ராங் சைடில் ஏறி வந்த கார் டிரைவருக்கு ஸ்பாட்டிலேயே பாடம் புகட்டிய பெண்! இதை மனுஷன் ஆயுசுக்கும் மறக்க மாட்டாரு!

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை அதிகளவு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குறிப்பாக இந்தியாவில் நிறைய வாகன ஓட்டிகள் ராங் சைடில் (Wrong Side) பயணம் செய்கின்றனர். இதன் மூலம் அவர்களால் சில வினாடிகள் அல்லது நிமிடங்களை சேமிக்க முடியும்தான்.

ஆனால் இது சட்டத்திற்கு எதிரானது. ராங் சைடில் பயணம் செய்யும் வாகனங்களால், சாலை விபத்துக்கள் நடைபெறலாம். அத்துடன் இது போக்குவரத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும். இருப்பினும் இதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், ஒரு சில வாகன ஓட்டிகள், தொடர்ந்து ராங் சைடில் பயணம் செய்து கொண்டுதான் உள்ளனர்.

Woman Stops Royal Enfield Bullet Infront Of Mahindra Thar Driving In Wrong Lane

அப்படி ராங் சைடில் பயணம் செய்த மஹிந்திரா தார் (Mahindra Thar) எஸ்யூவி காரின் டிரைவர் ஒருவருக்கு ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக்கில் பயணம் செய்த பெண் ஒருவர் தக்க பாடம் புகட்டியுள்ளார். புனேவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Punekar News யூடியூப் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில், மஹிந்திரா தார் எஸ்யூவி கார் ஒன்று ராங் சைடில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு எதிரே, அதாவது சரியான திசையில், பெண் ஒருவர் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் வந்தார்.

Royal Enfield Bullet-Mahindra Thar

மஹிந்திரா தார் எஸ்யூவி கார் ராங் சைடில் வந்த காரணத்தால், அவர் வழி விடவில்லை. ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை அப்படியே நிறுத்தி கொண்டார். மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டிரைவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. சண்டை போடவில்லை. தைரியமாகவும், தெளிவாகவும் அப்படியே நின்று கொண்டார்.

ஒரு கட்டத்தில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் டிரைவருக்கு, நாம் செய்தது தவறு என புரிந்து விட்டது. எனவே அவர் காரை திருப்பி, சரியான பாதையில் செலுத்த தொடங்கினார். அதன் பின்னர் ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் வந்த பெண்ணும் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். மஹிந்திரா தார் எஸ்யூவி காரை சரியான திசையில் போக வைத்த அந்த பெண்ணுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆனால் அந்த பெண் மீதும் ஒரு தவறு உள்ளது. இந்த வைரல் வீடியோவை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால், ராயல் என்பீல்டு புல்லட் பைக்கில் நம்பர் பிளேட் இல்லாதது தெரிய வரும். இந்திய சாலைகளில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவது தவறாகும். எனவே அந்த பெண்ணும், விதிமுறைகளை மதித்து நடந்து கொள்வது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை இன்னும் கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் தவறுகள் குறையும். தண்டனைகள் கடுமையாக இல்லாத காரணத்தால், போக்குவரத்து விதிமுறை மீறல்களை, வாகன ஓட்டிகள் மிகவும் இலகுவாக எடுத்து கொள்கின்றனர். இது சாலை விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பதால், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.

Image Source: @Punekar News via YouTube

More from DriveSpark

Article Published On: Friday, July 18, 2025, 23:08 [IST]
English summary
Woman stops royal enfield bullet infront of mahindra thar driving in wrong lane viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+