திடீர்னு வேகமா போன சைக்கிள் ரிக்ஸா... திரும்பி பாத்த டிரைவர் மெரண்டு போயிட்டாரு... இப்படிலாம் கூட நடக்குமா!

இந்தியாவில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய பயணங்களுக்கும், சரக்கு போக்குவரத்திற்கும் மோட்டார் வாகனங்களைதான் பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால் இந்தியாவில் இன்னமும் சைக்கிள் ரிக்ஸாக்களும் இருக்கவே செய்கின்றன. குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக, கொளுத்தும் வெயிலில் நிறைய பேர் சிரமப்பட்டு சைக்கிள் ரிக்ஸாக்களை ஓட்டி வருகின்றனர். சாலையில் அவர்களுக்கு போதுமான உதவிகள் கிடைக்கிறதா? என்றால், கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சாலையில் சிரமப்படும் சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பாடத்தை பெண் ஒருவர் அனைவருக்கும் புகட்டியுள்ளார்.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனர் ஒருவரை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் சரக்குடன் பாலம் ஒன்றின் மீது ஏறி கொண்டுள்ளார். பொதுவாக மோட்டார் வாகனங்களே சரக்குடன் பாலத்தின் மீது ஏறும்போது சற்று திணறும்.

Woman Helps Cycle Rickshaw Driver

அப்படி இருக்கும்போது முழுமையாக மனித உழைப்பின் மூலமாக இயங்க கூடிய சைக்கிள் ரிக்ஸாக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சரக்குடன் பாலத்தின் மீது அவற்றை ஏற்றுவது கடினமான விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் பின்னால் இருந்து யாராவது தள்ளி விட்டால், இந்த பணி கொஞ்சம் எளிமையாக மாறும்.

இதைதான் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் பெண் செய்கிறார். அவர் பின்னால் இருந்து சைக்கிள் ரிக்ஸாவை தள்ள, அதன் ஓட்டுனர் கொஞ்சம் எளிமையாக பாலத்தின் மீது ஏறி விட்டார். ஆனால் அந்த இளம்பெண் இந்த உதவியுடன் நின்று விடவில்லை.

அந்த சைக்கிள் ரிக்ஸாவின் ஓட்டுனருக்கு உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றையும் அந்த பெண் வழங்கினார். அத்துடன் சால்வை அணிவித்து, அந்த சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனரின் உழைப்பிற்கும் மரியாதை செய்தார். இதன் காரணமாக அந்த பெண்ணுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சமூக வலை தளங்களில் வேகமாக பிரபலமாக வேண்டும் என்பதற்காக தற்போது நிறைய பேர் பல்வேறு வகையான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ கூட, அதற்காக எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதற்காக இந்த முயற்சியை விமர்சிக்க வேண்டியதில்லை. இந்த முயற்சியின் மூலம் ஒரு சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனர் பயனடைந்துள்ளார். அத்துடன் சாலையில் சிரமப்பட்டு ஓட்டும் சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பாடத்தையும் இந்த வைரல் வீடியோ நம் அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தற்போது நிறைய பேர் வாகனங்களில் மிகவும் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் தவறான முன்னுதாரணத்தையும் உருவாக்குகிறது. இது போன்ற முயற்சிகளுடன் ஒப்பிடும்போது, சைக்கிள் ரிக்ஸா ஓட்டுனருக்கு உதவி செய்த பெண்ணின் முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 13:44 [IST]
English summary
Woman helps cycle rickshaw driver viral video
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+