நீங்க நிச்சயமா அடுத்து ஒரு எலெக்ட்ரிக் வண்டிய வாங்கனும்! இல்லன்னே எதிர்காலமே பாழாகிடும்! எப்படி தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5 தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் பெருகி வரும் மாசு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வாழவும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று நாம் பெட்ரோல், டீசல் வாகனங்கள் இந்த உலகிற்கு எவ்வளவு பெரிய மாசு ஏற்படுகின்றன இதை தடுக்க நம்மிடம் இருக்கும் வழிகள் என்னென்ன? மாற்று எரிசக்திக்கு மாறுவதால் நமக்கு கிடைக்கப் போகும் நன்மைகள் என்ன? இது எந்த அளவிற்கு எதிர்கால சந்ததியினருக்கு முக்கியமான விஷயம் என்பதை இங்கு விரிவாக காணப்போகிறோம்.

கடந்த 2010ம் ஆண்டிற்கு பிறகு உலகம் முழுவதும் வாகனங்களை வாங்கி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகமாகி உள்ளது. உலகம் முழுவதும் வாகன பயன்பாடு அதிகரித்ததால் அந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவின் அளவும் அதிகரித்துள்ளது. இந்த மாசு உலகின் சுற்றுச்சூழலை கெடுத்து வருகிறது.
இன்றளவும் உலகில் அதிகமாக விற்பனையாகும் வாகனங்கள் என்றால் அது பெட்ரோல், டீசல் வாகனங்கள் தான். இந்த வாகனங்கள் எரிபொருளை எரித்து முடித்ததும் அதில் இருந்து நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய வாயுக்களை சுற்றுசூழலை கெடுக்கும் மாசுவாக வெளியிடுகிறது.

உலகம் முழுவதும் வாகனங்களில் இருந்து மட்டும் 123 மில்லியன் டன் கார்பன் டையாக்சைடு ஒவ்வொரு ஆண்டும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல பெட்ரோல் டீசலுக்காக நாம் கச்சா எண்ணெயை பயன்படுத்தி வருகிறோம். இந்த கச்சா என்ணெயை எடுப்பது என்பதை சுற்றுச்சூழலுக்கு ஒரு கேடு விளைவிக்கும் ஒரு விஷயமாக தான் இருக்கிறது.
இதற்கிடையில் கடந்த 2019 பாரிசில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல முக்கியமான நாடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பருவநிலை மாற்றத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி வாகனங்களில் மாற்று எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்ய மத்திய அரசு ஊக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மத்திய அரசு பேட்டரி உள்ளிட்ட மாற்று எரிசக்தி வாகனங்களில் விற்பனையை அதிகரிக்க மானியங்களை அறிவித்தது. இந்தியாவில் பேட்டரி தொழில்நுட்பத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மவுசு அதிகரித்தது. தற்போது டூவீலர் செக்மெண்டில் ஸ்கூட்டரில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமான அளவு அதிகமாகி வருகிறது.
அரசுகளும் அரசு பயன்பாட்டில் உள்ள வாகனங்களை எல்லாம் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி வருகின்றது. பெட்ரோல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றும் போது அந்த வாகனங்களில் இருந்து மாசு என்பது வெளியிடாது இதனால் மாசு முற்றிலுமாக குறையும். சுற்றுசூழலுக்கு ஏற்படும் கேடு குறையும்.

எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மாசுக்கு மட்டும் நல்ல விஷயம் அல்ல இதில் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது சொல்லப்போனால் பெட்ரோல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்கள் மக்களுக்கு லாபமாக அமையும். பணத்தை மிச்சப்படுத்தவும் இது உதவும் இதைப் பற்றி சற்று விரிவாக காணலாம்.
பொதுவாக பெட்ரோல் டீசல் வாகனங்களில் இஞ்சின் உட்பட ஏகப்பட்ட சிக்கலான உதிரி பாகங்கள் உள்ளது இதனால் இதன் பராமரிப்பு செலவு அதிகமாக இருக்கும். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களில் உதிரி பாகங்கள் மிகவும் குறைவு. மிக சிம்பிளான மெக்கானிசத்தில் இந்த வாகனங்கள் இயங்குகிறது. இதனால் இதன் பராமரிப்பு செலவு பெட்ரோல் வாகனங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருக்கும்.

பெட்ரோல் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி தான் பயணிக்க வேண்டும். பெட்ரோலின் விலை மிகவும் அதிகம் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் ஏற்றினால் போதும். இதற்கு ஆக கூடிய செலவு கரண்ட் பில் தான். இந்த இரண்டையும் ஒப்பிடும்போது பெட்ரோல் செலவைவிட கரண்ட் பில்லின் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பயணத்திற்கு நாம் செலவு செய்யும் பணமும் குறைவாக இருக்கும்.
எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க பயன்படும் உதிரி பாகங்கள் எல்லாம் ரீசைக்கிள் செய்யக்கூடிய திறனில் தான் தயாரிக்கப்படுகிறது. இதனால் நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஸ்கிராப் செய்தாலும் அதன் உதிரி பாகங்களை எடுத்து வேறு வேறு பொருட்களை செய்து கொள்ள முடியும். இதனால் மூலப்பொருட்களின் தேவையின் அளவு குறையும் இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
சரி எல்லோரும் தங்கள் பெட்ரோல் டீசல் வாகனங்களை விற்றுவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டுமா? என்றால் அது சாத்தியம் இல்லை. ஒருவர் பயன்படுத்தி வரும் பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள் அதன் ஆயுளை இழந்துவிட்டால் அதை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் போது பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஒரு தேர்வாக வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான் சிறந்த முறையாக இருக்கும். ஒரு ஆய்வின் அறிக்கையின் படி 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 721 டன் கார்பன் டை ஆக்சைடு வாகனங்களில் இருந்து வெளியாகும் எனக் கூறுகிறது. இது மிகவும் ஆபத்தான விஷயமாகும்.
எலெக்ட்ரிக் வாகனங்களை தற்போது வாங்குவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் அதன் பேட்டரி விலை தான். ஒரு லித்தியம் அயான் பேட்டரியின் விலையில் 40-60 சதவீதம் தான் அந்த பேட்டரி தயாரிக்கும் செலவாக இருக்கிறது மற்றதெல்லாம் அந்த பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களில் லாபமாக இருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் இந்த லித்தியம் அயான் பேட்டரியின் தயாரிப்பு மிகவும் குறைவுதான். வெளிநாடுகளில் இருந்து தான் இந்த பேட்டரிகள் இருக்கும் வரை செய்யப்படுகிறது. இதை தடுக்க இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பாளர்களை நிறுவ வேண்டும். தற்போது இந்தியாவில் லித்தியம் அயான் கனிமங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதை இந்தியா விரைவில் பயன்படுத்தவிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்து விட்டனர். இது ஒரு நல்ல சமிங்ஞை தான். தொடர்ந்து குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவது மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அரசு மக்களை ஊக்கப்படுத்துவது எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாட்டை அதிகரிக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications
