பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

காரை தடுத்து நிறுத்திய கோவத்தில், காவலாளியை சரமாரியாக செருப்பால் அடித்த பெண்ணின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது சிறிய காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது. வெள்ளை நிற ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வந்த பெண் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் முன் பகுதியில், அதன் காவலாளியை சரமாரியாக தாக்கும் காட்சிகள் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

காவலாளியின் அறைக்கு அருகே காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்த அந்த பெண், காவலாளியை தாக்கும் காட்சிகளை அந்த காணொளியில் தெளிவாக காண முடிகிறது. ஒரு சில வினாடிகள் ஏதோ பேசிய அவர், அதன்பின் காவலாளியை சரமாரியாக தாக்க தொடங்கி விட்டார். இதனால் நிலைகுலைந்த காவலாளி, அடியில் இருந்து தப்பிக்கும் வகையில் தன் கைகளை தலையின் மீது வைத்து கொண்டார்.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

இதன் உச்சகட்டமாக ஒரு சில வினாடிகளுக்கு பின்பு தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிய அந்த பெண், அதைக்கொண்டும் காவலாளியை தாக்கினார். அந்த பெண்ணை தடுக்கவோ அல்லது காவலாளியை காப்பாற்றவோ உதவிக்கு யாரும் வரவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் ஐதராபாத் நகரில் நடைபெற்றுள்ளது.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

ஐதராபாத்தின் சண்டாநகர் பகுதியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 24ம் தேதி) இந்த சம்பவம் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை பெண் செருப்பால் அடித்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவ தொடங்கிய பின்னர்தான், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காவலாளியின் பெயர் ரஃபீக் என்பதும், தன்னை செருப்பால் அடித்த பெண் மீது அவர் புகார் பதிவு செய்திருக்கும் தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. முதலில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த அந்த பெண், அவரது தாயார் அங்கு இருக்கிறாரா? என தன்னிடம் கேட்டதாக ரஃபீக் கூறியுள்ளார்.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

ஆனால் அதைப்பற்றிய விபரம் எதுவும் தன்னிடம் இல்லை என காவலாளி பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் வெள்ளை நிற ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் அங்கு வந்த அந்த பெண் காவலாளியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பாக வேறு சில தகவல்களும் வெளியாகியுள்ளன.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் அந்த பெண் நுழைவதை காவலாளி தடுத்து நிறுத்தியதால்தான், இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இது அந்த பெண்ணின் சொந்த கார் எனவும், அவர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்த உடனேயே காவலாளி அவரை தடுத்து நிறுத்தி விட்டதாகவும் தெரிகிறது.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

எனவே ஆத்திரத்தில் அந்த பெண் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் சரியாக என்ன நடந்தது? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. எனினும் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளின் நிர்வாகங்கள், குடியிருப்புவாசிகள் அல்லாதவர்களின் கார்களை வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என காவலாளிகளுக்கு உத்தரவிட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

குடியிருப்புவாசிகள் தங்கள் கார்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் காரணமாகதான் ஒரு சில காவலாளிகள், குடியிருப்புவாசிகள் அல்லாதவர்களின் கார்களை, அடுக்குமாடி குடியிருப்புகளின் வளாகத்திற்குள் அனுமதிப்பதில்லை. இந்த சம்பவத்திலும் இந்த காரணத்திற்காக காரை நிறுத்தியபோது தகராறு ஏற்பட்டிருக்கலாம்.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக குடியிருப்புவாசிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. போதிய அளவு இடம் இல்லை என்றாலோ அல்லது தவறுதலாக வேறு ஒருவரின் இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டாலோ உடனே பிரச்னை ஏற்பட்டு விடுகிறது.

பாவம் அந்த வாட்ச்மேன்... காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்... வீடியோ பாத்தா கோவப்படுவீங்க

இப்படி பிரச்னை ஏற்பட்டாலும் கூட காவலாளிகள்தான் பதில் சொல்லியாக வேண்டிய சூழல் உள்ளது. எனவே குடியிருப்புவாசிகள் அல்லாதவர்களின் கார்களை காவலாளிகள் தடுத்து நிறுத்தினால், அவர்களுக்கு பதில் சொல்வது அவசியம். ஆனால் ஒரு காவலாளி எப்படி எனது காரை நிறுத்தலாம்? என்ற எண்ணத்தில், பலர் அவர்களிடம் தகராறு செய்கின்றனர்.

எனவே காரை தடுத்து நிறுத்திய காரணத்திற்காக காவலாளிகளிடம் தகராறு செய்யும் சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. காவலாளிகளுக்கும் மரியாதை அளிப்பது மிக அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஐதராபாத்தில் தற்போது நடந்துள்ள சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் உண்மை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Woman In Volkswagen Polo Beats Apartment Complex Watchman - Viral Video. Read in Tamil
Story first published: Wednesday, August 26, 2020, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X