ரீல்ஸ் வீடியோவுக்கு ஆசைப்பட்டு இப்படி போலீஸ்கிட்ட மாட்டிக்கிச்சே! ரூ16,500 அபராதம் போட்டு தீட்டீட்டாங்க!

மணப்பெண் போல ஆடையணிந்து கார் பானட்டில் அமர்ந்தபடி ரோட்டில் ஊர்வலமாகச் சென்று ரீல்ஸ் எடுத்த பெண்ணிற்கு ரூ16,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவரது ரீல்ஸ் வைரலான சில மணி நேரங்களிலேயே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதே பெண் ஹெல்மெட் அணியாமலும் வாகனம் ஓட்டியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தற்போது சமூகவலைத்தள மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. குறிப்பாக அதிகமான வியூஸ்கள் மற்றும் லைக்ஸ்களை பெற வேண்டும் என்பதற்காக வித்தியாச வித்தியாசமான வீடியோக்களை மக்கள் எடுக்கத் துவங்கிவிட்டனர். இதன் மூலம் கிடைக்கும் ஒரு புகழ் தற்போது போதையாகப் பல இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்காகச் சிலர் சட்டவிரோத செயல்களைச் செய்து சிக்கலிலும் மாட்டிக்கொள்கின்றனர். இப்படியாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

bride on bonnet viral video

சமீபத்தில் உ.பி மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஆலப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வார்னிகா, இவருக்கு இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் புகழ் பெற வேண்டும் என் ஆசை இருந்தது. இதனால் வித விதமாக ஆடைகள் அணிந்த மேக்கப் போட்டு வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருவார். இவர் சமீபத்தில் அதிகமான லைக்ஸ்கள்பெற வேண்டும் என வித்தியாசமாக வீடியோ எடுக்க யோசித்தார்.

இதற்காக இவர் மணப்பெண் போல ஆடை அணிந்து அலங்காரம் செய்து போஷ் சிவில் லைன்ஸ் ஏரியாவில் ஒரு டாடா சஃபாரி ஸ்டிரோம் எஸ்யூவி காரில் காரின் பானட்டில் அமர்ந்து நடு ரோட்டில் ஊர்வலமாகச் சென்றுள்ளார். இதை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் எடுத்து வெளியிட்டார். இது மட்டுமல்ல மற்றொரு வீடியோவில் இவர் மணப்பெண் அலங்காரத்தில் தலையில் ஹெல்மெட் அணியாமல் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டியபடி சென்றார்.

இந்த இரண்டு வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட சில மணி நேரங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதும். அப்பகுதியில் உள்ள போலீசாருக்கும் தெரியவந்தது. அவர்கள் இது குறித்து விசாரித்த போது இந்த பெண் வார்னிகா, இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக இதைச் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த பெண்ணிற்கு காரின் பானட்டில் அமர்ந்து பயணித்ததற்காக ரூ15 ஆயிரமும், ஹெல்மெட் இல்லாமல் சென்றதற்கு ரூ1500 அபராதமாக விதித்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த துணை ஆய்வாளர் அமீத் சிங் வார்னிகாவிற்கு இந்த அபராதத்தை விதித்து அதற்கான செல்லானை வழங்கினார். இதில் அவர் காரின் பானட்டில் அமர்ந்து பயணிக்கும் படியான வீடியோ கடந்த 16ம் தேதி எடுக்கப்பட்டது எனவும், ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் பயணித்தது 2 மாதங்களுக்கு முன்பு எனவும் தெரியவந்துள்ளது.

காரின் பானட்டில் அமர்ந்து பயணிப்பது ஆபத்தானது. இப்படியாகப் பயணித்தால் விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பானட்டில் ஒரு நபர் அமர்ந்திருக்கும் போது திடீரென காரின் டிரைவ் பிரேக் அடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அவர் பிரேக் பிரேக்கும் போது காரின் பானட்டில் அமர்ந்திருப்பவர் கீழே விழக் கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவருக்கு உயிரே போகும் அபாயம் கூட இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆன்லைனில் டிரெண்டாக வேண்டும் என்பதற்காகப் பலர் கார் பைக்குகளை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இது மற்றவர்களுக்கு மோசமான உதாரணமாகிப்போகும் என்பது மட்டுமல்ல இதைச் செய்வதால் ஆபத்தும் அதிகமாக இருக்கிறது. சமூகவலைத்தள புகழுக்காக இப்படியான ரிஸ்க்களை எடுப்பதை யூடியூபர்கள் தவிர்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 12:40 [IST]
English summary
Women with bridal outfit rides on tata safari suv bonet for instagram reel video gone viral
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+