பெண்ணா பொறந்தா பெத்தவங்க இதெல்லாம் செய்வாங்க போல.. நம்ம வீட்டுல பைக் கேட்டாலே வாங்கி தர மாட்டாங்க..

அம்மா, அப்பா ரெண்டு பேரும் சேர்ந்து தங்களுடைய மகளுக்கு சற்றே காஸ்ட்லியான காரை வாங்கி பரிசாக தந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நம்ம பசங்களை மிகப் பெரிய சோகத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. வீட்டுல ஒரு பைக் வாங்கி தாங்கனு கேட்டாலே வாங்கி தர மாட்டிக்கிறாங்க. இங்க பாருங்க பெண்ணா பொறந்தா காருகூட வாங்கி தராங்க என பலரை இந்த நிகழ்வு புலம்ப செய்திருக்கின்றது என்றே கூறலாம். உண்மையில் நம்ம ஊருல பல இடங்கள்ல அப்படிதான் நடக்குது. அப்பாக்கள் பலர் தங்களுடைய மகளை உயிரினும் மேலா பாக்குறாங்க.

அப்படியான ஓர் அப்பா, அம்மாவே தன்னுடைய மகளுக்கு காரை பரிசா தந்து அவரை ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றனர். கேரளா மாநிலம், மாவெலிக்கரா எனும் பகுதியிலேயே இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. இந்த ஸ்பெஷலான தருணத்தை அந்த பெண்ணே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இந்தியாவில் பெற்றோர்கள் வாகனத்தை பரிசாக தரும் நிகழ்வு சமீப காலமாக அதிக அளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

Heartfelt gratitude for hyundai i20 n line gift

இந்த நிலையிலேயே இந்த மனதை உருக்கும் ஓர் சம்பவம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக, அந்த பெண் போட்டிருந்த பதிவில் ஒரு சில வரிகள் மட்டும் பலரின் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. "என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் நன்றி. என் பலமாகவும், வழிகாட்டும் வெளிச்சமாகவும், என் எல்லாவுமாகவும் இருப்பதற்கு நன்றி.

நான் ஸ்டீயரிங் வீலை பிடிக்கும் ஒவ்வொரு முறையும் உங்களுடைய அன்பு எனக்கு நினைவூட்டப்படும். ஒவ்வொரு சவாரியும் உங்களை கொண்டாடக் கூடியதாக இருக்கும்" என்றே அவர் பதிவிட்டிருந்தார். இதன் வாயிலாக இந்த கார் பரிசளிப்பு அவரை எந்த அளவிற்கு மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றார் என்பது தெரிகின்றது.

இந்த வரிகளே பலரின் மனதைக் கவரக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றது. ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஐ20 என் லைன் (i20 N Line) கார் மாடலே பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் ரூ. 10 லட்சம் என்கிற ஆம்ரப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மலையாள மக்களின் புத்தாண்டாக அறியப்படும் 'விஷு' கொண்டாட்டத்தை முன்னிட்டே இந்த அளவு காஸ்ட்லியான கார் இளம் பெண்ணுக்கு பரிசாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக கார் மாடலேஇந்த ஹூண்டாய் ஐ20 என் லைன் ஆகும். அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய கார் மாடல் மட்டுமல்ல அதிக ஆற்றலை உருவாக்கும் எஞ்சினைக் கொண்ட ஓர் வாகனமும் இதுவாகும்.

Hyundai i20 n line gift

வழக்கமான ஐ20 மாடலைக் காட்டிலும் இது சற்று அதிக ஆற்றலை உருவாக்கும். உதாரணமாக, இந்த காரில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

அதேநேரத்தில் வழக்கமான 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மோட்டாரைக் கொண்ட ஐ20 காரோ அதிகபட்சமாகவே 88 பிஎஸ் மற்றும் 115 என்எம் டார்க் வரை மட்டுமே உருவாக்கும். இதனால்தான் அதிக திறனை விரும்பும் இளைஞர்கள் மத்தியில் ஐ20 என் லைன்-க்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Woman thanks parents gifting her hyundai i20 n line

