போர்ஷே காருக்கான மரியாதையே போச்சுனு மட்டும் சொல்லிடாதீங்க! விவசாயி செய்த செயலால் வாயடைத்துபோன செல்வந்தர்கள்!

பெரும் கோடீஸ்வரர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக போர்ஷே பாக்ஸ்டர் இருக்கின்றது. மேலும், கார் ஆர்வலர்கள் பலரின் கனவு வாகனமாகவும் இந்த கார் மாடல் இருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே விவசாயி ஒருவர், அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் விநோதமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றார்.

இந்தியாவில் பலரால் மேற்கொள்ளப்படும் ஓர் தொழிலே விவசாயம் ஆகும். ஆனால், விவசாயிகள் அனைவரும் பெரும் செல்வந்தர்களாக இருப்பதில்லை. ஒரு சில விவசாயிகள் பெரும் தொழிலதிபர்களுக்கு இணையான ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய ஓர் விவசாயியே போர்ஷே பாக்ஸ்டர் காரை தான் விளைவித்த காய்கறிகளை ஏற்றி வர சரக்கு வாகனம்போல் பயன்படுத்தி இருக்கின்றார்.

Farmer carries produce in prosche

பலர் இந்த காரை தங்களை சமூகத்தில் அந்தஸ்து மிக்க நபராக காண்பிக்க பயன்படுத்தி வருகின்ற நிலையில், அந்த விவசாயியோ விளைப்பொருட்களை ஏற்றி வர பயன்படுத்தி இருக்கின்றார். விவசாயியின் இந்த செயல்குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த கார் டெல்லி பதிவெண்ணை கொண்டு இருக்கின்றது.

ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறி இருப்பதாக தெரிவிக்கின்றன. காரை வைத்திருக்கும் அந்த விவசாய பெண்ணும், தான் ஓர் ஹரியானா நபர் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றார். காரில் இருந்து இறங்கும் அந்த பெண் காரின் பின்பக்கத்தில் இருந்து விவசாய பொருட்களை தன்னுடைய வீட்டில் இறக்கி வைக்கின்றார்.

Boxster 718 uses to carry fodder

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கார் ஆர்வலர்கள் மத்தியில் கடுப்பலையை ஏற்படுத்தி இருக்கின்றது. எவ்வளவு மதிப்புமிக்க காரை இப்படி பண்ணுறாங்களே என பலரை முனுமுனுக்கச் செய்திருக்கின்றது. ஆனால், விவசாய பொருட்களை சொகுசு காரில் ஏற்றி வருவது ஒன்றும் அவ்வளவு இழிவான செயல் அல்ல என்றும் ஒறு சாரார் கூறி வருகின்றனர்.

விவசாயம் இல்லையேல், உணவும் இருக்காது. ஆகையால், இதை யாரும் இழிவாக எண்ணக் கூடாது என ஒரு சிலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில், விவசாயி பயன்படுத்தி இருக்கும் இந்த கார் இதமாதிரியான செயல்களுக்கு உகந்த வாகனம் அல்ல என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Women farmer used porsche boxster to carry fodder

Source: Ndahiya2021/Instagram இதுபோன்று கால்நடை தீவனம் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி வருவதற்கு என்றே பிரத்யேக வாகனங்கள் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. டிராக்டர் அல்லது பிக்-அப் டிரக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வாயிலாக இன்னும் அதிகப்படியான பொருட்களைக் கூட ஏற்றி வர முடியும்.

வீடியோவில் விவசாயி பயன்படுத்தி இருப்பதோ ஸ்போர்ட்ஸ் வகை கார் மாடல் ஆகும். போர்ஷே 718 பாக்ஸ்டர் அதன் முழு பெயர் ஆகும். கெத்தாக மற்றும் சாலையில் சீறி பாய்ந்து செல்வதற்கு என்றே உருவாக்கப்பட்ட கார் மாடல் இது ஆகும். இந்த காரில் ஜிடிஎஸ் வகை எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டார்க் திறன் 430 என்எம் ஆகும். பிடிகே டூயல் கிளட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரால் வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 293 கிமீ ஆகும். இத்தகைய மின்னல் வேகத்தில் சீறி பாயும் காரையே கால்நடை தீவனம் ஏற்றி வர அந்த பெண் விவசாயி பயன்படுத்தி இருக்கின்றார். அதேவேளையில், இதுபோன்று விவசாயிகள் இதுபோன்று விலையுயர்ந்த கார்களை விளை பொருட்களை ஏற்றி வர பயன்படுத்துவது முதல் முறை அல்ல. ஏற்கனவே கேரளா மாநிலத்தில் இதுமாதிரியான ஓர் சம்பவம் சமீபத்தில் அரங்கேறி இருந்தது.

அந்த விவசாயி தன்னுடைய விலை உயர்ந்த ஆடி காரை, தன்னுடைய நிலத்தில் விளைந்த கீரை வகைகளை சாலையோர கடையில் வைத்து விற்க ஏற்றி வர பயன்படுத்தி இருந்தார். இந்த வீிடியோவும் இணையத்தில் மிகப் பெரிய அளவில் டிரெண்டாகியது. இந்த மாதிரியான சூழலிலேயே போர்ஷே 718 பாக்ஸ்டர் காரின் வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. இந்த போர்ஷே காரின் இந்திய மதிப்பு ரூ. 1.52 கோடிக்கும் அதிகம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விவசாயிகள் ஆடி, போர்ஷே கார்களை மட்டுமல்ல சில விவசாயிகள் ரோல்ஸ் ராய்ஸ் கார்களைகூட பயன்படுத்தி வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த விவசாயி விஜய் கெய்க்வாத் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை டெலிவரி பெற்றிருந்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 16, 2023, 5:00 [IST]
English summary
Women farmer used porsche boxster to carry fodder
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X