World Costliest Number Plate ஏலம் போனது! எவ்வளவுன்னு தெரிஞ்சா ஒரு நிமிஷம் ஸ்டன் ஆகிடுவீங்க!

துபாயில் சமீபத்தில் கார்களுக்கான நம்பர் பிளேட் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் P7 என்ற நம்பர் பிளேட் அதிக விலைக்கு ஏலம் போய், உலகிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட நம்பர் பிளேட் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த ஏலம் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

தற்போது ரம்ஜான் காலம் என்பதால் துபாய் அரசு உலக பட்டினியைப் போக்க முடிவு செய்தது. அதற்காக 100 கோடி உணவுகளைத் தயாரித்து வழங்கும் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் என்பவர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

World Costliest Number Plate

அதில் ஒன்று தான் அந்நாட்டில் உள்ள கார்களுக்கு ஃபேன்ஸியான நம்பர் பிளேட்களை ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த நம்பர் பிளேட்களை ஏலம் விடும் பொறுப்பு எமிரேட்ஸ் ஆக்ஷன் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ஏலத்தை நடத்தினர்.

இந்த ஏலத்தில் ஏகப்பட்ட நம்பர் பிளேட்கள் இடம்பெற்றன 10 இரட்டை இலக்க நம்பர்களான AA19,AA22,AA80,O71,X36,W78,H31,Z37,J57 மற்றும் N41 ஆகிய நம்பர் பிளேட்டும், மற்ற ஸ்பெஷல் நம்பர் பிளேட்களான Y900,Q22222 ஆகிய நம்பர்களும் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டது.

இந்த ஏலத்தில் AA19 என்ற நம்பர் பிளேட் 4.9 மில்லியன் திராம்ஸ் (இந்திய மதிப்பில் ரூ10.92 கோடி)க்கு ஏலம் போனது, அடுத்ததாக O 71 என்ற நம்பர் பிளேட் 2.150 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ4.79 கோடிக்கு ஏலம் போனது. Q22222 என்ற நம்பர் பிளேட்975,000 திராம்ஸ், அதாவது ரூ 2.17 கோடிக்கு ஏலம் போனது.

இதுவரை உலகிலேயே அதிக விலையில் ஏலம் போனது கடந்த 2008ம் ஏலம் போன 1ம் நம்பர் பிளேட் தான். அந்த நம்பர் பிளேட் 52.2 மில்லியன் திராம்ஸ், அதாவது ரூ116.3 கோடி என்ற விலையில் ஏலம் போனது. இந்நிலையில் இந்த ஏலத்தில் அதையும் தாண்டி அதிகமான விலையில் ஏலம் போயுள்ளது.

இந்த ஏலத்தில் P7 என்ற நம்பர் பிளேட் 55 மில்லியன் திராம்ஸ் என்ற விலையில் ஏலம் போயுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ122.6 கோடிக்கு இந்த ஏலம் போயுள்ளது. இது தான் தற்போது உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன நம்பர் பிளேட் என கின்னஸ் சாதனையும் படைத்துள்ளது.

இந்த நம்பர் பிளேட்டை யார் வாங்கியது என்ற பெயரை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. ஆனால் இந்த ஏலம் மூலம் வசூலான பணம் முழுவதும் அந்நாட்டின் 100 கோடி உணவு நன்கொடை திட்டத்திற்காக வழங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இந்த ஏலத்துடன் சேர்த்து செல்போன் பேன்ஸி நம்பர் ஏலமும் நடத்தப்பட்டது. அதன் மூலம் துபாய் அரசுக்கு 53 மில்லியன் திராம்ஸ் பணம் சேர்த்துள்ளது. இருப்பதிலேயே அதிகமாக ஒரு போன் நம்பர் 2 மில்லியன் திராம்ஸ்க்கு ஏலம் போயுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 10, 2023, 9:16 [IST]
English summary
World costliest number plate auctioned in dubai set guinness world record
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+