பஸ்சுக்குள் எல்லார் முன்னாடியும் 2 பெண்கள் செய்த காரியம்... வீடியோவை பாத்ததும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இதில் ஓடும் பேருந்திற்குள் 2 பெண்கள் ஷூ-க்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொள்வதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. அதிர்ச்சிகரமான இந்த வீடியோ பெங்களூர் (Bangalore) நகரில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கான காரணம் என்ன? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஜன்னலை திறந்தது தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவர்களை முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.

Women Hit Each Other With Shoes

இந்திய சாலைகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் (Traffic Congestion) பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. குறிப்பாக பெங்களூர் நகரை பற்றி சொல்லவே வேண்டாம். இந்தியாவிலேயே... இல்லை... இல்லை... உலகிலேயே போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகம் கொண்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது.

எனவே அங்கு கார் (Car) போன்ற சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை காட்டிலும், பஸ் (Bus) மற்றும் மெட்ரோ (Metro) போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என அரசு ஊக்குவித்து வருகிறது. மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க முடியும் என்பதே இதற்கு காரணம்.

Traffic Congestion

ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களில் நடைபெறும் இத்தகைய முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள், மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இது போன்ற பிரச்னைகளால் சங்கடத்திற்கு உள்ளாகும் மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவார்களா? என்பது சந்தேகம்தான். எனவே அவர்கள் சொந்த வாகனங்களில் 'ரிலாக்ஸ்' ஆக பயணம் செய்வதற்குதான் அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.

இது பெங்களூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை அதிகரித்து விடும். எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. எந்தவொரு பிரச்னை என்றாலும், அமைதியான முறையில் பேசி தீர்ப்பதுதான் அனைவருக்கும் நன்மை பயக்கும். அதை விடுத்து விட்டு, அதிகப்படியான கோபத்தை வெளிப்படுத்துவது தீமையையே ஏற்படுத்தும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூர் மிகவும் குளிர்ச்சியான ஒரு நகரம். ஆனால் சமீப காலமாக அது 'ஹாட்' ஆக மாறி வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே கோடை வெயில் வெளுத்து கட்டுவதை பற்றி நாங்கள் பேசி கொண்டிருக்கவில்லை. மாறாக பெங்களூர் நகர சாலைகளில் நடைபெற்று வரும் மோதல்கள் (Road Rage) பற்றி பேசி கொண்டுள்ளோம்.

பெங்களூர் நகரில் சமீப காலமாக பேருந்து மற்றும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிகளுக்கு இடையேயும், சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையேயும் அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமானது, சமீப காலங்களில், பெங்களூர் நகரில் வாகன ஓட்டிகளுக்கு இடையே அரங்கேறிய பல்வேறு மோதல் சம்பவங்களை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த சம்பவங்கள், பெங்களூர் பாதுகாப்பான நகரமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பொறுமையை கடைபிடித்தால் மட்டுமே இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். முடிந்த வரை தவறுகள் செய்யாமல் இருப்பதன் மூலமும், மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிப்பதன் மூலமும் இது போன்ற தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 10, 2024, 18:01 [IST]
English summary
Women hit each other with shoes on bus viral video details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+