தொடங்குவதற்கான முயற்சியில் இளம்பெண் களமிறங்கி இருக்கின்றார்.
இந்த பயணம் தனக்கு பல்வேறு அனுபவங்களை வழங்கியதாக ரேஷ்மா தெரிவித்து இருக்கின்றார். குறிப்பாக, அனைத்து இடங்களிலும் மிக சிறந்த தங்கும் இடம் கிடைக்காது. பல நேரங்களில் டெண்ட்டுகளிலும், உள்ளூர் வாசிகளின் வீடுகளையே தான் தங்கும் இடமாக பயன்படுத்தியதாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.
இதுதவிர, பல நேரங்களில் குருத்வார்கள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளிலும் அவர் தங்கி இருக்கின்றார். நம்மில் பலர் இதுமாதிரியான இடங்களில் தங்குவதற்கே யோசிப்போம். ஆனால், தனி ஆளாக கிளம்பிய சிங்க பெண் ரேஷ்மா எதையும் பொருட்படுத்தாமல் லட்சியத்தை நோக்கி பயணித்திருக்கின்றார். ஆகையால், இந்த பயணத்தின் வாயிலாக முழுக்க முழுக்க தனித்துவமான அனுபவத்தையே அவர் பெற்றிருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சவுதி அரேபியா பயணத்திலும் அவர் மாறுபட்ட பயண அனுபவத்தைப் பெறுவார் நம்புகின்றார். இவர் இந்தியா சுற்றுப் பயணத்தை முடித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகுவது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக அவர் பயன்படுத்தியது கிளாசிக் 350 பைக் என்பது அந்த பைக் காதலர்களை பெருமைக்குள்ளாகும் வகையில் அமைந்திருக்கின்றது. நீண்ட தூர பயணத்தை சிறப்பாக முடிக்கே இந்த பைக்கே ரேஷ்மாவிற்கு பெரும் உதவியாக இருந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









