நட்ட நடு ரோட்டில் முதலமைச்சருக்கு நேர்ந்த கதியை பாருங்க!! ஸ்கூட்டரில் வந்த பெண்... என்ன நடந்தது?
சாலையின் குறுக்கே நாய், மாடு வந்ததால் பெரிய விபத்துகள் நடந்துள்ளதை பார்த்திருக்கிறோம்; கேள்விப்பட்டு இருக்கிறோம். ஒரு சிறிய விலங்கினால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடித்துக் கொண்ட சம்பவங்கள் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் நடந்துள்ளது. ஆனால், ஓர் மாநிலத்தின் முதலமைச்சரின் விலையுயர்ந்த கார், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணால் சேதமடைந்துள்ளது என சொன்னால் நம்ப முடிகிறது. எங்கு இந்த சம்பவம் நடந்தது? விபத்தில் சேதமடைந்த விலையுயர்ந்த கார் என்ன? என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாலையில் எதை எல்லாம் கவனத்துடன் கையாள வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் கேட்டால், ஸ்கூட்டரில் செல்லும் பெண்களை முந்துவதை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என நகைச்சுவையாக கூறுவார்கள். ஆனால், அது என்னமோ உண்மைதான். ஒரு குறிப்பிட்ட பாலினத்தவர்களை தாக்கி பேசுவதுபோல் இருந்தாலும், ஸ்கூட்டர் & கார்களை ஓட்டும் பெண்களால் நிறைய விபத்துகள் நடந்துள்ளன.

சில பெண்களினால் ஏற்படும் இந்த விபத்துகள் குறித்த தகவல்கள் இன்றைய மாடர்ன் உலகில் உடனுக்குடன் நமக்கு தெரிந்துவிடுகின்றன. குறிப்பாக, ஸ்கூட்டரில் செல்லும்போது பிரேக் இருந்தாலும் சில பெண்கள் தங்களது கால்களை ஊன்றி நிறுத்துவதை மீம்ஸ்களில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதேபோல், முறையாக இண்டிகேட்டர்களை பயன்படுத்தாதது, மிரர் பார்த்து ஸ்கூட்டர் ஓட்டாதது உள்ளிட்டவை எல்லாம் பெண்கள் மீது சுமத்தப்படும் புகார்களாக உள்ளன.
எல்லா பெண்களும் இப்படி இருப்பதில்லை, குறிப்பிட்ட சில பெண்கள் மட்டுமே இவ்வாறு உள்ளனர் என்பதை மறுப்படியும் கூறிக் கொள்கிறோம். அத்தகைய பெண்களின் செயல்கள் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்றால், மாநில முதல்வரின் விலையுயர்ந்த கார் ஸ்கூட்டரில் சென்ற பெண் ஒருவரால் விபத்தில் சிக்கி சேதமடைந்து உள்ளது. இந்த சம்பவம் வேறெங்கும் இல்லை... நம் அண்டை மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் வாமனபுரம் என்கிற பகுதியில் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் கான்வே சென்றுள்ளது. நகரத்தின் பரபரப்பான சாலையில் மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த இந்த கான்வேயில் திடீரென வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. அதாவது, முன்னால் ஏதோ ஒரு வாகனம் செய்த தவறினால் பின்னால் வந்த வாகனங்களில் சடர்ன் பிரேக் கொடுத்துள்ளனர்.
இருப்பினும், அதற்குள்ளாக ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் மோதி கொண்டன. இதனால், அந்த இடமே சிறிது நேரத்தில் பரபரப்புக்கு உள்ளானது. சாலையில் சென்றவர்கள், கடைக்குள் இருந்தவர்கள் என அனைவரும் வெளியே வந்து அதிர்ச்சி உடன் பார்த்தனர். மறுப்பக்கம், இது மாநில முதல்வர் செல்லும் கான்வே என்பதால் ஏதேனும் மர்ம நபர்களின் சதியா என முதல்வரின் பாதுகாவலர்கள் சுற்றும், முற்றும் பார்த்து ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ள துவங்கினர்.

ஆனால், இந்த அனைத்து பரபரப்புக்கும் காரணம், ஒரு பெண் தனது ஸ்கூட்டரில் திடீரென வலதுபக்கம் திரும்பி, எதிர்பக்க சாலையை கடந்து சென்றதாகும். இதை பார்த்த மற்றொரு பைக் ஓட்டி தானும் அவ்வாறு சாலையை கடக்க முயன்றுள்ளார். சரியாக அந்த நேரம் பார்த்து, கேரள முதலமைச்சரின் கான்வே இடையே குறுக்கிட்டுள்ளது. இதனால், அந்த 2-வீலர் ஓட்டி நடுரோட்டில் அப்படியே நின்றுவிட்டார்.
அவர் மீது மோதிவிட கூடாது என்பதற்காக முதலமைச்சர் கான்வேயில் இருந்த வாகனங்களும் சடர்ன் பிரேக் கொடுத்துள்ளன. முதலமைச்சர் போன்றோரது கான்வேயில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று எந்த அளவிற்கு நெருக்கமாக செல்லும் என்பதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. இந்த மோதலில், கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்ற கியா கார்னிவல் என்கிற சொகுசு எம்பிவி கார் சேதமடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, இவ்வாறான முதலமைச்சரின் கான்வே நெருக்கமாக செல்வதற்கு காரணம், முதல்வருக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு முதல்வரின் அன்றைய திட்டங்கள் தெரிந்திருக்கும். ஆதலால், செல்ல வேண்டிய இடமும் தெரிந்திருக்கும். அவ்வாறு செல்லும்போது, முதல்வரின் பாதுகாப்பு கருதி இடையில் தேவையில்லாமல் எங்கேயும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்பதும் தெரிந்திருக்கும். ஆனால், இவ்வாறு மற்ற வாகன ஓட்டிகளால் பிரச்சனை ஏற்படும்போது அது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துவிடுகிறது.


Click it and Unblock the Notifications









