அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம், இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்தது?

தனியார் நிறுவனம் நடத்தப்பட்ட ஆய்வில் பெரு நகரங்களில் பயன்படுத்திய கார்களை அதிகமாகப் பெண்கள் வாங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்த முழு விபரத்தைக் காணலாம் வாருங்கள்.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

இந்திய மட்டுமல்ல உலகம் முழுவதும் கணக்கிட்டாலும் கூட வாகனம் ஓட்டுவது பெண்களை விட ஆண்கள்தான் அதிகமாக இருப்பார்கள். ஆட்டோமொபைல் துறையே ஆண்களால் நிரம்பிய துறையாக இருந்து வருகிறது. இங்குப் பெண்களின் பங்கு மிகக்குறைவாகவே இருக்கிறது. இருந்தாலும் சமீப காலமாக ஆட்டோமொபைல் துறையில் பெண்கள் அதிகமாகி வருகின்றனர்.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

குறிப்பாக ஓலா நிறுவனம் தனது தயாரிப்பு ஆலையை முழுவதும் பெண்களை வைத்து நடத்தி வருகிறது. இப்படியாக ஆட்டோமொபைல் துறையில் பெண்களின் பங்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பயன்படுத்திய கார்களை பெண்கள் அதிகம் விரும்பி வாங்கி வருவது தெரியவந்துள்ளது.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

பயன்படுத்திய கார்களை விற்பனை செய்யும் அக்ரிகேட்டர் ஸிபின்னி ஷோஸ், இவர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தினர். அந்த ஆய்வின் படி, இந்த 2022ம் ஆண்டு பயன்படுத்திய கார்களை வாங்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் டயர்1 மற்றும் டயர் 2 நகரங்களில் உள்ள பயன்படுத்திய கார்களை வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த 2022ம் ஆண்டு முதல் 6 மாதத்தில் பயன்படுத்திய கார்களை வாங்கும் பெண்களின் சதவீதம் 28 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

குறிப்பாக இந்த ஆய்வில் 30 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களே அதிகமாக கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும்,அவர்கள் பெரும்பாலும் 5 ஆண்டுகளுக்கும் குறைவான பழைய ஆட்டோமெட்டிக் பெட்ரோல் கார்களைவாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

சமீப காலமாகப் பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் பெற்று வருகின்றனர். அதனால் அதன் வெளிப்பாடாகவே பெண்கள் தனியாக கார்களை வாங்கத் துவங்கிவிட்டனர். மேலும் பெண்களுக்கு பொது போக்குவரத்தை விடச் சொந்தமாக வாகனங்களில் தனிக்கான இடத்திற்குள் பயணிப்பதைத் தான் விரும்புகின்றனர்.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

இப்படியாகப் பெண்கள் கார் வாங்குவது பெரு நகரங்களான டில்லி என்சிஆர், ஹைத்திராபாத், பெங்களூரு, ஆகிய நகரங்களில் அதிகமாக இருக்கிறது. அதே போல சில்வர் மற்றும் சிவப்பு நிற கார்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். என இந்த ஆய்வு சொல்கிறது.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

எந்த கார்களை வாங்குகிறார்கள் என்ற தேர்விலும் பெண்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார்கள். பயன்படுத்திய கார்களை வாங்கும் போதும் பெண்கள் ஹூண்டாய் ஐ20, டாடா நெக்ஸான், ரெனால்ட் க்விட், மாருதி பலேனோ, ஸ்விஃப்ட் போன்ற கார்களை வாங்குகின்றனர்.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

பெண்கள் அதிகமாக ஹேட்ச் பேக் கார்களையே விரும்புகின்றனர். அதற்கு அடுத்தது தான் எஸ்யூவி கார்கள் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது போக தற்போது ஆட்டோமொபைல் உலகில் செமி கண்டெக்டர் தட்டுப்பாட்டால் புதிய கார்களுக்கு தட்டு ஏற்பட்டுள்ளது.

அப்படிப் போடு... கொரோனாக்கு பிறகு பெண்கள் அதிகமாக கார் வாங்குகிறார்களாம். . . இப்படி ஒரு மாற்றம் எப்படி நடந்துச்சு?

அதன் காரணமாக ஒட்டு மொத்த பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட் அதிகரித்துள்ளது. என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Womens showing interesting used cars spinny research tells a lot
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X