பாரசூட் மூலம் ஓடும் காரில் குதித்த வீராங்கனை: சிலிர்ப்பான வீடியோ
ஆகாயத்திலிருந்து பாராசூட் மூலம் ஓடும் காருக்குள் மிகச்சரியாக வந்து இறங்கி மெய்சிலிர்க்க வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பாரசூட் வீராங்கனை கேட்டி ஹன்சென். இவர் கலிஃபோர்னியாவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
காற்றின் வேகத்தை மிகச்சரியாக கணித்து சாலையில் சென்று கொண்டிருக்கும் மஸ்டாங் காருக்குள் வந்து இறங்கும் வீடியோவை யூ ட்யூபில் அவர் வெளியிட்டுள்ளார். காரில் வந்து அவர் இறங்குவதை ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

சாலையில் மெதுவாக சென்று கொண்டிருக்கும் காரில் அதிவேகமாக இறங்கும் பாரசூட்டைிலிருந்து மிக லாவகமாக அவர் காருக்குள் இறங்கும் வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
<center><center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/eeWDXP8u-ig?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center>


Click it and Unblock the Notifications








