தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும் "இரும்பு மனிதி" யோகிதா..!

தன் கணவர் பார்த்த லாரி டிரைவர் வேலையை அவர் விபத்தில் பலியான பின் மனைவியும் பார்த்து வருகிறார். லாரி டிரைவர் வேலை பெண்களுக்கு மிகவும் சவால் நிறைந்த தொழிலாக இருந்தாலும் பல ஆண்டுகளாக தெடர்ந்து இந்த பணிய

தன் கணவர் பார்த்த லாரி டிரைவர் வேலையை அவர் விபத்தில் பலியான பின் மனைவியும் பார்த்து வருகிறார். லாரி டிரைவர் வேலை பெண்களுக்கு மிகவும் சவால் நிறைந்த தொழிலாக இருந்தாலும் பல ஆண்டுகளாக தெடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த முழு செய்தியை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

மத்திய பிரதேச மாநிலம் போப்பாலை சேர்ந்தவர் யோகிதா ரகுவன்சி, இவரது கணவர் லாரிகள் வைத்து சிறிய ரக டிரன்ஸ்போர்ட்டி நடத்தி வந்தார். இவர் சொந்தமாக லாரிகளை வைத்திருந்தாலும், ரெகுலராக இவர் லாரியில் டிரைவராகவும் சென்று வந்தார். சிறிய ரக டிரான்ஸ்போர்ட் நிறுவனம் என்பதால் டிரைவருக்க வழங்கும் சம்பளத்தை மிச்சப்படுத்த இதை செய்து வந்தார்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு இவர் எதிர்பாராத விதமாக காலமானார். இவர் காலமாகும் போது இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தது. இவரது வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த இவரது குடும்பம் இவரது மரணத்தால் செய்வது என்று தெரியாமல் விழித்தது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

இதையடுத்து யோகிதா தன் பார்த்த வேலையை தொடர்ந்து பார்க்க முடிவு செய்தார். தன் கணவர் இறக்கும் போது அவரிடம் மூன்று லாரிகள் இருந்துள்ளன. தற்போது அதை அவர் பராமரித்து வருகிறார்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தன் கணவரை போலவே தானும் தினமும் டிரைவராக சென்று வருகிறார். தற்போது 10 வீல்கள் கொண்ட லாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். லாரியில் டிரைவர் என்பது மிகவும் கடினமான வேலை எனவும், பணிபுரியும் இடம் அவ்வளவு செளகரியமாக இருக்காது. செல்லும் வழியில் பல வித சவால்களை சந்திக்க வேண்டியது வரும். அதிக நேரம் பணி செய்ய வேண்டியது வரும்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

இவ்வாறு பல்வேறு விஷயங்கள் காரணமாக லாரிகளில் டிரைவாக பெண்கள் பெரும்பாலும் பணியாற்றுவதில்லை. இதனால் இந்த பணி இன்று வரை ஆண் ஆதிக்கம் கொண்ட ஒரு பணியாகவே பார்க்கப்படுகிறது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

மேலும் சில மாநிலங்களில் வழிப்பறி கொள்ளையர்கள் பிரச்னை, இரவு நேரம் ஆபத்தான சாலைகளில் பயணம் செய்ய வேண்டிய சூழல், இதற்கிடையில் அதிக விலைமதிப்புள்ள பொருட்களை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, லாரிகள் நடுவழியில் ரிப்பேர் அனால் அதை தானாக சரி செய்ய தேவைப்படும் உடல் வழு உள்ளிட்ட சில விஷயங்கள் பெண்களுகள் இந்த வேலைக்கு வருவதற்கு சவாலான விஷயங்களாக இருக்கிறது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

இது குறித்து அவர் கூறும் போது :" என கணவர் என்னை விட்டு செல்லும் போது என மகளுக்கு 8 வயது எனது மகனுக்கு 4 வயது. அவர் ஒரு சாலை விபத்தில் பலியாகிவிட்டார். எனது குழந்தைகளின் படிப்பிற்காக நான் கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

எனது கணவர் டிரான்போர்ட் பிஸ்னஸ் நடத்தினாலும் அவர் வக்கீலுக்கு படித்து அந்த தொழிலும் செய்து வந்தார். எனக்கு வேலைக்கு செல்லும் கட்டாயம் வந்த போது எனது கணவர் பார்த்த தொழிலையே செய்யலாம் என முடிவு செய்தேன். அவர் பார்க் வக்கீல் தொழிலை பார்க்க வழியில்லை அதனால் அவரது பார்த்த டிரான்ஸ்போர்ட் கம்பெனியை எடுத்து நடத்த முடிவு செய்தேன்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

