நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களும்... அவர்களது அசத்தலான கார்களும்!

கால் பந்தாட்ட ஜூரம் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அது டிரைவ்ஸ்பார்க் தளத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஜூரத்தின் விளைவுதான் இந்த செய்தித் தொகுப்பு.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜொலிக்கும் நட்சத்திர வீரர்களின் மனம் கவர்ந்த கார்களின் பட்டியலை தொகுத்துள்ளோம். நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களுக்கு கோடியாய் கோடியாய் சம்பளம் பெறுகின்றனர். அப்படி அவர்கள் வாங்கும் சம்பளத்தில் சரி பகுதியை சொகுசு கார்களை வாங்குவதிலேயே குறியாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 10 நட்சத்திர வீரர்களின் கார்களின் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

மைல் ஜெடினாக்

மைல் ஜெடினாக்

ஆஸ்திரேலிய கால் பந்து அணித் தலைவர் மைல் ஜெடினாக்கும் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் சி63 ஏஎம்ஜி கார் இருக்கிறது. அவரது கால் வலுவை தாங்கும் விதத்திலேயே 6.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

உலகின் சிறந்த வீரருக்கான விருதை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸியிடம் மஸராட்டி கிரான் டூரிஷ்மோ கார் இருக்கிறது. இந்த காரில் 4.7 லிட்டர் வி8 எஞ்சின் கொண்டது. இதுதவிர, மஸராட்டி குவாட்ரோபோர்ட் மற்றும் டொயோட்டா பிரையஸ் ஆகிய கார்களை வைத்துள்ளார். கால்பந்தாட்ட ஜாம்பவான் இவரை தனது வாரிசாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்ததக்கது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

அதிக சம்பளம் வாங்கும் கால் பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுக்கல் அணியை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் லம்போர்கினி அவென்டேடார் கார் இருக்கிறது. மேலும், ஆடி ஆர்எஸ்5 போன்ற பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். லாஃ பெராரி காரை இவர் ஆர்டர் செய்துள்ளதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

நெய்மர்

நெய்மர்

உலக கோப்பை போட்டியில் கலக்கி வரும் நெய்மார் பிரேசில் அணியின் முக்கிய தூணாக திகழ்கிறார். பிரேசிலின் வெற்றி நெய்மாரின் நெத்தியடி கோல்களிலேயே அமைந்து வருகிறது. இவரிடம் போர்ஷே பனமிரா கார் உள்ளது. மணிக்கு 310 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் கொண்ட இந்த கார் நெய்மாரின் கால் ஜாலங்களுக்கு அசராது என்று கூறலாம்.

டேவிட் வில்லா

டேவிட் வில்லா

ஸ்பெயின் அணியின் அதிரடி வீரரான டேவிட் வில்லாவிடம் கருப்பு நிற போர்ஷே 911 டர்போ கார் இருக்கிறது.

வெய்னி ரூனி

வெய்னி ரூனி

இங்கிலாந்து கால்பந்து அணியின் அடுத்த தலைவராக முன்மொழியப்பட்டு வரும் வெய்னி ரூனியிடம் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி இருக்கிறது. வி8 பொருத்தப்பட்ட இந்த எஸ்யூவி ரூனியின் பராமக்கிரமங்களை எளிதில் சமாளிக்கும் வல்லமை படைத்தது.

ராபின் வான் பெர்சி

ராபின் வான் பெர்சி

நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் ராபின் வான் பெர்சியிடம் போர்ஷே கேயென் டர்போ எஸ்யூவி மாடல் இருக்கிறது. அதிசக்திவாய்ந்த எஞ்சின், ஏர் சஸ்பென்ஷன் போன்ற ஏராளமான சிறப்பம்சங்கள் கேயென் எஸ்யூவியில் ராபின் வான் பெர்சியை கவர்ந்ததாக சொல்லப்படுகிறது.

 மரியோ பலோடெல்லி

மரியோ பலோடெல்லி

தனது வித்தியாசமான சிகை அலங்காரத்தால் உலக அளவில் ஈர்த்த இத்தாலி கால் பந்து அணியின் முன்கள வீரர் மரியோ பலோடெல்லியிடம் ஃபெராரி எஃப்11 பெர்லினேட்டா ஸ்போர்ட்ஸ் கார் இருக்கிறது. இதுதவிர, ஃபெராரி கலிஃபோர்னியா, பென்ட்லீ கான்டினென்டல் சூப்பர்ஸ்போர்ட்ஸ் மற்றும் மஸராட்டி கிரான் டூரிஷ்மோ கார்களும் இருக்கின்றன.

மெசூட் ஓஸில்

மெசூட் ஓஸில்

ஜெர்மனியின் நடுக்கள வீரர் மேசூட் ஓஸில்லிடம் ஃபெராரி 458 இட்டாலியா கார் இருக்கிறது. மெட்டாலிக் கருப்பு வண்ணத்தில் மினுமினுக்கும் இந்த கார்தான் தனது கேரேஜில் இருக்கும் கார்களில் மேசூட்டுக்கு மிகவும் பிடித்தமானதாம்.

டிம் காஹில்

டிம் காஹில்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு கால் பந்து வீரரான டிம் காஹில் சிறந்த முன்கள ஆட்டக்காரர் என்ற பெருமையை பெற்றவர். அவரது வசம் லம்போர்கினி கல்லார்டோ கார் இருக்கிறது. அவரது உத்வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வி10 எஞ்சின் பொருத்தப்பட்ட கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 26, 2014, 11:54 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+