நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இது தலைநகர் டெல்லியில் (Delhi) ஒரு பேருந்துக்கு உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். இந்த வீடியோவில் பெண் ஒருவர் பிகினி (Bikini) உடையில், அதாவது நீச்சல் உடையில் பேருந்தில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த பெண்ணின் செயல், சமூக வலை தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில், மற்றவர்களை சங்கடப்படுத்தும் வகையில் உடைகளை அணிந்து வரக்கூடாது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் என்ன ஆடை அணிய வேண்டும்? என்பது அந்த பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் என்று இந்த செயலுக்கு ஒரு சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் பெண்களின் ஆடை சுதந்திரம் தொடர்பாக வெவ்வேறு விதமான கருத்துக்களை கொண்டவர்கள் மத்தியில் கடுமையான மோதலை இந்த வைரல் வீடியோ ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தலைநகர் டெல்லியில் இது போன்ற முகம் சுளிக்க வைக்கும் நிகழ்வுகள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக கடந்த காலங்களில் மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகள் பலர் அத்துமீறியுள்ளனர். அதாவது கட்டியணைத்து கொண்டும், முத்தமிட்டு கொண்டும் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.
இது போன்ற விஷயங்கள் எல்லாம், அவரவர்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்றாலும் கூட, பஸ் மற்றும் மெட்ரோ ரயில்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் நடைபெறுவதால், கடும் விமர்சனங்களை சந்திக்க தொடங்கியுள்ளது. இது உடன் பயணம் செய்பவர்களுக்கு நிச்சயமாக சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
தற்போது பேருந்தில் பிகினி உடையில் வந்த பெண்ணால் கூட, பலர் அசௌகரியங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு அருகில் அமர்ந்திருந்த பலர், இடத்தை காலி செய்து விட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், என்ன மாதிரியான உடைகளை அணியலாம்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை எல்லாம் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களை இயக்கும் நிர்வாகங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் தவறு அல்லது சரி என்ற விவாதங்கள் மட்டுமே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும். பொது போக்குவரத்து வாகனங்களில் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டேதான் இருப்பார்கள்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் கண்ணியமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமானது என நாங்கள் கருதுகிறோம். நமது தனிப்பட்ட சுதந்திரம், மற்றவர்களை பாதிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் எங்கள் கருத்து.
இந்திய சாலைகள் ஏற்கனவே கார், டூவீலர் போன்ற வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. அலுவலகத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் ஒரு இடத்திற்கோ செல்ல வேண்டிய ஒரு தனி நபர், 5 சீட்டர் அல்லது 7 சீட்டர் கார்களில் பயணம் செய்வதை நம்மால் கண் கூடாக பார்க்க முடிகிறது. இந்திய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்கள் எல்லாம், பஸ் அல்லது மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு மாறினால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை நிச்சயம் ஓரளவிற்கு குறையும். ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் நடைபெறும் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள், சொந்த வாகனங்களையே பயன்படுத்தலாம் என்ற மனநிலையை பலருக்கும் ஏற்படுத்தி விடுகின்றன.
எனவே அரசு உடனடியாக தலையிட்டு, விதிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறையலாம். இது நடந்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தற்போது இருப்பதை காட்டிலும், பல மடங்கு அதிகரித்து விடும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








