நடுரோட்டில் கார் கண்ணாடிகளை அடிச்சு நொறுக்கியது அவரா! சாமியாடிய வீடியோவ பாத்ததும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பில்வாரா (Bhilwara) பகுதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பெண் ஒருவர், கார் ஒன்றின் கண்ணாடிகளை நொறுக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

கற்களை வீசி அவர் தகர்த்தது ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) காரின் கண்ணாடிகள் ஆகும். விண்டுஷீல்டு மற்றும் விண்டோக்களை அந்த பெண் கற்களை வீசி உடைத்துள்ளார். அங்கு சுற்றியிருந்தவர்கள் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Woman Smashes Hyundai i20 Windshield And Windows

கார் கண்ணாடிகளை உடைத்த பெண்ணிற்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவரது பக்கத்து வீட்டுக்காரரை சந்திக்க, அவரது உறவினர் ஒருவர் வந்துள்ளார். வீட்டிற்கு வெளியே அவரது உறவினரின் கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த பெண் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், காவல் துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்றுள்ளனர். இதன் பின் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Road Rage

பேச்சுவார்த்தை முடிவடைந்ததும், இரு தரப்பையும் காவல் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே தன்னால் உடைக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு அந்த பெண் பணம் கொடுத்திருக்கலாம் என தெரிகிறது. எனினும் இந்த பெண்ணின் நடவடிக்கை சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், அதை அமைதியான முறையில் பேசி தீர்க்க முயற்சி செய்வதுதான் நல்லது. அதை விடுத்து விட்டு இப்படி கார் கண்ணாடிகளை உடைப்பதை ஏற்று கொள்ள முடியாது. எனவே இந்த பெண்ணின் மனநிலையை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்திய சாலைகளில் தற்போதெல்லாம் மோதல்கள் (Road Rage) ஏற்படுவது என்பது சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு இடையே கைகலப்பு, வாக்குவாதம், வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டுமென்றால், அனைவரும் முதலில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பொறுமை இழந்தால், தங்களுக்கும் சேர்த்தே பிரச்னைகள் ஏற்படும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். தவறுகளை மன்னிப்பதன் மூலம் நிதானத்தை இழக்காமல் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்வது நன்மை பயக்கும்.

இங்கே வருத்தமான மற்றொரு விஷயம் என்னவென்றால், பெண் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருப்பதுதான். பொதுவாக ஆண்கள்தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். தற்போது பெண்களும் நிதானத்தை இழந்து, சாலைகளில் மோதல்களில் ஈடுபட தொடங்கியிருப்பதால், சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் இப்படி நடந்து கொண்டாரா? என்பதே அவர்களுடைய அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 18, 2024, 14:34 [IST]
English summary
Woman smashes hyundai i20 windshield and windows viral video details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+