காஸ்ட்லி காரில் வந்த பணக்கார வீட்டு பெண் செய்த காரியம்! வீடியோவ பாத்ததும் நாடே அதிர்ச்சியில் ஒறஞ்சு போயிருச்சு
சமூக வலை தளங்களில் அவ்வப்போது வினோதமான வைரல் வீடியோக்கள் (Viral Videos) பரவுவது வழக்கம். இந்த வரிசையில் தற்போது ஒரு வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், பிஎம்டபிள்யூ (BMW) காரில் வந்த பெண் ஒருவர், ஒரு கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியை எடுத்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த பெண் கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியை திருடி செல்வதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவம், பார்ப்பதற்கு திருட்டு போலதான் தெரிகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை? என்பதை உறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் அந்த பெண் வந்தது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் ஆகும்.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், அது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1) கார் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 49.90 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 52.90 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இவ்வளவு விலை உயர்ந்த காரை வைத்து கொண்டு ஏன் சாதாரண ஒரு பூந்தொட்டியை அந்த பெண் திருட வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்களே பல்வேறு காரணங்களை அடுக்கி கொண்டுள்ளனர்.

முதலில் அந்த பெண் பிஎம்டபிள்யூ காரை திருடியிருக்க வேண்டும். அதற்கு பிறகு அதே காரில் வந்து பூந்தொட்டியை திருடி சென்றிருக்க வேண்டும் என்ற கோணத்தில் ஒரு சிலர் சமூக வலை தளங்களில் 'கமெண்ட்' செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அது ஒருவருடைய தரத்தை நிர்ணயிக்காது என்ற ரீதியில் கமெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.
எது எப்படியோ இந்த விஷயத்தின் உண்மையான பின்னணி இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. எனவே தற்போதைய நிலையில் அந்த பெண் பூந்தொட்டியை திருடி சென்றதாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை, விலை உயர்ந்த கார்களின் உரிமையாளர்கள், பூந்தொட்டிகளை திருடியதாக வைரல் வீடியோக்கள் பரவுவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது.
கடந்த காலங்களிலும் கூட பல்வேறு முறை, இப்படியான வைரல் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் பரவியுள்ளன. ஒரு சிலர் பூந்தொட்டிதானே என்ற எண்ணத்தில், அவற்றை திருடி செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் சட்டப்படி பார்த்தால், அடுத்தவரின் உடைமைகளை திருடுவது குற்றம் ஆகும். இதற்காக கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் கூட உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாதாரண ஒருவர் பூந்தொட்டியை திருடி சென்றிருந்தால், அது இந்த அளவிற்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்காது. ஆனால் பூந்தொட்டியை எடுத்து சென்ற பெண், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 என்ற விலை உயர்ந்த காரில் வந்த காரணத்தால்தான், தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி கொண்டுள்ளது.
இது ஒரு சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.70 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், மசாஜ் செய்து கொள்ள கூடிய வகையிலான இருக்கைகள் என ஏகப்பட்ட அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளை எல்லாம் இந்த கார் கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட ஒரு காரில் வந்து சாதாரண பூந்தொட்டியை திருடி சென்ற காரணத்தால்தான், தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி கொண்டுள்ளது. இது தொடர்பாக நொய்டா காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது? என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