முதலில் டிரைவர்களுக்கு சம்பளம் கொடுத்து டிரான்ஸ்போர்ட்டை நடத்தி வந்தேன். சுமார் 6 மாதம் இந்த பிஸ்னஸ் நன்றாக போனது. அப்பொழுது ஒரு நாள் எங்கள் டிரைவர் விபத்து ஒன்றில் சிக்கினார், லாரியை ஐதராபாத் அருகே ஒரு வயல் வெளியில் கவிழ்த்தி விட்டார்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

இதையடுத்து நான் அங்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டது. நான் அங்கு சென்று 4 நாட்கள் தங்கி லாரியை சரி செய்து திருப்ப போபால் வந்தேன் அந்த 4 நாட்களும் எனது குழந்தைகள் தனியாக இருந்தனர். அதன் பின் நானும் டிரைவிங் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

முதலில் டிரைவிங் கற்று கொண்டு லாரி ஓட்ட ஆரம்பித்தேன் முதலில் நான் டிரைவிங் செய்யும் போது டிரைவிங் தெரிந்த ஒருவரை அருகில் வைத்து கொண்டு பயணம் செய்தேன். நாட்கள் செல்ல செல்ல எனக்கு தைரியம் வந்து விட்டது. தனியாக கூட லாரிய ஓட்டி செல்ல துவங்கினேன்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

சில நாட்களில் இரவு முழுவதும் லாரியை ஓட்டி செல்ல வேண்டிய சூழ்நிலை வரும். அதையும் தைரியமாக செய்துள்ளேன். மேலும் இரவில் தூக்கம் வந்தால் லாரியை ஏதாவது ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்து வந்து விட்டு தூக்குவேன். இரவில் லாரியை விட்டு வெளியே இறங்குவதாக இருந்தால் டர்மபன் கண்டி கொண்டு காலரை தூக்கி கொண்டு ஒரு தைரியமான ஆண் போல நடந்து கொள்வேன். இதுதான் எனக்கு மிக பாதுகாப்பானதாக இருந்தது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

ஒரு முறை லாரியை நிறுத்தி ரேட்டருகே சமைத்து கொண்டிருந்தோம் அப்பொழுது அந்த வழியாக வந்த 3 பேர் எங்களை தாக்கி எங்களிடம் இருந்த பொருட்களை பறிக்க முயன்றனர். அவர்களுக்கு நான் பெண் என்பது தெரிந்ததால் தான் தாக்கி திருட முயன்றனர் என்பது எனக்கு பின்னர் தான் தெரிந்தது. அவர்கள் தாக்கிய போது நான் அவர்களை திரும்ப தாக்கி என்னை காத்து கொண்டன். அதன் பின் தான் லாரியில் இருந்து வெளியே வந்தால் டர்பன் உடன் தான் வருவேன். " இவ்வாறு கூறினார்.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

லாரிகள் ஓட்டுவது என்பது எளிமையான வேலையில்லை. இந்தியாவில் உள்ள கரடு முரடான ஒழுங்கு இல்லாத ரோட்டில் லாரிகள் அதிகமாக செல்ல வேண்டியது வரும் அதில் எல்லாம் சமாளிக்க வேண்டியது டிரைவரின் கடமைதான். இது போன்ற கடினமான துறைகளிலும் பெண்கள் தடம் பதிக்க துவக்கியுள்ளது. இந்தியாவில் பெண்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

யோகிதா போல பல பெண்கள் மிக தைரியமான காரியங்களை செய்ய மனிதில் துணிச்சலுடன் இருக்கிறார்கள். ஆனால் இந்த சமூகம் தவறாக பேசும் அல்லது குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இது போன்ற வேலைகளில் விருப்பம் இருந்தும் தைரியமாக அவர்கள் அதை செய்ய முடியாமல் வாழ கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களை அதில் இருந்து வெளியில் கொண்டு வரவேண்டிய பொறுப்பு இந்த சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தன் கணவர் விட்டு சென்ற லாரி டிரைவர் பணியை பல ஆண்டுகளாக தொடரும்

சமூகத்தில் பேச்சில் மட்டும் பெண்ணியம் பேசும் பலருக்கு மத்தியில் பெண்களுக்குள் இருந்து தான் பெண்ணியம் பிறக்க வேண்டும். அந்த பெண்ணியத்தை பிறக்க விடாமல் தடுப்பதே ஆணாதிக்கம் என்பதை உணர்ந்து தனது பெண்ணியத்தை தையரியமாகன வெளிப்படுத்தி பல பெண்களுக்கு ஒரு பெரும் முன்னுதாரமானமாக இருக்கும் யோகிதாவிற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.

Source:Telegraph And Thebetterindia

More from DriveSpark

Article Published On: Saturday, June 30, 2018, 12:41 [IST]
English summary
woman truck driver doing her job for decade. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+