ஹாரனிலேயே மியூசிக் போடும் பஸ் ஸ்டாண்ட் அனிரூத்களுக்கு ஆப்பு வைத்த பெண் ஆர்டிஓ!

ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் வரிசை கட்டி அனிருத் போல ஹாரணிலேயே மியூசிக் போட்ட தனியார் பஸ் டிரைவர்களுக்கு பெண் ஆர்டிஓ ஒருவர் டோஸ் விட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த பெண் ஆர்டிஓவின் நேர்மையையும் துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர். இவர் ஏன் பஸ்களில் ஏர் ஹாரன் பொருத்தப்படக்கூடாது என்பதற்கான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம்.

தனியார் டவுண் பஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது இரண்டே விஷயம்தான் ஒன்று வேறு எங்கும் கேட்க முடியாத பழைய பாடல்களை அவர்கள் ஒலிக்க விடுவது, மற்றொன்று அவர்கள் ஹாரனிலேயே மியூசிக் போடுவது தான். தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்கள் கூட போடாத மியூசிக்கை எல்லாம் இந்த தனியார் டிரைவர்கள் தங்கள் ஹாரனிலேயே போட்டு அப்பகுதியை தெறிக்க விடுவார்கள்.

rasipuram rto airhorn raid

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்களில் ஏர்ஹாரன் பொருத்துவது சட்டப்படி குற்றமாகும். இது அதிகமான ஒலி மாசை ஏற்படுத்துவதோடு வாகனத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அச்சம் இருப்பதால் இதை தடை செய்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு பெண் ஆர்டிஓவாக நித்தியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள தனியார் பஸ் ஓட்டுனர்கள் பலர் ஹாரனை பொருத்தி சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது. இதையடுத்து இவர் யாருக்கும் சொல்லாமல் அதிரடியாக பஸ் ஸ்டாண்டுக்குள் ரெய்டு சென்றார். அங்கிருந்த தனியார் பஸ்களை எல்லாம் நிறுத்தி அவற்றை சோதனை செய்தார். அதில் பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஏர்ஹாரங்களை கண்டுபிடித்து அவற்றை அகற்றினார்.

rasipuram rto airhorn raid

இப்படியாக வரிசையாக நின்று கொண்டிருந்த பஸ்களில் எல்லாம் சோதனை மேற்கொண்டு ஹாரனை அப்புறப்படுத்தினார். இப்படியாக அப்புறப்படுத்தப்பட்டனை பஸ்ஸின் டயருக்கு அடியிலேயே வைத்து அந்த பஸ் ஓட்டுனரையே அந்த ஏர்ஹாரன் மீது ஏற்ற சொல்லி அதை அழித்தார். இந்நிலையில் பஸ்களில் ஏன் ஏர்ஹாரன் பொருத்தப்படகூடாது என்ற விளக்கத்தை அங்கிருந்த டிரைவர் ஒருவருக்கு ஆர்டிஓ நித்தியா விளக்கினார்.

பஸ்களில் பெரும்பாலும் ஏர் பிரேக்குகள் தான் பொருத்தப்பட்டிருக்கும்0 அதாவது பஸ்ஸில் பிரேக் பெடலை டிரைவர் அழுத்தியவுடன் பிரேக் சேம்பரில் ஏர் நிரம்பி அந்த பிரேக் பேடை பிரேக் பிடிக்கும் பொசிஷனுக்கு மாற்றும். இப்படியாக பிரேக்கிற்கு ஏர் வழங்குவதற்காக ஏர் சிலிண்டர் ஒன்றும் இருக்கும்.

rasipuram rto airhorn raid

பஸ்ஸில் ஏர் ஹாரனை பொருத்தினால் பஸ்ஸில் உள்ள ஏர் சிலிண்டரில் இருந்து தான் காற்று வரும். இப்படியாக ஏர் ஹாரன் அதிகமாக பயன்படுத்தும் போது சிலிண்டரில் உள்ள காற்றின் அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. காற்றின் அழுத்தம் குறைந்தால் பிரேக் பிடிக்கும் போது போதுமான அளவு அழுத்தம் பிரேக்குக்கு கிடைக்காமல் சரியாக பிரேக் பிடிக்காமல் கூட போகலாம். இதனால் வாகனங்களில் பொருத்த சட்ட ரீதியிலாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை விளக்கமாக எடுத்துச் சொல்லிய ஆர்டிஓ நித்தியா அங்கிருந்த தனியார் பஸ்களில் உள்ள ஏர் ஹாரன்களை எல்லாம் அப்புறப்படுத்தினார். அப்பொழுது அப்பகுதி வழியாக வந்த பள்ளி பஸ் ஒன்றை நிறுத்தி அதன் அதை சோதனை செய்தபோது அதில் ஏர் ஹாரன் பொருத்தப்படாமல் சாதாரண எலக்ட்ரிக் ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது. இது போன்று தான் வாகனத்தில் ஹாரன்களை பொருத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

தனியார் பஸ் ஓட்டுனர்கள் பலர் இப்படியாக ஹாரன்களை ராகத்தில் அடித்து அங்கிருப்பவர்களை எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொள்வது நீண்ட கால பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு கொண்டுவரும் விதமாக ராசிபுரம் ஆர்டிஓ நித்தியா களத்தில் இறங்கி ரெய்டு நடத்தியது தற்போது பஸ் ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும். நிச்சயம் ஆர்டிஓ நித்யாவின் முயற்சியை நாம் பாராட்டியாக வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் ஏர் ஹாரன் பொருத்துவது ஒலி மாசு மட்டுமல்லாமல் அது வாகனத்தின் பிரேக்கிங் திறனையும் குறைக்கும் வாய்ப்பு இருப்பதால் இதை நிச்சயம் வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது. பெரும்பாலான பஸ்களில் யார் காரணம் தான் பொருத்துகிறார்கள். இது பெரும் ஆபத்திற்கு கொண்டு செல்லும் விஷயமாகும். இதனால் பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ்ஸில் உள்ள ஏர்காரனை அப்புறப்படுத்துவதை சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 14, 2023, 13:57 [IST]
English summary
Women rto inspector removes bus horns at rasipuram
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X