சுடிதார்ல சாதாரணமா வந்தாங்க... 25 லட்ச ரூபா பைக்கை வாங்கீட்டு ஷோரூம்ல இருந்து போகும்போது ஆளே மாறீட்டாங்க...
முன்பெல்லாம் பெண்கள் பெரும்பாலும் வாகனங்களை ஓட்ட மாட்டார்கள். ஆனால் தற்போது இந்த சூழல் மாறி வருகிறது. ஸ்கூட்டர்கள், பைக்குகள் மற்றும் கார்களை எல்லாம் பெண்கள் ஓட்டி செல்வதை சாலைகளில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதில் ஒரு சில பெண்கள் ஒரு படி மேலே போய், (Adventure Tourer) பைக்குகளை எல்லாம் ஓட்டுகின்றனர். முறையான 'ரைடிங் சூட்' உடன் அட்வென்ஜர் டூரர் பைக்குகளில் பயணம் செய்யும் பெண்களை, இந்திய சாலைகளில் பார்க்கும்போது ஆச்சரியம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
இதற்கு வந்தனா போன்ற பெண்கள் ஒரு உதாரணம். இவர் தற்போது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் (BMW R 1300 GS) பைக்கை வாங்கியுள்ளார். இது அட்வென்ஜர் டூரர் ரகத்தை சேர்ந்தது ஆகும். பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் பைக்கை டெலிவரி எடுப்பதற்காக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (BMW 3 Series) காரில் வந்துள்ளார்.

இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில், வந்தனா டீலர்ஷிப்பிற்கு வந்து இறங்குவதை நம்மால் காண முடிகிறது. பின்னர் அவர் 'பேப்பர் ஒர்க்' உள்ளிட்ட நடைமுறைகளை எல்லாம் முடித்த பிறகு, பைக்கை டெலிவரி எடுத்துள்ளார்.
ஆரம்பத்தில் சுடிதாரில் சாதாரணமாக வந்த வந்தனா, இறுதியில் டீலர்ஷிப்பை விட்டு கிளம்பும்போது, மொத்தமாக மாறி விட்டார். ஆம், 'ரைடிங் சூட்' உள்ளிட்டவற்றை எல்லாம் அணிந்து கொண்டு, முழுமையான ரைடராக அவர் மாறியதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. பிஎம்டபிள்யூ சொகுசு காரில் வந்த அவர், ஷோரூமில் இருந்து பிஎம்டபிள்யூ பைக்கில் சென்றுள்ளார்.

வந்தனா தற்போது வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் பைக் மிகவும் விலை உயர்ந்தது. தற்போதைய நிலையில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 21.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 25 லட்ச ரூபாய் வரும்.
இந்த பைக்கில் மிகவும் சக்தி வாய்ந்த 1,300 சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 145 பிஹெச்பி பவர் மற்றும் 149 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் பைக்கில், 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.
எனவே இது தொலை தூர பயணங்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும். அடிக்கடி பெட்ரோல் பங்க்கிற்கு சென்று கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லை. அதே நேரத்தில் இந்த பைக்கின் எடை 237 கிலோவாக உள்ளது. இந்த பைக்கில் வந்தனா பல புதிய இடங்களுக்கு சென்று வருவார் என நாம் உறுதியாக நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் போன்ற அட்வென்ஜர் டூரர் பைக்குகளை பெண்கள் வாங்குவதை காண்பது உண்மையிலேயே மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. வந்தனா போன்ற பெண்களை பின்பற்றி இன்னும் பல்வேறு பெண்கள் இது போன்ற பைக்குகளை ஓட்ட முன்வருவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