மேலும், ஹூண்டாய் ஐ20 என் லான் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. திறனை உருவாக்குவதில் மட்டுமல்ல பிரீமியம் அம்சங்களைத் தாங்கியிருப்பதிலும் வழக்கமான ஐ20 கார் மாடலைக் காட்டிலும் ஐ20 என் லைன் சற்றே சிறப்பான வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

குறிப்பாக, வழக்கமான ஐ20-யிடமிருந்து ஐ20 என் லைன் மாறுபட்டுக் காட்சியளிக்கும் விதமாக பல்வேறு அம்சங்களை ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. பிரத்யேக எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், என் பேட்ஜைக் கொண்ட 16 அங்குல அலாய் வீல் மற்றும் அதிக கவர்ச்சியான கிரில் உள்ளிட்டவற்றையே ஹூண்டாய் வழங்கி உள்ளது.

குறிப்பாக, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் பல அதனை அதிக ஸ்போர்ட்டியான லுக்கில் காண்பிக்கும் வகையிலேயே உள்ளன. இதேபோல், தொழில்நுட்ப மற்றும் பிரீமியம் அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் மாடல் கொண்டிருக்கும். அந்தவகையில், கார் இணைப்பு தொழில்நுட்பம், பெரிய திரை போன்ற அம்சங்களை வழங்கி இருக்கின்றனர்.

இதுமட்டுமல்ல சிவப்பு நிற அலங்கார அணிகலன்கள், லெதர் போர்த்தப்பட்ட கியர் ஷிஃப்டர் மற்றும் ஸ்டியரிங் வீல், சிவப்பு நிற ஆம்பியன்ட் லைட், ஸ்போர்ட்ஸ் வகை இருக்கைகள் உள்ளிட்டவற்றை இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றன. இதேபோல், 35க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி உள்ளது.

மிக முக்கியமாக ஆறு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், பரந்த பார்வை திறன் கொண்ட பார்க்கிங் கேமிரா மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் போன்ற அம்சங்களையே அது கொடுத்திருக்கின்றது.

இதுபோன்று பன்முக சிறப்பங்களைத் தாங்கிய காரையே கேரளாவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் பெண்ணுக்கு பரிசாக வாங்கி தந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலான அம்சங்களை வழக்கமான ஐ20 கார் மாடலில் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக, அலங்கரிப்பு விஷயத்தில் ஐ20 என் லைன் ஒரு படி மேலே இருக்கும்.

நிற தேர்விலும் இது மிக சிறந்த ஆப்ஷனாக இந்தியர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மொத்தமாக ஏழு விதமான வண்ண ஆப்ஷன்களை ஹூண்டாய் இந்த காரில் வழங்குகின்றது. அந்தவகையில், டூயல் டோன் (Dual Tone) மற்றும் சிங்கிள் டோன் (Single Tone) ஆகிய வண்ண ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.

டூயல் டோன் ஆப்ஷனில் தண்டர் நீள நிறத்துடன் கூடிய அபிஸ் பிளாக் (Thunder Blue with Abyss Black Roof) மற்றும் அட்லஸ் ஒயிட் உடன் கூடிய அபிஸ் கருப்பு நிற ரூஃப் (Atlas White with Abyss Black Roof) ஆகிய ஆப்ஷன்களையே ஹூண்டாய் வழங்குகின்றது.

இதேபோல், சிங்கிள் டோன் ஆப்ஷனில் அபிஸ் பிளாக் (Abyss Black), ஸ்டேரி நைட் (Starry Night), தண்டர் ப்ளூ (Thunder Blue), டைட்டன் கிரே (Titan Grey) மற்றும் அட்லஸ் ஒயிட் (Atlas White) ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. அனைத்தும் பிரீமியம் கலர் ஆப்ஷன்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதற்கு முன்னதாக பல்வேறு வாகன கிஃப்ட் சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. ஆனால், இந்த கார் பரிசளிப்பு சற்றே ஸ்பெஷலான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, அந்த பெண்ணின் உருக்கமான பதிவாலேயே இந்த கார் பரிசளிப்பு கொஞ்சம் ஸ்பெஷலானதாக மாறியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 23, 2025, 10:49 [IST]
English summary
Woman thanks parents for surprising her with new hyundai i20 n line hot hatchback gift
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X