ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டீட்டு போறது யார்னு பாருங்க! வீடியோவை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கும் நெட்டிசன்கள்
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கில், 2 பெண்கள் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு பெண் பைக்கை ஓட்ட, மற்றொரு பெண் பின்னால் அமர்ந்து பயணம் செய்து கொண்டுள்ளார்.
பெண்கள் பைக் ஓட்டுவதெல்லாம் தற்போது சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டதுதான். எனவே இதில் என்ன ஆச்சரியம்? என நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆச்சரியம் இருக்கிறது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் பயணம் செய்த 2 பெண்களும் பாரம்பரிய முறைப்படி சேலை அணிந்துள்ளனர்.

பெண்கள் சேலை அணிந்து கொண்டு பைக் ஓட்டும் காட்சிகளை பார்ப்பது என்பது உண்மையிலேயே அரிதான ஒரு விஷயம்தான். ஆனால் 2 விஷயங்களை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த வீடியோவில் நாம் பார்க்கும் 2 பெண்களுமே ஹெல்மெட் அணியவில்லை. டூவீலர்களில் பயணம் செய்பவர்களுக்கு ஹெல்மெட்கள்தான் மிகவும் முக்கியமான பாதுகாப்பு உபகரணம் ஆகும்.
ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த நிறைய பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்தது தொடர்பான செய்திகளை நாம் கேள்விபட்டுள்ளோம். தலையில் அடிபடுவதே இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. இருப்பினும் இன்னமும் கூட நிறைய பேர் ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களை இயக்கி கொண்டுள்ளனர் என்பது வேதனையான ஒரு விஷயம்தான்.

ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களுக்கு அரசு அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும். எனவே அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க வேண்டும் எனவும், சாலை விபத்துக்களின்போது உயிரிழப்பு அபாயங்களை குறைக்க வேண்டும் எனவும் நினைப்பவர்கள், ஹெல்மெட் அணிந்து கொண்டு டூவீலர்களில் பயணம் செய்யுங்கள்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் சேலை. சேலை போன்ற உடைகள் டூவீலர்களின் செயின் மற்றும் வீல்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது சாலை விபத்துக்களை ஏற்படுத்தலாம். கடந்த காலங்களில் செயின் மற்றும் வீல்களில் சேலைகள் சிக்கிய காரணத்தால் ஏராளமான சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே சேலை போன்ற உடைகளை அணிந்து கொண்டு டூவீலர்களில் பயணம் செய்யும்போது கவனமாக இருங்கள். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்த 2 பெண்களும் பயணம் செய்தது, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ஆகும். இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பைக்குகளில் ஒன்றாக உள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.93 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 2.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சேலை நமது பாரம்பரிய உடையாக இருந்தாலும் கூட, அது பைக் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். சேலை அணிந்து கொண்டு பைக் ஓட்டுவதில் அசௌகரியம் மட்டுமல்லாது, ஆபத்தும் உள்ளது. எனவே முடிந்தவரை சேலை அணிந்து கொண்டு பைக் ஓட்ட வேண்டாம். சேலை அணிந்து கொண்டு டூவீலர்களில் பயணிப்பதை தவிர்ப்பதும் கூட நல்லதுதான்.


Click it and Unblock the Notifications








