அபராத செல்லாணை பெறுவதில் சாதனை படைத்த பெண்.. எந்த ஊரு காரியோ!.. இந்த கிழி கிழிச்சியிருக்காங்க!..

ஓர் பெண் உலக சாதனைகளைப் பெற்றுக் குவிப்பதைப் போல அபராத செல்லாண்களைப் பெற்று குவித்துக் கொண்டு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை சுமார் 270 அபராத செல்லாண்களை அந்த ஒரே ஒரு பெண் பெற்றிருப்பது அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கின்றது.

போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவல்துறை அபராதத்தை விதித்துக் கொண்டு இருக்கின்றது. போக்குவரத்து விதிமீறல்களே பல்வேறு முரண்பாடான சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. குறிப்பாக, சாலை விபத்திற்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணமாக போக்குவரத்து விதிமீறல்களே காரணமாக இருக்கின்றன.

Woman traffic violator

எனவேதான் இந்த விஷயத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கையை போக்குவரத்துக் காவல்துறை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையிலேயே, சாலையோரங்களில் சிசிடிவி கேமிராக்களை அமைத்து போக்குவரத்து காவல்துறையினர் விதிமீறல் வாதிகளுக்கு அபராத செல்லாண்களை அவர்களின் வீட்டுக்கே அனுப்பி வைத்துக் கொண்டு உள்ளனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே ஒரே ஒரு பெண்ணுக்கு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறை சுமார் 270 அபராத செல்லாண்களை வழங்கி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைவிட பேரதிர்ச்சி என்னவென்றால் ஒட்டுமொத்த அபராத செல்லாணின் மதிப்பு ரூ. 1.36 லட்சம் என கூறப்படுகின்றது.

Traffic violator

கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே இந்த விசித்திர சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வலம் வரும் அந்த பெண் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதை தொடர் கதையாக்கி வந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவருக்கு இந்த அளவிற்கு அதிக அபராத செல்லாண் வழங்கப்பட்டு இருக்கின்றது.

தலைக் கவசம் அணியாமல் பயணித்தது, சிக்னலை மதிக்காமல் சென்றது மற்றும் மூன்று பேர் பயணித்தது போன்ற போக்குவரத்து விதிமீறல்களையே அவர் அதிகளவில் செய்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது தவிர, தவறான பாதையிலும் அவர் அதிகளவில் பயணித்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு இருக்கின்றார்.

அவர் செய்த பெரும்பாலான போக்குவரத்து விதிமீறல்கள் மிகவும் ஆபத்தானவை ஆகும். குறிப்பாக, தலையில் கவசம் இல்லாமல் பயணிப்பது மிக மிக ஆபத்தானது. தலைக்கவசம் இல்லாமல் பயணித்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிட்டால் உயருக்கே ஆபத்தான சூழல் ஏற்படக் கூடும்.

இதனால்தான் டூ-வீலரை ஓட்டுபவர் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், இதனை இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பெரிய அளவில் பொருட்படுத்திக் கொள்வதில்லை. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே பெங்களூரு பெண்ணின் செயல் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, மேலே கூறிய எந்தவொரு விதியையும் பெங்களூருவைச் சேர்ந்த அந்த பெண் மதித்ததாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே அவர் பற்றிய விபரங்கள் தற்போது இணையத்தில் மிகப் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகின்றது. ஓர் பெண் மிகப் பெரிய அபராதத் தொகையுடன் சிக்குவது இதுவே முதல் முறை என கருதப்படுகின்றது.

அதேவேளையில், இதுபோன்று அதிகபட்ச அபராதத்தைப் பெற்ற சம்பவங்கள் பல இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், இதே பெங்களூருவைச் சேர்ந்த ஹோண்டா ஆக்டிவா பயன்பாட்டாளர் ரூ. 3.04 லட்சம் அபராதம் வரும் அளவிற்கு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று சம்பவங்கள் இன்னும் தொடர்கதையாகி வருவது கவலையளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் பொருட்டு உச்சபட்ச அபராதத்தை விதித்துக் கொண்டிருக்கின்றது போக்குவரத்துக் காவல்தறை. இதன் விளைவாகவே அபராதத் தொகை லட்ச ரூபாயைத் தொடும் அளவிற்கு சிலருக்கு உயர்ந்துக் காணப்படுகின்றது. இருப்பினும், ஒரு சில வாகன ஓட்டிகள் மிகவும் தைரியமாக விதிமீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 19:28 [IST]
English summary
Woman got 270 traffic violation chellan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+