எலுமிச்சம் பழத்துல 20 லட்ச ரூபா பைக்கை ஏத்தி பூஜை செய்த பெண்! கோயில் வாசலில் வாயை பிளந்து பார்த்த பொதுமக்கள்!

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை (Super Bikes) ஓட்டி கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை ஓட்டுவதை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக பெங்களூர் (Bangalore) நகர சாலைகளில், பெண்கள் சூப்பர் பைக்குகளை ஓட்டும் காட்சிகளை அதிகமாக பார்க்க முடியும். இந்த வரிசையில் பெங்களூர் நகரை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்கை வாங்கியுள்ளார். அது சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) ஆகும்.

the_petrol_girl என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இது தொடர்பான வீடியோ தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த பக்கம் கிண்டு சிங் (Kintu Singh) என்ற பெண்ணால், நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவர்தான் தற்போது மிகவும் விலை உயர்ந்த சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக்கை வாங்கியுள்ளார்.

Woman Super Biker Buys Suzuki Hayabusa

இவர் தொழில் அதிபராக இருந்தாலும் கூட, பைக்குகள் மீது காதல் கொண்டவராகவும் உள்ளார். அவரிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS) பைக் ஒன்று உள்ளது. இதன் விலை சுமார் 3.70 லட்ச ரூபாய் ஆகும். இந்த பைக்கில் 313 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட்-கூல்டு, ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஹெச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில்தான் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக்கை விட பல மடங்கு விலை உயர்ந்த சுஸுகி ஹயபுசா பைக்கை கிண்டு சிங் தற்போது வாங்கியுள்ளார்.

Suzuki Hayabusa

அத்துடன் அந்த பைக்கை கோயிலுக்கு கொண்டு சென்று, பாரம்பரிய இந்து சம்பிரதாய முறைகளின்படி பூஜையும் செய்துள்ளார். மிகவும் விலை உயர்ந்த சுஸுகி ஹயபுசா பைக்கிற்கு கிண்டு சிங் கோயிலில் பூஜை செய்த வைரல் வீடியோவைதான் (Viral Video), அவர் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வைரல் வீடியோவில், எலுமிச்சை பழத்தின் மீது சுஸுகி ஹயபுசா பைக்கை ஏற்றுவது போன்ற சம்பிரதாயங்களை நம்மால் காண முடிகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சுஸுகி ஹயபுசா பைக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 16.90 லட்ச ரூபாய் வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 17.70 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஆன்-ரோடு விலை (On-road Price) முறையே தோராயமாக 19 லட்ச ரூபாய் மற்றும் 20 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும். இவ்வளவு விலை உயர்ந்த சுஸுகி ஹயபுசா பைக்கில், 1,340 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 பிஎஸ் பவர் மற்றும் 150 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் பெண்கள் சுஸுகி ஹயபுசா பைக்கை வாங்குவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜஸ்விந்தர் கவூர் என்ற பெண் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் ஒருவரும் கூட, சுஸுகி ஹயபுசா பைக்கை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஸுகி ஹயபுசா போன்ற அதிக எடை கொண்ட (264 கிலோ) சூப்பர் பைக்குகளை பெண்கள் அதிகளவில் ஓட்ட முன்வருவது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்!

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2025, 13:38 [IST]
English summary
Woman super biker buys suzuki hayabusa viral video check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+